Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கரு​மேனி ஆற்​றில் குப்​பைக் கழி​வு​க​ள் ​ கொட்​டு​வதை தடை செய்ய வலி​யு​றுத்​தல்

Print PDF

தினமணி             20.11.2010

கரு​மேனி ஆற்​றில் குப்​பைக் கழி​வு​க​ள் ​ கொட்​டு​வதை தடை செய்ய வலி​யு​றுத்​தல்

சாத்​தான்​கு​ளம்,​​ நவ.19: ​ சாத்​தான்​கு​ளம் கரு​மேனி ஆற்​றில் குப்​பைக் கழி​வு​களை பேரூ​ராட்சி நிர்​வா​கம் கொட்​டு​வதை தடை செய்ய வேண்​டும் என பொது​மக்​கள் ஆட்​சி​ய​ரி​டம் மனு அளித்​துள்​ள​னர்.​

சாத்​தான்​கு​ளம் திமுக.​ நக​ரச் செய​லர் ஏ.எஸ்.ஜோசப் தலை​மை​யில் கல்​விக் கழக நிறு​வ​னர் சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ பன்​னம்​பாறை ஊராட்​சித் தலை​வர் சந்​திரா,​​ திமுக கிளைச் செய​லர் செல்​வ​ராஜ்,​​ இயற்கை யோகா நல​வாழ்வு சங்​கச் செய​லர் ராம​கி​ருஷ்​ணன்,​​ திமுக ஒன்​றிய பொரு​ளா​ளர் முஸ்​தபா உள்​ளிட்ட 50-க்கு மேற்​பட்ட ​ பொது​மக்​கள் தூத்​துக்​குடி மாவட்ட ஆட்​சி​யர் மகேஸ்​வ​ர​னி​டம் அளித்த மனு:​

÷சாத்​தான்​கு​ளத்​தில் உள்ள கரு​மேனி ஆற்​றின் வழி​யாக மழைக்​கா​லங்​க​ளில் வைர​வன்​த​ருவை,​​ புத்​தன்​த​ருவை குளங்​க​ளுக்கு தண்​ணீர் செல்​கி​றது.​ ​÷தற்​போது ​ இந்த ஆற்​றில் பேரூ​ராட்சி மூலம் சேக​ரிக்​கப்​ப​டும் குப்​பை​க​ளும்,​​ கழி​வு​க​ளும் கொட்​டப்​ப​டு​கின்​றன.​ இத​னால் ஆறு மேடா​கி​யுள்​ளது.​

​ ​ குப்​பை​க​ளில் உள்ள பிளாஸ்​டிக் பொருள்​கள் ஆற்​றில் அடித்​துச் செல்​லப்​பட்டு வைர​வன்​த​ருவை,​​ புத்​தன்​த​ருவை குளங்​க​ளில் தங்​கு​கி​றது.​ பிளாஸ்​டிக் கழி​வு​கள் குளத்​தின் அடி​யில் படி​வ​தால் மழை​நீர் நிலத்​த​டி​யில் இறங்க வழி​யில்லை.​ ​ இத​னால் நிலத்​தடி நீரின் தன்மை மாறா​மல் போய்​வி​டும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

இது சம்​பந்​த​மாக பேரூ​ராட்சி நிர்​வா​கத்​தி​டம் பல​முறை முறை​யிட்​டும் எந்த நட​வ​டிக்​கை​யும் இல்லை.​ இத​னால் சுகா​தார சீர்​கே​டும்,​​ தொற்று நோய் பர​வும் அபா​ய​மும் ஏற்​ப​டு​கி​றது.​ ​​ எனவே குப்​பை​களை ஆற்​றில் கொட்​டா​மல் பேரூ​ராட்​சிக்​கென்று தனி​யாக இடத்தை தேர்வு செய்து அந்த இடத்​தில் குப்​பை​களை கொட்ட வேண்​டும் என்​ற​னர் அவர்​கள்.​ ​

÷இது சம்​பந்​த​மாக பன்​னம்​பாறை ஊராட்​சி​யில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மான நகலை பன்​னம்​பாறை ஊராட்​சித் தலை​வர் சந்​திரா ​ ஆட்​சி​ய​ரி​டம் அளித்​தார்.

 

கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: மேயர் வேண்டுகோள்

Print PDF

தினமணி                20.11.2010

கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: மேயர் வேண்டுகோள்

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள எஸ்.எம்.நகரில் வெள்ளிக்கிழமை கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.

சென்னை, நவ.19: கொசு ஒழிப்பு வாகனங்களின் பின்னால் சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 10 மண்டலங்களில் உள்ள சாலைகளில் கொசுப்புழுக்கள் மற்றும் கொசு ஒழிக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை சிந்தாதிரிப்பேட்டை எஸ்.எம்.நகரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் 180 புகைப்பரப்பு இயந்திரங்களும், வாகனத்தில் பொருத்தப்பட்ட பெரிய 27 புகைப்பரப்பு இயந்திரங்களின் மூலமும் கொசு ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பேருந்து செல்லும் சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளில் சுமார் 3,300 கிலோ மீட்டர் நீளத்துக்கு புகைப்பரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் புகைப்பரப்பும் வாகனங்கள் தங்கள் தெருக்களில் வரும்போது வீட்டின் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து, வீட்டின் உள்ளே போகுமாறு பார்க்க வேண்டும்.

கொசு ஒழிப்பைத் தடுக்க புகைப்பரப்பும் வாகனங்கள் வரும்போது, சிறுவர்கள் வண்டியின் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வீடுகளில் இருந்த உபயோகமற்ற 27 டன் பொருள்கள் அகற்றப்பட்டன என்றார் மேயர். மாநகராட்சி ஆய்வாளர் தா.கார்த்திகேயன், சுகாதாரத்துறை துணை ஆணையர் ஆஷிஷ் குமார், மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, சுகாதார அலுவலர் டாக்டர் குகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

திண்டுக்கல்லில் மலேரியா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி

Print PDF

தினமலர்              20.11.2010

திண்டுக்கல்லில் மலேரியா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள கொசுக்களால் மலேரியா பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறாததால் பல வார்டுகளில் ஆள் விழும் அளவிற்கு பள்ளங்கள் உள்ளன. மழை நீர் இப்பள்ளங்களில் குளம்போல் தேங்கியுள்ளது. இதுதவிர நகரில் முக்கிய குளங்கள் கொசு உற்பத்தி தலமாக உள்ளது. மலேரியா: கடந்த செப்டம்பரில் 42 பேரும், அக்டோபரில் 77 பேரும் இம்மாதத்தில் இதுவரை 7 பேரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடவடிக்கை: நகராட்சி சுகாதார அதிகாரி வரதராஜன் கூறுகையில்,"48 வார்டுகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர் தலைமையில் 21 பேர் கொண்ட சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் மேல்நிலை தொட்டிகளில் மருந்து ஊற்றுதல், மிஷின் உதவியால் புகை மருந்து தெளித்தல் போன்ற மலேரியா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்,'என்றார்.

 


Page 131 of 519