Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவு பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்

Print PDF

தினகரன்           18.08.2012

துப்புரவு பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்

சோழவந்தான், : துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் சோழவந்தான் பேரூராட்சியில் நடந்தது.சோழவந்தான் பேரூராட்சி, மதுரை லைப் கேர் மருத்துவமனை இணைந்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. சுதந்திர தின விழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாட்ஷா தலைமை வகித்தார்.துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் பாண்டியம்மாள் ராமு முகாமை துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.அக்கு பஞ்சர் முகாம்: வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது பதினெண் சித்தர் பீடம். பதினெண் சித்தர் பீடம் டிரஸ்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பீடத்திற்கான மகா அபிஷேகம், ,அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதை முன்னிட்டு, இலவச அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் ராணி முன்னிலை வகித்தார். டிரஸ்ட் சேர்மன் நாராயணன் முகாமை துவக்கி வைத்தார். ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 18 August 2012 09:44
 

உதகை ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கப்படும்: நகராட்சிகளின் மண்டல இயக்குநர்

Print PDF

தினமணி            18.08.2012

உதகை ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கப்படும்: நகராட்சிகளின் மண்டல இயக்குநர்

உதகை, ஆக 17: உதகை ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கப்படும் என, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

 உதகை நகரின் பிரதான கழிவுநீர்க் கால்வாயான கோடப்பமந்து கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர் உதகை ஏரியில் கலந்து ஏரியே மாசடைந்துள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் சங்கர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஏற்கனவே ஆய்வு நடத்தியிருந்தனர்.

 இதைத்தொடர்ந்து நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் உதகையில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிவகுமார், நகர்மன்ற பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:

 உதகை நகரின் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாயிலிருந்து உதகை ஏரிக்குள் செல்வது முழுமையாக தடுக்கப்படும். கழிவுநீர் அனைத்தும் காந்தல் பகுதியிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரே வெளியேற்றப்படும். கோடப்பமந்து கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 உதகை நகரில் திறந்தவெளிக் கால்வாய்களிலிருந்து கழிவுநீர் ஏரிக்குள் செல்லாமலி ருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சுமார் 6,000 கட்டடங்கள் இணைப்பு பெறாமல் கழிவுநீரை திறந்தவெளியில் விடுகின்றனர். இவை அனைத்தும் பாதாள சாக்கடை குழாய்களில் இணைக்கப்படும். இதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களிடமிருந்து தவணை மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழக அரசின் பசுமை குடியிருப்பு திட்டத்தின் கீழான வீடுகளுக்கும், அரசின் சிறப்பு திட்டங்களின் வீடுகளுக்கும் இலவசமாகவே கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படுமெனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Last Updated on Saturday, 18 August 2012 09:07
 

கழிவறை இணைப்புகளை பாதாள சாக்கடையில் விட சிறப்பு சலுகை

Print PDF

தினமலர்     18.08.2012

கழிவறை இணைப்புகளை பாதாள சாக்கடையில் விட சிறப்பு சலுகை

ஊட்டி:ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் திறந்தவெளியில் விடப்பட்டுள்ள வீடுகளின் கழிவறை இணைப்புகளை பாதாள சாக்கடைக்குள் விட சிறப்பு சலுகையுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 27 வார்டு மக்களின் கழிவறை மற்றும் கழிவுநீர் ஊட்டி நகரின் மத்தியில் ஓடும் கோடப்பமந்து கால்வாயில் செல்கிறது. தவிர, மழைநீரும் இக்கால்வாயில் செல்லும் நிலையில், ஊட்டி ஏரியில் தான் இவை அனைத்தும் கலக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு அதிகரித்து, ஏரியின் ஒரு பகுதி கழிவுகளால் சூழ்ந்துள்ளது. கால்வாயில் கழிவுகள் செல்வதை தவிர்க்கும் நோக்கில் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு, வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களின் கழிப்பறை, சமையலறை கழிவுகள், குளியலறை நீர் ஆகியவற்றை வெளியேற்றும் இணைப்புகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டன. இதன் மூலம் கழிவுகள் கலக்காத நீர் மட்டுமே கோடப்பமந்து கால்வாயில் செல்லும், என எதிர்பார்க்கப்பட்டது.

இணைப்பை சீராக்க திட்டம்கோடப்பமந்து கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும், கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன; இதில்,"6,000 வீடுகளின் கழிவறை மற்றும் கழிவுநீர் வெளியேறும் இணைப்புகள், கோடப்பமந்து கால்வாயில் திறந்த வெளியில் விடப்பட்டுள்ளன,' என நகராட்சி நிர்வாகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், திறந்தவெளியில் செல்லும் கழிவுநீர் கால்வாயை பாதாள சாக்கடைக்குள் விடுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.ஊட்டி நகராட்சி கமிஷன் சிவகுமார் கூறியதாவது;திறந்த வெளியிலும், ஏரி நீரிலும் மனித கழிவுகள் தேங்குவதால் பலவித நோய்கள் வரும் என்பதால் திறந்தவெளியில் கழிவுகள் கட்டப்படுவதை தடுக்க மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது.
 
ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் திறந்தவெளியில் கழிப்பறை மற்றும் கழிவறை கழிவுகளின் இணைப்பை பலர் விட்டுள்ளனர்; இவர்கள், பாதாள சாக்கடையில் தங்களது இணைப்புகளை விட நகராட்சியில், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்; ஒரே சமயத்தில் 3,000 ரூபாய் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் ஆறு மாத தவணையில் தலா 500 வீதம் செலுத்தி, தங்களது கழிவுநீர் இணைப்பை, பாதாள சாக்கடைக்குள் விடுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நகராட்சி எல்லைக்குள், மாநில அரசின் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு நகராட்சி சார்பில் கழிவுநீர் இணைப்புகளை பாதாள சாக்கடைக்குள் விடும் பணியை இலவசமாகவே செய்து கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, சிவகுமார் கூறினார்.

Last Updated on Saturday, 18 August 2012 06:17
 


Page 100 of 519