Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தினகரன் செய்தி எதிரொலி பழைய டயர்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்

Print PDF

தினகரன்             14.12.2010

தினகரன் செய்தி எதிரொலி பழைய டயர்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்

நெல்லை, டிச.14: தினகரன் செய்தி எதிரொலியாக பழைய டயர்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அகற்றினர்.

நெல்லை மாநகராட்சியில் மழைக்காலங்களில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. ஆட்டுஉரல், தேங்காய் சிரட்டை, பழைய டயர்களில் தேங்கும் மழைநீர் மூலம் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியில் வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களில் மழை நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளி யானது.

இதை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய டயர்களில் மழை நீரை அகற்றும் பணியை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக மாநகராட்சி மைய அலு வலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களில் தேங்கிய மழைநீரை உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய் வாளர் அரசகுமார் தலைமையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் அகற்றி னர்.

மழைநீர் தேங்கும் வகையில் பழைய டயர் களை தெருவில் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினகரன் செய்தி எதிரொலியால் டயர்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

 

நோயுற்ற ஆடுகளை இறைச்சிக்கு வெட்டத்தடை

Print PDF

தினமலர்            13.12.2010

நோயுற்ற ஆடுகளை இறைச்சிக்கு வெட்டத்தடை

உசிலம்பட்டி:உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஆடுகளுக்கு காணை நோய் தாக்கியுள்ளது. நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆடுகளை இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க, உசிலம்பட்டி பகுதியில் விற்கப்படும் ஆட்டிறைச்சிகளில் நகராட்சி நவீன இறைச்சிக்கூடத்தில் வதை செய்யப்பட்ட ஆட்டிறைச்சிகளை மட்டும் விற்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் சரவணகுமார் அறிவித்திருந்தார். இறைச்சிக்கூடத்தில் வதை செய்யப்படும் ஆடுகளை சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தியபின் வதை செய்யப்படுகின்றது. நேற்று இறைச்சிக்கூடத்திற்கு இறந்த ஆடு, நோய்வாய்ப்பட்ட ஆடுகளை வதை செய்ய முயற்சி செய்தனர். இறந்த ஆட்டை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் நோயுற்ற ஆட்டை வதை செய்யக் கொண்டு வந்த துரைச்சாமிபுரம் பரமன் என்பவரிடம் ஆட்டை உரிய சிகிச்சைக்கு கொண்டு செல்லும்படி நகராட்சி பணியாளர்கள் வலியுறுத்தினர்.நோயுற்ற ஆடுகளை இறைச்சிக்காக வெட்டி விற்க முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கோபியில் சிறப்பு துப்புரவுப் பணி

Print PDF

தினமணி            09.12.2010

கோபியில் சிறப்பு துப்புரவுப் பணி

கோபி, டிச. 8: கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் சிறப்பு துப்புரவுப் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவுபடி, கோபி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், கடந்த 2 வாரங்களாக இப்பணி நடைபெறுகிறது.

சிறப்பு துப்புரவுப் பணி அலுவலர், 3 துப்புரவு ஆய்வாளர்கள் 5 துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில், நகராட்சிக்கு உள்பட்ட 6, 7, 8, 9, 10-வது வார்டுக்கு உள்பட்ட, யாகூப் வீதி ,புகழேந்தி வீதி, புதுச்சாமி கோயில் வீதி, வாய்க்கால் ரோடு, ராமநாதன் வீதி, திருவேங்கடம் வீதி, கருமாயா வீதி, புதிய ஆஸ்பத்திரி வீதி, வரதன் வீதி ஆகிய இடங்களில் துப்புரவுப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், 145 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர். குப்பைகள் அள்ளப்பட்டு, சாக்கடை அடைப்பு எடுக்கப்பட்டு, தூர் வாரப்பட்டன. சாலை ஓரங்களில் உள்ள புற்களை வெட்டி, கல், மண் அகற்றப்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு மருந்தும் தெளிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் சிறப்பு துப்புரவுப் பணி நடைபெறும் என்று, கோபி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


Page 118 of 519