Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்

Print PDF
தினமணி           01.03.2013

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு  மருத்துவ முகாம்


அரியலூர் நகராட்சி அலுவலக வளாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை, நகர்மன்றத் தலைவர் முருகேசன் தொடக்கி வைத்தார். ஆணையர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

இதில் ரத்த வகை கண்டறிதல், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. முகாமில் அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்றனர்.
Last Updated on Friday, 01 March 2013 10:05
 

குப்பை, கழிவு நீரால் நிரம்பும் வையாபுரி குளத்தில் துர்நாற்றம்

Print PDF
தினமலர்           28.02.2013

குப்பை, கழிவு நீரால் நிரம்பும் வையாபுரி குளத்தில் துர்நாற்றம்

பழநி: பழநி வையாபுரிகுளம் பராமரிப்பின்றி, குப்பையாலும், கழிவுநீரால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. பொதுபணித்துறையோ, நகராட்சி நிர்வாகமோ, குளத்தை தூய்மை செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழநியில் பகலிலும் கொசுத்தொல்லையால் நகரவாசிகள் அவதிப்படுகின்றனர்.பழநி கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்களை வரவேற்கும் தூய்மையான புனிதக் குளமாக இருந்த "வையாபுரி' குளம், தற்போது பழநி நகரின் கழிவுநீர், குப்பையை கொட்டப்படும் இடமாக மாறியுள்ளது.விவசாயத்திற்கு நீர் வழங்கி வரும் இக்குளத்தில், கோழிக்கழிவு கள்,தேங்காய் மட்டைகள், எச்சில் இழைகள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் குவிந்துள்ளது.

அருகேயுள்ள ஆஸ்பத்திரிகள், ஹோட்டல்கள் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் சுற்றுபுறச் சூழல் பாதிக்கப் படுகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பழநி நகர்ப்புறத்தில் பகல் நேரத்தில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

புனித ஸ்தலமான பழநிகோயிலியின் நுழைவுப்பகுதியில் உள்ள, வையாபுரி குளத்தை சுத்தப்படுத்தி, குப்பைகளை அக ற்ற வேண்டும். குளத்தை தூர்வாரி, நிரந்தரமாக தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகரில் துப்புரவு பணியாளர்கள் மூலம் சாக்கடை நீர் தேங்கியுள்ள இடங்கள், வீதிகளில் கொசுமருந்து அடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated on Friday, 01 March 2013 08:02
 

சுகாதார வளாகங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா

Print PDF
தின மணி           27.02.2013

சுகாதார வளாகங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா


விருதுநகர் நகராட்சியில் சுகாதார வளாகங்களின் மராமத்துப் பணிகள் முடிவடைந்த நிலையிலும், இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சியைத் தூய்மைப்படுத்தும் வகையில் பாதாளச் சாக்கடை திட்டம் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்டவைகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், சாலையோரங்களில் பொதுமக்கள் இயற்கை உபாதைகளைக் கழித்து சுகாதாரச் சீர்கேட்டை விளைவிப்பதைத் தடுக்க தனிநபர் கழிப்பறைத் திட்டம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள சுகாதார வளாகங்கள் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தண்ணீர் வசதியின்றியும், செப்டிக் டேங்க் வசதியின்றியும் இருந்தன. இவற்றைச் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில் பாத்திமா நகர், அல்லம்பட்டி, புதுப்பேருந்து நிலையச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 21 சுகாதார வளாகங்களை நகர்ப்புற மேம்பாட்டு நிதி மூலம் சீரமைப்பதற்கு, ஒவ்வொன்றுக்கும் சேதத்தின் தன்மைக்கேற்ப நிதி ஒதுக்கீடு ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் நடந்து முடிந்தும், இதுவரையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விருதுநகர் நகராட்சி தலைவர் மா. சாந்தி கூறுகையில், நகராட்சிப் பகுதியில் சேதமடைந்த சுகாதார வளாகங்களில் மராமத்துப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், இந்த வளாகங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் மோட்டார் ஆகியவை பொறுத்தும் பணியும், பாதாளச் சாக்கடை இணைப்புப் பணி ஆகியவை முடியாமல் இருக்கின்றன். இப்பணிகள் முடிந்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:32
 


Page 90 of 519