Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி தொடங்குகிறது : கொசு உற்பத்தியை தடுக்க ஆராய்ச்சி மையம்

Print PDF

தினகரன்       03.01.2011

மாநகராட்சி தொடங்குகிறது : கொசு உற்பத்தியை தடுக்க ஆராய்ச்சி மையம்

சென்னை, ஜன.3:

கொசு உற்பத்தியை தடுக்க தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் ஆராய்ச்சி மையம், இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கூவம் மற்றும் அடையாறில் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்டுமரங்களில் சென்று கொசு மருந்து தெளிப்பதற்காக புதிதாக 6 கட்டுமரங்களை மாநகராட்சி வாங்கியுள்ளது. இந்த கட்டுமரங்களில் சென்று கொசு மருந்து தெளிக்கும் பணியை மேயர் நேற்று சிவானந்தா சாலையிலுள்ள கூவம் ஆற்றில் தொடங்கி வைத்தார். பின்னர் மேயர் கூறியதாவது:

சென்னை முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மாலை 5 முதல் இரவு 9 வரை வாகனங்கள் மூலம் புகைப்பரப்பி கொசு ஒழிக்கும் பணி நடக்கிறது. அதன்படி, 3,300 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. கூவம் மற்றும் அடையாறில் கொசுப் புழு உற்பத்தியை தடுக்க ஏற்கனவே 9 கட்டுமரங்களும், 6 பைபர் படகுகள் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் 6 கட்டுமரங்கள் புதிதாக வாங்கி பயன்படுத்தப்படுகிறது. கொசு ஒழிப்பு பணியில் 1,267 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொசு உற்பத்தியை தடுக்க உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக சுகாதாரத் துறை பரிந்துரைக்கும் மருந்தை மாநகராட்சி பயன்படுத்தி, மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் கொசு ஒழிக்கும் பணியை செய்து வருகிறது. கொசு உற்பத்தியை தடுத்து முழுமையாக ஒழிக்க மாநில கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இந்த மாத இறுதியில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி சார்பில் முழு துப்புரவு பணி

Print PDF

தினகரன்       30.12.2010

நகராட்சி சார்பில் முழு துப்புரவு பணி

பொள்ளாச்சி, டிச 30:

பொள்ளாச்சி நகராட்சியின் சுகாதார பிரிவு ஊழியர்களை கொண்டு உழவர் சந்தை உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று முழு துப்புரவு பணி நடைபெற்றது.

பொள்ளாச்சி நகரில் பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட்டுகள், காந்தி வாரச் சந்தை உள்ளிட்ட பல இடங்களில் குப்பை கள் ஆங்காங்கு தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருவதாக நகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வாரம் தோறும் புதன்கிழமைகளில் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் கொண்டு முழு துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் உறுதியளித்திருந்தார்.

அதன்படி வாரம் தோறும் குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து முழு துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று 6 இடங்களில் துப்புரவு பணி நடைபெற்றது. நகர்நல அலுவலர் குணசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்களான கோவிந்தராஜ், சுப்புராஜ், செல்வ பாண்டியன், ஜெரால்டு, சிவசாமி ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடைபெற்றது.

உழவர் சந்தை, நேரு நகர் மரப்பேட்டை பள்ளம், நந்தனார் காலனி, மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதி, அழகாபுரி வீதி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 6 இடங்களிலும் குப்பைகள் அகற்றப்பட்டு முழு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 250 துப்புரவு பணியாளர் கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்       23.12.2010

பாதாள சாக்கடை திட்டத்திற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சின்னமனூர், டிச. 23:

சின்னமனூர் மயானத்தில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக ரூ.4.87 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சின்னமனூர் நகராட்சி தலைவர் தமிழ்செல்வி பொறுப்பு ஏற்றது முதல், பாதாள சாக்கடை அமைக் கும் பணியில் தீவிரம் காட்டினார். அதன்பயனாக ரூ.10.16 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் வார்டு மட்டும் ஊருக்கு வெளியே இருப்பதால் மற்ற 26 வார்டுகளில் இத்திட்ட பணிகள் துவங்கி குழாய்கள், ஆள் நுழைவு தொட்டிகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.தற்போது குழாய்களிலிருந்து வெளியேறுகின்ற கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்டு, சுத்திகரிப்பு நிலையம் ரூ.4.87 கோடியில் அமைக்கப்படுகிறது. ராதா கிருஷ்ணன் ரைஸ்மில் தெரு மயான வளாகத்தில் இதற்கான கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சுத்திகரிப்பு நிலை யம் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. இப்பணியை சென்னை நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட் டம் 2011ம் ஆண்டு இறுதிக் குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நக ராட்சி தலைவர் தெரிவித்தார்.

சின்னமனூரில் நடைபெற்று வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை நகராட்சிகளின் கூடுதல் இயக்குனர் பிச்சை பார்வையிட்டார்.

Page 115 of 519