Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சென்னையில் 30 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மேயர் தகவல்

Print PDF

தினமணி              07.12.2010

சென்னையில் 30 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: மேயர் தகவல்

சென்னை, டிச.7: சென்னையில் 30 இடங்களில் 100 மருத்துவர்களுடன் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் குடிசைப் பகுதிகளிலும், மழைநீர் தேக்கம் இருந்த பகுதிகளிலும் இன்று நடத்தப்படுகிறது. மேயர் மா.சுப்பிரமணியன் தேனாம்பேட்டை எஸ்.எம். நகரிலும், துறைமுகத்தில் அன்னை சத்தியா நகரிலும், சைதாப்பேட்டையிலும் 10-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், மழைக்காலம் என்பதால் குடிசைப்பகுதிகளிலும், மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளிலும் 30 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 100 மருத்துவர்களுடன் நடத்தப்படுகிறது. அதேபோன்று தேவைப்படும் இடங்களில் 10 நடமாடும் ஊர்திகள் மூலம் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றிற்கு இலவசமாக மாநகராட்சி சார்பில் மாத்திரைகள், மருந்துகள் வழங்கப்படுகின்றன என அவர் கூறியதாக மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

துப்புரவுப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

Print PDF

தினமணி              07.12.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

கோவை, டிச. 6: கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமில் 620 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியும், வாசன் கண் மருத்துவமனையும் இணைந்து, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இம் முகாமை நடத்தின. துணை மேயர் நா.கார்த்திக் தொடக்கி வைத்தார். சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, எதிர்க்கட்சித் தலைவர் வெ..உதயகுமார், நகர் நல அலுவலர் ஹரிகிருஷ்ணன், உதவி நகர்நல அலுவலர் பி.அருணா, மாநகராட்சி உறுப்பினர் விஜயலட்சுமி, வாசன் கண் மருத்துவமனை பொதுமேலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர்.

 

நெல்லை டவுன் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்          07.12.2010

நெல்லை  டவுன் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

நெல்லை, டிச. 7: நெல்லை மாநகராட்சி பகுதியிலுள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கமிஷனர் சுப்பையனுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று உணவு ஆய் வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் அரசக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பழனி தலைமையிலான அதிகாரிகள் குழு வினர் டவுனில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் டவுன் நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந் தன. மைதா மாவு, அச்சுவெல்லம், உப்பு, இடியாப்ப மாவு, மசாலா பொருட்கள் என ரூ.10 ஆயிரம் மதிப்பி லான காலாவதியான பொருட்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.

அவை உடனடியாக அழிக்கப்பட்டன. நெல்லை மாநகர பகுதிக்குள் தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் காலாவதியான உணவு பொருட் களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அக்கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நெல்லை டவுனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 


Page 120 of 519