Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி

Print PDF

தினமலர்           15.12.2010

அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி

ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 1.67 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கியுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஈரோடு மட்டுமின்றி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்ட பகுதியிலிருந்தும் 3,000க்கும் அதிகமானோர் சிகிக்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் 600க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் நலச் சங்கம் சார்பில், மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்கள், கட்டில்கள் உள்பட கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக செயல்படுகிறது. காசநோய், தொற்று நோய் பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, கண், பொது பிரிவு, குழந்தைகள் பிரிவு, பன்றி காய்ச்சல் பிரிவு, சித்த மருத்துவம் உள்பட சிறப்பு பிரிவுகள் உள்ளன. மருத்துவமனை வளாத்தில் கழிவுநீர் செல்ல, முறையாக சாக்கடை வசதியின்றி, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி, சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. சென்ற மாதம் சித்தாபிரிவு அருகே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் நிரம்பி, அதிலிருந்த கழிவு குட்டையாக தேங்கியது.

அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடானது. கழிவுநீர் முறையாக செல்லாததால், தொற்றுநோய் ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகளவு பெருகுகின்றன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வரும் நோயாளிகள், கூடுதலாக தொற்று நோயையும் பெற்று செல்லும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மருத்துவமனை வளாகம் முழுவதையும் ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 1.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு, பணியும் துவங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அலுவலகத்திலிருந்து, பிரேத பரிசோதனை கூடம் வரை உள்ள அனைத்து கட்டிடங்களிலும் உள்ள கழிவறை மற்றும் கழிவு நீர் குழாய்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, பூமிக்கடியில் குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. பிரேத பரிசோதனைக் கூடம் அருகே பெரிய கீழ்நிலை தொட்டி அமைத்து, கழிவுநீர், கழிவு சேகரிக்கப்படுகிறது. இவற்றை சுத்திகரித்து, சாக்கடையில் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

பள்ளிபாளையம் நகராட்சியில் ஒட்டு மொத்த துப்புரவு முகாம்

Print PDF

தினகரன்                      15.12.2010

பள்ளிபாளையம் நகராட்சியில் ஒட்டு மொத்த துப்புரவு முகாம்

பள்ளிபாளையம், டிச.15: நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தி பள்ளிபாளையம் நகராட்சியில் ஒட்டு மொத்த துப்புரவு முகாம் மேற்கொள்ளப்பட்டது. 33 துப்புறவு பணியாளர்களை கொண்டு சாலையோரம் மண்டிக்கிடந்த புல்புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

பள்ளிபாளையம் நகராட்சி கருமஞ்செட்டிகாடு பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடைபெற்றது. நோய்பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்திடவும் சாலையோரங்களை சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்ள நகராட்சி மேற்கொண்ட இந்த சிறப்பு துப்புரவு முகாமை நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி துவக்கி வைத்தார். துப்புரவு அதிகாரி செங்கோட்டையன் மேற்பார்வையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வார்டு கவுன்சிலர் பாலகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முகாமில் 33 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று சுற்றுப்புறங்களில் தேங்கி கிடந்த புல்புதர்களை வெட்டி அகற்றி பிளீச்சிங் பொடிகளை தூவினார்கள். மாதம் ஒருமுறை அனைத்து வார்டுகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை ஒன்று திரட்டி இதுபோல ஒவ்வொரு வார்டிலும் சிறப்பு துப்புரவு முகாம் மேற்கொள்ளப்படும் என நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 15 December 2010 05:55
 

மூலிகை பூங்கா விரைவில் திறப்பு: மேயர் தகவல்

Print PDF

தினமலர்             14.12.2010

மூலிகை பூங்கா விரைவில் திறப்பு: மேயர் தகவல்

சென்னை : ""ஓட்டேரியில் அமைக்கப்பட்டுள்ள, மூலிகை செடி பூங்காவை விரைவில், துணை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை ஓட்டேரி குப்பை மாற்று நிலையம் அருகில், 11 ஏக்கர் நிலப்பரப்பில், மாநகராட்சி மூலிகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், நான்காண்டுகளுக்கு முன், 4,000 மூலிகை செடிகள் நடப்பட்டு, தற்போது நல்ல நிலையில் வளர்ந்துள்ளது. மலை வேம்பு, ஆவாரம், மருதாணி, நொச்சி, சிறியா நங்கை, பெரியா நங்கை, நெல்லி போன்ற பல வகையான மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளன.இந்த பூங்காவை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை பார்வையிட்டார். அப்போது, பூங்காவிற்குள், நடைபாதை, கழிவறை அமைக்க உத்தரவிட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

பூங்காவில் 64 அலங்கார விளக்குகள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்கப்படும். 600 மீட்டர் நீளத்திற்கு நடைபாதைகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். மூலிகைகள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு, இந்த பூங்கா உதவும் வகையில், ஒவ்வொரு செடிக்கும் அருகில் அந்த மூலிகையைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.இரண்டு கோடியே 25 லட்ச ரூபாய் செலவில், மூலிகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை துணை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன், புரசைவாக்கம் எம்.எல்.., பாபு, மற்றும் கவுன்சிலர்கள் இருந்தனர்.

 


Page 117 of 519