Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பொது இடங்களில் ஆடு அறுப்பு பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

Print PDF

தினமலர்                31.07.2012

பொது இடங்களில் ஆடு அறுப்பு பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் சுகாதாரமற்ற முறையில் பொது இடங்களில் இறைச்சிக்காக ஆடுகள் அறுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரில் பல லட்சம் ரூபாய் செலவில் ஆடு அறுவை கூடம் கட்டப்பட்டுள்ளது. இறைச்சி வியாபாரிகள் இதனை பயன்படுத்துவதில்லை. நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகள், சாக்கடைகள் அருகிலும் சுகாதாரமற்ற முறையில் பொது இடங்களிலும் இறைச்சிக்காக ஆடுகள் அறுக்கப்படுகின்றன. இறைச்சி கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. நாய்கள், காக்கைகள் கழிவுகளை எடுத்து சென்று பல்வேறு இடங்களில் விட்டுவிடுவதால் சுகாதார கேடு விளைகிறது. பேரூராட்சி அறுவை கூடத்தில் அறுக்கப்பட்டு,முத்திரையிடப்பட்ட இறைச்சியை மட்டுமே விற்க வேண்டும். சுகாதாரமற்ற, பொது இடங்களில் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

குன்னூர் பேக்கரியில் பிளாஸ்டிக் பைகள் : ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ.,

Print PDF
தினமலர்                30.07.2012

குன்னூர் பேக்கரியில் பிளாஸ்டிக் பைகள் : ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ.,


குன்னூர் : குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட "பிளாஸ்டிக்' பைகள் பயன்படுத்தப்பட்டதால், 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரியில் 20 மைக்ரானுக்கு குறைவான எடையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை கடந்த 12 ஆண்டுகளாக அமலில் உள்ள போதும், மாவட்டத்தில் பிளாஸ்டிக் புழக்கம் இருந்து வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும் அவ்வப்போது, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், "குன்னூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தின்பண்டங்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களில் பேக் செய்து தரப்படுகிறது,' என அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து, இந்த பேக்கரியில் ஆர்.டி.ஓ., காந்திமதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள், பைகள் பயன்பாடுக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கடை உரிமையாளருக்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இதே பேக்கரிக்கு ஏற்கனவே, இதே காரணத்துக்காக,13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.""மீண்டும் இங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தால், பேக்கரிக்கு சீல் வைக்கப்படும்,'' என ஆர்.டி.ஓ., காந்திமதி எச்சரித்தார்.

 

மல்லாங்கிணரில் துப்புரவுப் பணி

Print PDF

தினமணி                30.07.2012

மல்லாங்கிணரில் துப்புரவுப் பணி

காரியாபட்டி, ஜூலை 29: மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த சிறப்பு சுகாதார முகாம் நடைபெற்றது. 

செயல் அலுவலர் மாலா தலைமை வகித்தார்துணைத் தலைவர் மணிராஜ் முன்னிலை வகித்தார். மல்லாங்கிணர் பேரூராட்சி உரப் பூங்காவில் தலைவர் நாகையா மரக்கன்றுகளை நட்டார். செயல் அலுவலர் மாலா பேசும்போது, ஒட்டு மொத்த சிறப்பு சுகாதார முகாம் மூலம் மல்லாங்கிணர் பகுதியில் தீவிர துப்புரவுப் பணி நடைபெற்று வருகிறது.சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மல்லாங்கிணர் பகுதியில் நடப்பட்டுள்ளன.பேரூராட்சிப் பகுதியில் துப்புரவுப் பணி தொடர்ந்து நடைபெற பொதுமக்கள் ஊழியர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார். வார்டு உறுப்பினர்கள் காளிமுத்து, கருப்பையா, அலுவலகத் தலைமை எழுத்தர் அன்பழகன், சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், பேரூராட்சி அலுவலர்கள் கண்ணன், பிலிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 108 of 519