Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதார கேடான உணவு அழிப்பு: 200 கிலோ அயோடின் இல்லாத உப்பு பறிமுதல்

Print PDF

தினமணி           03.12.2010

சுகாதார கேடான உணவு அழிப்பு: 200 கிலோ அயோடின் இல்லாத உப்பு பறிமுதல்

திருநெல்வேலி,டிச.2: திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை சுகாதாரக் கேடான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து மாநகராட்சி சுகாதாரத் துறையினர் அழித்தனர். மேலும் 200 கிலோ அயோடின் இல்லாத உப்பையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இம் மாநகர் பகுதியில் சில நாள்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி சுகாதாரத்தைப் பேணவும்,தொற்று நோய்கள் எதுவும் பரவாமல் தடுக்கவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதில் உணவகங்களில் சுகாதார முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு,பரிமாறப்பட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் என்.சுப்பையன் எச்சரிக்கை விடுத்தார்.

இதன் விளைவாக மாநகராட்சி சுகாதாரத் துறையினர், உணவகங்களில் திடீர் சோதனை நடத்தி, சுகாதாரமற்ற உணவகங்களை மூடி வருகின்றனர். இந்த திடீர் சோதனை திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இச் சோதனை மொத்தம் 40 உணவகங்களில் நடத்தப்பட்டது. இதில் சில கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, திறந்த வெளியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வடை,பஜ்ஜி உஹள்ளிட்டவற்றை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதேபோல சில அசைவ உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து, அவர்கள் அழித்தனர்.

இதில் ஒரு கடையில் அரசு தடை செய்திருக்கும் அயோடின் இல்லாத உப்பு 200 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த உப்பை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த திடீர் சோதனை மாநகராட்சி உணவு ஆய்வாளர் கலியனாண்டி,சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் நடத்தினர்.

 

நெல்லை டவுனில் அதிகாரிகள் சோதனை உப்பு, ஈ மொய்த்த வடைகள் பறிமுதல்

Print PDF

தினமலர்                03.12.2010

நெல்லை டவுனில் அதிகாரிகள் சோதனை உப்பு, ஈ மொய்த்த வடைகள் பறிமுதல்

திருநெல்வேலி : நெல்லை டவுன் பகுதியில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அயோடின் இல்லாத உப்பு, திறந்த வெளியில் விற்பனை செய்யப்பட்ட வடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் (பொ) சாந்தி அறிவுரைப்படி உணவு ஆய்வாளர் கலியனாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சண்முகசுந்தரம் (பொ), மேற்பார்வையாளர்கள் ஜானகிராம், வேல்முருகன், சிங்கராஜன் அடங்கிய குழுவினர் நெல்லை டவுன் ரதவீதிகளில் ஓட்டல்கள், திறந்த வெளி உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர். நெல்லை டவுன் கீழரதவீதி, வடக்குரதவீதியில் திறந்தவெளியில் டீக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த வடை தினுசுகளை பறிமுதல் செய்தனர். அயோடின் இல்லாத உப்பு 2 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு வெந்நீர் வழங்கவேண்டும் எனவும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கவேண்டும் எனவும், திறந்த வெளியில் உணவு பண்டங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் ஓட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 40க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

சுத்தமில்லாத ஓட்டலுக்கு பூட்டு

Print PDF

தினகரன்              02.12.2010

சுத்தமில்லாத ஓட்டலுக்கு பூட்டு

பெங்களூர், டிச. 2: மாநகரில் சுத்தமான இறைச்சி கூடம் இல்லாத, பிரியாணி ஓட்டல்களுக்கு சீல் வைக்கும்படி அதிகாரிகளுக்கு மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் உத்தரவிட்டார்.

பெங்களூர் வடக்கு மண்டலத்தில் இயங்கி வரும் கடைகளில் நிலைக்குழு தலைவர் மஞ்சுநாத்ரெட்டி நேற்று அதிகாரிகளுடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது எம்.வி. கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனை கடைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சுத்தமில்லாமல் ஆங்காங்கே காணப்பட்ட கழிவுகளை பார்த்து கேள்வி எழுப்பினார். பின் இறைச்சி விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ள சான்றிதழ் காட்டும்படி கேட்டார். அவரிடம் சான்றிதழ் இல்லாததால், உடனடியாக கடைக்கும் சீல் வைக்கும் படி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ஐதராபாத் பிரயாணி ஓட்டலுக்கு சென்ற ரெட்டி, நேரடியாக சமையல் செய்யும் அறைக்கு சென்றார். அங்கு கோழி இறைச்சி சிதறி கிடந்தது. சமையல் செய்யும் இடம், பாத்திரம் அனைத்தும் பாசி பிடித்து பார்க்க சகிக்காமல் இருந்தது. இப்படி சுத்தமில்லாமல் சமையல் செய்தால், சாப்பிடும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என்று கேள்வி எழுப்பினார். ஓட்டல் நடத்துனரும் அனுமதி பெறாமல் இருந்ததால், ஓட்டலை மூடும் படி உத்தரவிட்டார். பின் வட மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ரெட்டி, ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 


Page 121 of 519