Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரமற்ற குடிநீர் வழங்க தடை

Print PDF

தினமலர்    09.08.2012

சுகாதாரமற்ற குடிநீர் வழங்க தடை

வேடசந்தூர் : வேடசந்தூரில் நகரில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு சுகாதார துறை தடை விதித்துள்ளது.வேடசந்தூர் நகருக்கு குங்குமகாளியம்மன் கோயில் அருகில் உள்ள கிணற்றிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.

கிணற்றை மூடியிருந்த தகரம் உடைந்து குப்பைகள் நிறைந்து அசுத்தமாக உள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதந்தது. இதனால் சுகாதார துறையினர் கிணற்று நீர் முழுவதையும் வெளியேற்றி சுத்தப்படுத்திதான் குடிநீர் வழங்க வேண்டும்.மேலும் தாங்கள் ஆய்வு செய்த பின்தான் குடிநீர் வழங்க உத்திரவிட்டது. அழகாபுரி அணைப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் நீரையும் பரிசோதனை செய்த பின்பு வழங்கவும் உத்திரவிட்டுள்ளனர்.

 

புதுக்கோட்டையில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

Print PDF

தினமலர்                    08.08.2012

புதுக்கோட்டையில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 100 ஆண்டுக்கும் மேலாக கவனிப்பாரின்றி கிடப்பில் போடப்பட்ட குளங்கள் தூர்வாரும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.

மன்னர் ஆட்சியின்போது புதுக்கோட்டை நகரமைப்பை வடிவமைத்த நகர சபையினர், மழைநீரை சேமித்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காகவும் நகரைச் சுற்றி 40 குளங்களையும் உருவாக்கினர்.மழை தண்ணீர் தங்கு தடையின்றி நேராக குளங்களுக்கு சென்றுசேரும் விதமாக தோரண வாய்க்கால்களும், குளங்கள் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் அடுத்த குளத்துக்கு சென்றுசேரும் விதமாக இணைப்பு வடிகாலுடன் சங்கிலித்தொடர் போன்ற அமைப்பையும் உருவாக்கினர். இதன்மூலம் புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.மக்கள் தொகை அதிகரிக்கத் துவங்கியதால் நகரில் இடநெருக்கடியும் அதிகரிக்கத் துவங்கியது. வரத்துவாரிகள், தோரண வாய்க்கால்கள் அனைத்தும் படிப்படியாக ஆக்ரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறியது.

இதன்காரணமாக மழை காலத்திலும் தண்ணீர் வரத்து தடைபட்டதால் குளங்கள் அனைத்தும் மணல் நிரம்பி தூர்க்கத் துவங்கியது. ஆரம்பத்தில் வரத்துவாரிகளை குறிவைத்த ஆக்ரமிப்பாளர்கள் நாளடைவில் குளங்களையும் விட்டு வைக்கவில்லை.

நகரில் தற்போது குளங்கள் இருந்ததற்கான சுவடே தெரியாத நிலையில் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளது. எஞ்சிய சில குளங்களும் கவனிப்பாரின்றி விடப்பட்டதால் சாக்கடையின் சங்கமாக மாறிப்போனது.

நகரில் தற்போது குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்களின் கவனம் குளங்களின் பக்கம் திரும்பியுள்ளது. எஞ்சிய குளங்களையாவது தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு கவுன்சிலர்கள் மூலம் நிகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகம் முதற்கட்டமாக பல்லவன் குளம், ராஜா குளம், நைனாரி குளம், பேராங்குளம், பழனியாண்டி ஊரணி, அடப்பன் குளம், நத்தம்பண்ணை குளம் உள்ளிட்ட முக்கியமான 10 குளங்களை தேர்வு செய்துள்ள நகராட்சி நிர்வாகம், இவற்றை தூர்வாரி ஆழப்படுத்துவதற்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக கவனிப்பாரின்றி கிடப்பில் போடப்பட்ட குளங்கள் தூரிவாரும் பணி நேற்றுமுதல்(7ம் தேதி) துவங்கியுள்ளது.

நகரின் மையப்பகுதியில் உள்ள பல்லவன் குளம் தூர்வாரும் பணியை நகர்மன்றத் தலைவர்(பொறுப்பு) சேட், ஆணையர் முருகேசன், இன்ஜினியர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ராமதாஸ், கண்ணன், தியாகு, பாண்டிக்குமார், அய்யப்பன், வீரக்குமார், அருணாசலம் ஆகியோர் பார்வையிட்டனர்.

 

நீர் தேக்கத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் :உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள்"சீல்'

Print PDF

தினமலர்                    08.08.2012

நீர் தேக்கத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் :உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள்"சீல்'

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் செயல்பட்டு வரும் வடமாநில உணவகத்தின் கழிவுகள், நீர்தேக்கத்தில் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டதால், அந்த உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் வடமாநில உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் கழிவுகளை, உணவக ஊழியர்கள் அருகில் உள்ள ஜிம்கானா நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து கொட்டி வந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக மனித கழிவுகளையும் நீர்த்தேக்கத்தில் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதனை அறியாமல் நகராட்சி சார்பில், இந்த நீர்த்தேக்கத்திலிருந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுகாதார சீர்கேடு குறித்து மக்கள் கொடுத்த புகாரின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால்முருகன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் ஜிம்கானா நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு உணவு மற்றும் மனித கழிவுகள் நீர்த்தேக்கத்தில் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இதை கொட்டியவர்கள் குறித்து கண்டறிய அப்பகுதி உணவகங்களை சோதனையிட்டனர். அதில் வடமாநில உணவகத்திலிருந்து தான் கழிவுகள் கொட்டப்பட்டது தெரிய வந்தது. அந்த உணவக நிர்வாகத்துக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.கழிவு கலந்த நீர் வினியோகிக்கப்பட்டதால் அதை பயன்படுத்திய மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்

. "குடிநீரை மக்கள் நன்கு காய்ச்சிய பின் குடித்தால் நோய் அபாயம் இல்லை' என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Last Updated on Wednesday, 08 August 2012 06:20
 


Page 104 of 519