Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கமிஷனர் வேண்டுகோள் குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்கணும்

Print PDF

தினமலர்                29.11.2010

கமிஷனர் வேண்டுகோள் குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்கணும்

திருச்சி: "திருச்சி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டிய பின்னரே பயன்படுத்தவேண்டும்' என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒருவாரகாலமாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சியின் குடிநீர் ஆதாரப் பகுதிகளில் மழைநீர் கலந்து வர வாய்ப்புள்ளது. ஆகையால், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோரின் கலந்த தண்ணீரை பயன்படுத்துமாறும், தண்ணீரை வெறுமனே காய்ச்சி குடிக்காமல், கொதிக்க காய்ச்சி ஆறவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மழைநேரங்களில் சாலையோரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

 

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Print PDF

தினமலர்              29.11.2010

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொசுவினால் பரவும் காய்ச்சலை தடுக்கும் பணிக்காக பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொசு தடுப்பு பணிகள் துவங்கப்பட்டது. நகராட்சி சார்பில் 10 களப்பணியாளர்கள், மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பாக ஏழு களப்பணியாளர்கள் என மொத்தம் 17 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பட்டுக்கோட்டை முதுநிலை பூச்சியியல் வல்லுனர்கள் வேலுச்சாமி, உஷா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாம்பன் ஆகியோரால் கொசு ஒழிப்பு பணி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கொசு உற்பத்தியாகும் கலன்களை அழித்தல், வீடுவீடாக சென்று சுகாதார கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுடன் முதிர் கொசு அழிப்பு பணிக்காக புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளை நராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன் கண்டியன் தெரு பகுதியில் துவக்கிவைத்தார்.

 நகராட்சி கமிஷனர் கூறுகையில், ""கொசு ஒழிப்பு பணிக்காக 17 பணியாளர்கள் தினமும் ஆறு வார்டுகள் வீதம் நகர் முழுவதும் பணியாளர்களை கொண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ்., .ஜி.ஏப்.டி., கொசுப்புழு உற்பத்தியாகும் டயர், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் போன்ற தண்ணீர் தேங்க கூடிய பொருட்களில் தேங்கியுள்ள தண்ணீரை அவ்வப்போது அப்புறப்படுத்திட வேண்டும். ""கீழ் நிலை நீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தொட்டிகளை வாரம் ஒரு முறை உலர்த்தி காயவைத்து பயன்படுத்த வேண்டும். .சி., பூச்செடிகளின் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும்,''என்றார்.

 

திருக்காம்புலியூரில் ரூ5 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் திறப்பு

Print PDF

தினகரன்             29.11.2010

திருக்காம்புலியூரில் ரூ5 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் திறப்பு

கரூர், நவ.29: இனாம்கரூர் நகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் ரூ5லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் நவீன பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதிமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி புதிய கழிப்பிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ.பேரவை செயலாளரும், 10வது வார்டு கவுன்சிலருமான காமராஜ், மாவட்ட அதிமுக பொருளாளர் முரளி, இனாம்கரூர் நகரச்செயலாளர் தமிழ்நாடு செல்வராஜ், இனாம்கரூர் ஜெ.பேரவை செயலாளர் செல்வராஜ், கரூர் இளைஞரணி நிர்வாகி கோல்ட் ஸ்பாட் ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.

 


Page 125 of 519