Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகரில் சிறப்பு தூய்மை பணி நல்ல பலன் அளிக்கிறது

Print PDF

தினகரன்             13.08.2012

நகரில் சிறப்பு தூய்மை பணி நல்ல பலன் அளிக்கிறது

கோவை, : நகரில் சிறப்பு தூய்மை பணி பலன் அளிக்கிறது என மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தூய்மை பணியை சிறப்பாக செய்வதற்கு ‘சிறப்பு தூய்மை குழு‘ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தினமும் ஒரு வார்டு வீதம் தேர்வுசெய்து சிறப்பு தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். சாக்கடை சுத்தம் செய்தால், சாலையோர குப்பைகளை அகற்றுதல், சாலையோர சிறு சிறு ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மழைநீர் வடிகால் அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட வார்டுகளில் இப்பணி நிறைவடைந்துள்ளது. சிறப்பு தூய்மை பணி எப்படி நடக்கிறது, இத்திட்டத்தால் மக்களுக்கு உரிய பலன் கிடைக்கிறதா என்பது பற்றி ஆய்வுசெய்ய மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்கூட்டம் நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கி பேசியதாவது:

சிறப்பு தூய்மை பணி திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இக்குழுவின் நோக்கம் மக்கள் பயன்பெறும் வகையில் துப்புரவு பணிகளை சிறப்பாக செய்வது. இப்பணி 100 சதவீத பலன் அளிக்கிறது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூய்மை பணி மட்டுமின்றி, அவ்வப்போது சிறு சிறு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுவதால், நாளடைவில் பெரிய ஆக்கிரமிப்புகள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. எனவே, சிறப்பு தூய்மை குழுவின் பணி இன்னும் விரிவுபடுத்தப்படும். மிக விரைவில் 100 வார்டுகளிலும் இப்பணி செய்து முடிக்கப்படும்.இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி பேசினார்.
Last Updated on Tuesday, 14 August 2012 06:06
 

சுகாதாரமற்ற குடிநீர்: 100 "கேன்கள்' பறிமுதல்

Print PDF

தினமலர்           12.08.2012

சுகாதாரமற்ற குடிநீர்: 100 "கேன்கள்' பறிமுதல்

சென்னை : திருவொற்றியூரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 100 "கேன்கள்'
பறிமுதல் செய்யப்பட்டன.திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்ற "கேன்களில்' குடி நீர் தரப்படுவதாக புகார் வந்தது.சென்னை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அருள்தாஸ் ற்றும் ஊழியர்கள், திருவொற்றி யூர் சுங்கச்சாவடி முதல் எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கடைகள் மற்றும் குடி நீர் "கேன்கள்' ஏற்றப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.அதில், அழுக்குப் படிந்து மோசமான நிலையில் இருந்த 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட "கேன்கள்' மூலம் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, திருவொற்றியூர் காலடிப்பேட்டை, தேரடி மற்றும் விம்கோ நகரில் 100 "கேன்கள்' பறிமுதல் செய்யப்பட்டன. 

Last Updated on Monday, 13 August 2012 06:22
 

பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்

Print PDF

தினமணி                10.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்

பவானி, ஆக. 9: சித்தோட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

÷சித்தோடு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவியர் பங்கேற்று பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையும் தீமைகள், மக்கும் பொருள்களைப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டபடியும் சென்றனர்.

இப்பேரணியை பேரூராட்சித் தலைவர் ஆர்.வரதராஜன் தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் செல்வன், துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 102 of 519