Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க நகராட்சி வலியுறுத்தல்

Print PDF

தினமணி            30.11.2010

குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க நகராட்சி வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம், நவ. 29: தொடர் மழை காரணமாக, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரை, பொதுமக்கள் கொதிக்க வைத்து பருகுமாறு, நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது பரப்பலாறு அணை. இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் டீ கடை, உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் கொதிக்க வைத்த குடிநீரையே பருக வேண்டும். மேலும், வீடுகளிலும் குடிநீரை கொதிக்க வைத்து பருகவேண்டும்.

தொடர்ந்து, நகராட்சி அலுவலகப் பணியாளர்கள், பொது சுகாதாரப் பணியாளர்கள், குடிநீர் விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் தெருவிளக்கு பணியாளர்கள் விடுப்பில் செல்லாமல், வார்டு பகுதிகளில் மழை காரணமாய் ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக கண்காணித்து சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வாய்க்கால்களில் தேங்கும் கழிவு நீரை அடைப்பு ஏற்படாமல் உடனடியாக அப்புறப்படுத்தவும், மழை நீர் சாலைகளில் தேங்காதவாறு வாய்க்கால் அமைத்து தண்ணீரை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை உடனடியாக சரிசெய்ய, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

புகை பிடிக்க தடை போர்டுவைக்க உத்தரவு

Print PDF

தினமலர்                30.11.2010

புகை பிடிக்க தடை போர்டுவைக்க உத்தரவு

புதூர் : பெட்டி கடைகளின் முன்பு புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற விளம்பர போர்டு வைக்காத கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக மக்கள் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்கள், காய்கறி மார்க்கெட், அரசு அலுவலகங்களில் யாரும் புகை பிடிக்கக்கூடாது என்று தடை உள்ளது. மேலும் ஒவ்வொரு பெட்டிகடை முன்பும் 2 அடி அகலம், 3 அடி நீளத்தில் புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற விளம்பர பலகை வைக்க வேண்டும். போர்டு வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என அனைத்து நகராட்சி நகர் நல அலுவலர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தூர் வாரும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்              30.11.2010

தூர் வாரும் பணி தீவிரம்

புதுக்கோட்டை, நவ. 30: பலத்த மழையால் தோரண வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளாலும், நீண்ட காலமாக தூர் வாரப்படாததாலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், பாதசாரிகள் சிரமத்துடன் சென்றுவந்தனர்.

இந்நிலையில் நேற்று தெற்கு ராஜவீதி நகராட்சி அலுவலகம் எதிரில் தோரண வாய்க்காலில் தூர் வாரும் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையிட்டார். பொக்ளின் இயந்திரத்தின் உதவியுடன் தூர் வாரும் பணி நடந்தது.

Last Updated on Tuesday, 30 November 2010 08:22
 


Page 124 of 519