Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவிப்பு

Print PDF

தினமலர்           25.11.2010

குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவிப்பு

கரூர்: மழைக்காலத்தை முன்னிட்டு குடிநீரை காய்ச்சி பயன்படுத்த கரூர் நகராட்சி நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் நகரில் தற்போது மழையினால், நகரில் பல இடங்களிலும் தண்ணீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அசுத்த நீர் பல இடங்களிலும் தேங்க வாய்ப்புள்ளதால், தண்ணீரில் பரவக்கூடிய காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை மற்றும் தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. நகரில் உள்ள ஹோட்டல், டிபன் கடை, டீக்கடைகளில் வாடிக்கையாளருக்கு குடிநீரை காய்ச்சிய பிறகு விநியோகம் செய்ய வேண்டும். உணவு பொருட்களை "' மொய்க்காத வகையில் மூடி வைக்க வேண்டும்.பொதுமக்கள், தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமலும், சிறுநீர் உள்ளிட்ட அசுத்தம் செய்யாமலும், குப்பை சேகரிக்காமலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

 

கழுகுமலை பகுதியில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் சுகாதாரத்துறையினர் அதிரடி

Print PDF

தினகரன்                25.11.2010

கழுகுமலை பகுதியில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் சுகாதாரத்துறையினர் அதிரடி

கோவில்பட்டி, நவ. 25: கீழஈரால் மற்றும் கழுகுமலை பகுதி கடைகளில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரால்ப் செல்வின் ஆலோசனையின்பேரில் கீழஈரால் பஞ்சாயத்து மற்றும் கழுகுமலை டவுன் பஞ்சாயத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாத்தூரப்பன், கயத்தார், கழுகுமலை டவுன் பஞ்சாயத்துக்களின் உணவு ஆய்வாளர் பொன்னுராஜ், எட்டயபுரம் டவுன் பஞ்சாயத்து உணவு ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் தி.கணேசன், சு.கணேசன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உணவு விடுதிகள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள், குளிர்பான கடைகள், மிட்டாய் தயாரிப்பு நிலையங்கள், ஆயில் மில் போன்றவைகளில் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது கடைகளில் வர்ணம் கலந்த பலகாரங்கள் மற்றும் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், அயோடின் இல்லாத உப்பு பாக்கெட்டுகளை கண்டறிந்து பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் அனைத்து உணவு பொருள் பாக்கெட்டுகளின் மீதுள்ள லேபிளில் உணவு பொருளின் பெயர், சைவ, அசைவ குறியீடு, தொகுதி எண், தயாரிப்பு தேதி, உணவு பொருளில் அடங்கிய ஊட்டச்சத்து விபரம், தயாரிப்பாளரின் முழு முகவரி போன்றவை உணவு கலப்பட தடுப்பு சட்ட விதிகளின் படி இடம் பெற்றிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். எட்டயபுரம் அருகே கீழஈராலில் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

 

நெல்லை ஓட்டலில் மாநகராட்சி ரெய்டு உணவு கூடத்தில் சுகாதாரக்கேடு மோசம்

Print PDF

தினமலர்           24.11.2010

நெல்லை ஓட்டலில் மாநகராட்சி ரெய்டு உணவு கூடத்தில் சுகாதாரக்கேடு மோசம்

திருநெல்வேலி : நெல்லை ஓட்டலில் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமில்லாமல் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டல் பூட்டப்பட்டது. நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி (பொறுப்பு) சாந்தி அறிவுரையின் பேரில் உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, கல்யாணசுந்தரம், மேஸ்திரிகள் பழனி, நடராஜன், துப்புரவு மேஸ்திரி அந்தோணி, விக்டர் அடங்கிய குழுவினர் நெல்லையில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒரு ஓட்டலில் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரக்கேடாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் பழைய புரோட்டக்களை சூடு செய்து கொடுத்ததும், அழுகிய பல்லாரி உள்ளிட்ட காய்கறிகளை அப்புறப்படுத்தாமல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டலை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். குறைகளை சரிசெய்த பின்னரே ஓட்டலை திறக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமிஷனர் எச்சரிக்கை : நெல்லை ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கவேண்டும். உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் பேணவேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு வெந்நீர் வழங்கவேண்டும் எனவும், அவ்வாறு சுகாதாரமில்லாத ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.

 


Page 128 of 519