Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகர கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.25 கோடி

Print PDF

தினமலர்            16.11.2010

மாநகர கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.25 கோடி

ஈரோடு:ஈரோடு நகரில் சேரும் குடியிருப்பு கழிவுநீரை பாதாள சாக்கடை குழாய் மூலம் கொண்டு சென்று பீளமேடு என்ற இடத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்படவுள்ளது.ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிப்பாளையம், பெரியசேமூர் ஆகிய நான்கு நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி எட்டு சதுர கிலோ மீட்டரில் இருந்து 56 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்தது.மாநகராட்சியில் 209.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. ஈரோடு பகுதியில் ஐந்து கழிவு நீரேற்று நிலையம், ஐந்து கழிவுநீர் உந்து நிலையம், 13.195 கிலோ மீட்டர் நீளத்துக்கு உந்து குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.

அதற்காக, ஈரோடு பெரியார் நகரில் கழிவு நீருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. இங்கிருந்து காந்திஜி ரோட்டில், பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக காலிங்கராயன் வாய்க்காலை அடுத்துள்ள பீளமேடு பகுதிக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படவுள்ளது. இப்பணியை மேற்கொள்ளும் கே.ஆர்.ஆர்., இன்ஃப்ரா ஸ்டிரெக்சர் நிறுவன திட்ட அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:பெரியார் நகரில் "' பிளாக் எதிரே நீருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஈரோடு நகரில் சேரும் கழிவுநீர் இங்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின், பீளமேடு கொண்டு செல்லப்படும். உலக வங்கி நிதியாக 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பீளமேட்டில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படவுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் குழிதோண்டும் பணியின் போது குழியின் அளவு இடத்துக்கு இடம் மாறுபடும். குடியிருப்புகள் உள்ள பகுதியில் வீடு வாசல் வரை குழாய் அமைப்பது எங்களது பணி. வீட்டுக்கழிவு நீர்க் குழாயை இதனுடன் இணைப்பது மாநகராட்சியின் பணி. இப்பணிகள் அனைத்தும் இன்னும் மூன்று மாதங்களில் முடிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

பள்ளிபாளையத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் மக்களுக்கு அறிவுரை

Print PDF

தினகரன்                 16.11.2010

பள்ளிபாளையத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் மக்களுக்கு அறிவுரை

பள்ளிபாளையம், நவ.16: பள்ளிபாளையத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இதில் மக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளிபாளையத்தில் டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொசு ஒழிப்பு மருந்தடிப்பு, அபேட் மருந்து கரைசல் தெளித்தல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை நகர்மன்ற தலைவர் குமார், நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். 21 வார்டுகளுக்கும் சென்ற நகராட்சி பணியாளர்கள் நீர்நிலைகளில் அபேட் மருந்து கரைசலை ஊற்றி கொசுக்களின் புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

லாரி, சைக்கிள்களில் இயந்திரங்களை வைத்து கொசு ஒழிப்பு புகை மருந்தடிப்பு பணியை மேற்கொண்டனர். வீடுகளில் உள்ள தொட்டிகள், பானைகளில் அபேட் மருந்து கரைசலை தெளித்தனர். மக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அந்த துண்டு பிரசுரத்தில், ``தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளை 4 நாட்களுக்கு ஒருமுறையும், தண்ணீர் பாத்திரங்களை வாரம் ஒருமுறையும் சுத்தம் செய்ய வேண்டும். சாக்கடையில் குப்பைகளை கொட்டி தண்ணீர் ஓட்டத்தை தடை செய்ய கூடாது`` என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Last Updated on Tuesday, 16 November 2010 07:46
 

ஆதித்யா பிர்லா மருத்துவமனையில் பிசிஎம்பி மாநகராட்சியின் முதல் கண் வங்கி

Print PDF

தினகரன்                  16.11.2010

ஆதித்யா பிர்லா மருத்துவமனையில் பிசிஎம்பி மாநகராட்சியின் முதல் கண் வங்கி

பிம்ப்ரி சிஞ்ச்வாட், நவ. 16: பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சி தனது முதல் கண் வங்கியை தொடங்கியுள்ளது. ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனையின் 4வது ஆண்டு நிறைவு விழாவின் போது பிசிஎம்சி ஆதித்யா ஜோத்என புதிய கண் வங்கி தொடங்கப்பட்டது.

பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சி மற்றும் ஆதித்யா பிர்லா மருத்துவமனை இணைந்து தொடங்கியுள்ள இந்த கண் வங்கிக்கு டாக்டர் ரித்தேஷ் காக்ரானியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கியின் தொடக்க விழாவில், ஆதித்யா பிர்லா பவுண்டேசன் தலைவர் ராஜஸ்ரீ பிர்லா, மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.பி. சிங் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ராஜஸ்ரீ, பார்வையற்றவர்களுக்கு ஒளி கொடுக்க கண் தானம் மற்றும் கண் வங்கியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இந்த வங்கியில் பொதுமக்கள் தங்களது கண்களை தானம் செய்ய பதிவு செய்து கொள்ளலாம்.

 


Page 133 of 519