Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அகழிக் குளம் தூய்மை செய்யும் பணி தொடக்கம்

Print PDF
தினமணி           04.09.2012

அகழிக் குளம் தூய்மை செய்யும் பணி தொடக்கம்
 
திண்டிவனம், செப். 3: திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியில் உள்ள பழமைவாய்ந்த அகழிக் குளம் தூய்மைப்படுத்தும் பணி நகராட்சி நிர்வாகத்தால் ஞாயிற்றுகிழமை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகரில் உள்ள 24-வது வார்டில் அகழிக் குளம் அமைந்துள்ளது. இது மிகவும் பழமைவாய்ந்த குளமாகும். ஒரு காலத்தில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் இக்குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் அப்பகுதி மக்கள் தங்களின் கழிவுநீரை இக்குளத்தில் கலக்க செய்து தற்போது மிகவும் மாசுபடிந்த குளமாக மாறிவிட்டது. மேலும் இக்குளத்தில் தற்போது ஆகாயத் தாமரை படர்ந்து முற்றிலும் நீரின் தன்மை மாசடைந்துள்ளது.

இந்நிலையில் இக்குளத்தை தூய்மைப்படுத்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் என்.விஜயகுமார், நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்ததன்பேரில் தூய்மைப்படுத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

நகராட்சிப் பணியாளர்கள் மூலம் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் குளத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தங்களின் கழிவுகளை குளத்தில் செலுத்துவதைத் தடை செய்ய சுகாதாரப் பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் பாலசந்திரன், முரளிதாஸ், நகர அவைத் தலைவர் மணிமாறன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

சென்னை சம்பவம் எதிரொலி அரசு மருத்துவமனையில் எலி வேட்டை

Print PDF

தினகரன்             03.09.2012

சென்னை சம்பவம் எதிரொலி அரசு மருத்துவமனையில் எலி வேட்டை

திருப்பூர்,:  திருப்பூர் அரசு மருத்துவமனையில் எலி தொல்லையை தடுக்கும் வகையில், 10 இடங்களில் எலி கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் முகத்தை எலி கடித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் எலிகள், நாய்கள், பூனைகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக நாய், பூனை, எலி வேட்டை வேகமடைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாய் பிடிக்கும் வண்டியுடன் அரசு மருத்துவமனைக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவமனை முழுவதும் வலம் வந்து, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு பகுதி உள்ளிட்ட மருத்துவமனையின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 8 தெருநாய்களை பிடித்து சென்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் எலி தொந்தரவும் உள்ளதால், எலிகளை பிடிக்க 10 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சுமார் 500 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்பட ஏராளமான பகுதிகளில் எலிகள் சுற்றித்திருகின்றன. ஆகவே நேற்று எலிகளை பிடிக்க 10 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் மருத்துவமனை வளாகத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் 8 நாய்கள் பிடிக்கப்பட்ட போதும், இன்னும் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே இந்த நாய்களையும் பிடிக்க வேண்டும் என அங்கு வரும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தெருநாய்களுக்கு தனி இடம் திண்டுக்கல் நகராட்சி முடிவு

Print PDF

தினமலர்                      03.09.2012

தெருநாய்களுக்கு தனி இடம் திண்டுக்கல் நகராட்சி முடிவு

திண்டுக்கல்:ஆர்.எம்.காலனி சுடுகாடு வளாகத்தில் தெரு நாய்களுக்காக தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் நகராட்சி பகுதியில், தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் சிலர் தெருநாய்களுக்கு ஆதரவாக இருப்பதால் அதிக எண்ணிக்கை காணப்படுகிறது.இதனால் ஆர்.எம்., காலனிபகுதியில், மக்கள் ரோடுகளை கடந்து செல்லவே அச்சப்படும் அளவிற்கு உலா வருகின்றன.தெருநாய்களை அகற்ற நகராட்சி தலைவர் மருதராஜிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.ஆர்.எம்.காலனி பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் னைத்திற்கும் வெறிநோய் தடுப்பு ஊசி போடப்பட்டிருப்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் கருத்து தெரிவித்திருந்தனர். தெருநாய்கள் தொல்லையை தவிர்க்க, சுடுகாடு வளாகத்தில் காம்பவுண்ட் சுவருடன் தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தெருநாய்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் இந்த வளாகத்தில் வைத்து அவற்றிற்கு உணவளித்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 03 September 2012 07:02
 


Page 96 of 519