Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு உற்பத்தியை தடுக்க 15 பணியாளர்கள் நியமனம்

Print PDF

தினகரன்                  24.11.2010

தூத்துக்குடி மாவட்டத்தில் கொசு உற்பத்தியை தடுக்க 15 பணியாளர்கள் நியமனம்

ஆறுமுகநேரி, நவ. 24: தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரதுறை மற் றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பூச்சிகளி னால் பரவும் நோய்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு காயல்பட்டி னம் எல்கே மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. காயல்பட்டினம் நகராட்சி துணைத்தலைவர் கஷாலி மரைக்கார் தலை மை வகித் தார். எல்கே மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் முகமது ஹனிபா முன்னிலை வகித் தார். காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.

கொசுக்களின் வகைகள், அவற்றால் ஏற்படும் மலேரி யா, சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் ஏற்படுவதாகவும், இதனால் வீடு களில் தண் ணீர் தேங்காமல் இருக்க வும், கொசுக்கள் உற்பத்தி யை தடுப்பது குறித்து தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் கொசுக்களை உற்பத்தியை கட்டுப்படுத்த 15 தினக்கூலி பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அபேட் கரைசல் தெளிக்க உள்ளனர்.

இதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்கு னர் டாக்டர் உமா தெரிவித் தார். கொசு உற்பத்தி மற் றும் தடுக்கும் முறைகள் பற்றிய கண்காட்சி இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர்கள் சதக்கல்லா, மும் பை முகைதீன், சொளுக்கு, சுகு, கிதிர் பாத்திமா மற்றும் கிதிர்பாத்திமா, சுகாதார ஆய்வாளர் முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.

காயல்பட்டினத்தில் நடந்த பூச்சிகளினால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா பேசினார்.

 

சுகாதார சீர்கேடுகள் காரணமாக நெல்லையில் உணவகம் மூடல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன்              24.11.2010

சுகாதார சீர்கேடுகள் காரணமாக நெல்லையில் உணவகம் மூடல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

நெல்லை, நவ.24: நெல்லை மற்றும் பாளை பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சுகாதார சீர்கேடுகள் பெருகி வருகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் அங்கு உணவு அருந்துபவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காய்ச்சிய, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஓட்டல்களில் வழங்கப்பட வேண்டும். உணவினை கையாளும் பணியாளர்கள் கையுறை அணிய வேண்டும்.

ஈ மொய்க்கும் வகையிலும், தூசி படியும் வகையிலும் உணவு பொருட்களை திறந்து வைக்க கூடாது போன்ற விதிமுறைகள் ஓட்டல்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அதையும் மீறி சில ஓட்டல்கள் சுகாதாரம் பேணாமல் உணவு பொருட்களை தயாரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் நேற்று உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சாகுல் அமீது, அரசகுமார், கல்யாணசுந்தரம், விக்டர், அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர் பழனி, நாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களை ஆய்வு செய்தனர்.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகேயுள்ள பிரபல ஓட்டல் சமையல் அறையில் சுகாதார சீர்கேடு அதிகம் காணப்பட்டது. இதை சரிசெய்யும் வரை ஓட்டலை திறக்ககூடாது என கூறி அதிகாரிகள் ஓட்டலை மூடினர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் மதுரை சாலையில் 10 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Last Updated on Wednesday, 24 November 2010 07:32
 

சங்ககிரி பேரூராட்சியில் தூர் வாரும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி            23.11.2010

சங்ககிரி பேரூராட்சியில் தூர் வாரும் பணி தொடக்கம்

சங்ககிரி, நவ. 22: சங்ககிரியில் உள்ள கழிவு நீர் சாக்கடைகளைத் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை அதிகமாக பெய்து வருகின்றது. சனிக்கிழமை இரவு 62.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி நின்றுள்ளது. குட்டைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. சங்ககிரி பகுதிகளில் இம்முறை நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சங்ககிரி பழைய பஸ்நிலையம், சேலம்-பவானி பிரதான சாலைகளில் சிறதளவு மழை பெய்தாலும் சாக்கடை கழிவுநீர் மழை நீரோடு கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி பேரூராட்சியின் சார்பில் இச்சாலைகளில் உள்ள கழிவுநீர் சாக்கடையை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு தூர் வாரும் பணி நடைபெற்று வருகின்றது.

இதேபோல் சாலையில் இரு புறமும் உள்ள சாக்கடைகளையும், காவல்நிலையம் எதிரே உள்ள சாக்கடைகளையும் தூர் வார வேண்டுமென பேரூராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Page 129 of 519