Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஜிம்கானா தடுப்பணையில் தூர்வாரும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்                16.11.2010

ஜிம்கானா தடுப்பணையில் தூர்வாரும் பணி தீவிரம்

குன்னூர், நவ.16: நீரை அதிகளவில் சேமித்து மக்களுக்கு வினியோகிக்க ஜிம்கானா தடுப்பணையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

குன்னூர் நகர பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக ஜிம்கானா தடுப்பணையில் நீர் சேகரிக்கப்பட்டு முக்கிய பகுதிகளுக்கு நீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக அணை தூர் வாரப்படாததால் குறைந்த அளவிலேயே நீர் தேக்கி வைக்கப்படுகிறது. பெருமளவிலான நீர் இத னால் விரையமாகி வருகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வந்தாலும் தடுப்பணையில் முழுமையாக நீரை சேமித்து வைக்க இயலாத நிலை காணப்படுகிறது. எனவே தடுப்பணை யை சீரமைக்க நகரா ட்சி நிர்வாகம் முடிவு செய்துள் ளது. குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறும் போது, ரூ.10 லட்சம் செல வில் தடுப்பணையை தூர் வாரி நீரை சேமிக்கும் வகை யில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 8 அடி ஆழத்திற்கு சேறு, சகதிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத னை ஆழப்படுத்தி ஒரு வாரத்திற்குள் முழுமையாக பராமரிக்கப்படும். அதன் பின்னர் தடுப்பணையில் நீரை சேமித்து மக்களுக்கு வினியோகிக்கப்படும். மழை காலம் நிறைவு பெறும் முன் தடுப்பணை கட்டும் பணி நிறைவு பெற்று அணையில் நீர் சேமிக்கப்படும் என்றார்.

 

கொசு உற்பத்திக்கு காரணமான 32 டன் உபயோகமற்ற பொருள்கள் அகற்றம்: மேயர் தகவல்

Print PDF

தினமணி                   15.11.2010

கொசு உற்பத்திக்கு காரணமான 32 டன் உபயோகமற்ற பொருள்கள் அகற்றம்: மேயர் தகவல்

சென்னை தியாகராய நகர் பகுதியில் கொசு உற்பத்திக்கு காரணமாக வீடுகளில் இருந்த உபயோகமற்ற பொருள்களை மாநகராட்சி களப்பணியாளர்கள் அகற்றுவதை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு

 சென்னை, நவ.14: மாநகராட்சி சார்பில் கடந்த 15 நாள்களில் மட்டும் கொசு உற்பத்திக்கு காரணமாக வீடுகளில் இருந்த 32 டன் உபயோகமற்ற பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.

வீடுகளில் தேவையற்ற பொருள்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேக்கி வைப்பதனாலும், கொசுக்கள் உற்பத்தியாகிறது என்பதை வலியுறுத்தி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இப்பேரணி காமராஜர் காலனி குடிசைப்பகுதி, கார்ப்பரேஷன் காலனி போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தெருத்தெருவாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேவையற்ற பொருள்களை வீடுகளில் தேக்கி வைக்க வேண்டாம், வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி வைக்க விடாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிரசாரம் செய்தனர்.

இது குறித்து, மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியது: கொசுக்களினால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 10 மண்டலங்களிலும் 30 குழுக்கள் அமைத்து மேல்நிலைத்தொட்டி, கிணறு, கீழ்நிலைத் தொட்டிகளுக்கு கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் உபயோகமற்ற பொருள்கள், தண்ணீரை தேக்கி வைப்பதனால் கொசுப் புழுக்களும், கொசுவும் உற்பத்தியாகின்றன.

கடந்த 15 நாள்களில் மாநகராட்சியின் 10 மண்டலங்களில் வீடுகளில் இருந்த 32 டன் உபயோகமற்ற பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன.

தினந்தோறும் 236 புதிய புகை பரப்பும் இயந்திரங்கள் உள்ளிட்டவை மூலம் காலை, மாலை நேரங்களில் கொசுப்புகை பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

விழிப்புணர்வு பேரணியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் பெ.குகானந்தம், மண்டலக்குழு தலைவர் கே.ஏழுமலை மற்றும் உதவி சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

நகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் ஆடுகள் வெட்ட நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை

Print PDF

தினகரன்                    15.11.2010

நகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் ஆடுகள் வெட்ட நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை

கரூர், நவ.15: சுகாதாரமான ஆட்டிறைச்சி கிடைக்க நகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டுமே ஆடுகளை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் நகரில் பல்வேறு இறைச்சிக்கடைகள் ஆங்காங்கே செயல்படுகின்றன. பொதுமக்களுக்கு சுகாதாரமான ஆட்டிறைச்சி கிடைப்பதற்காகவும், தரமாக இருப்பதற்காகவும் தமிழக அரசு ஆடுவதை கூடங்களை நவீன முறையில் அமைத்து வருகிறது. கரூர் நகராட்சியும் இதற்காக தேர்வு செய்யப்பட்டு கரூர் பாலம்மாள்புரத்தில் நகராட்சி சார்பில் ஆடுவதை சாலை ரூ.50லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. நவீன முறையில் ஆட்டை அறுக்கவும், இதற்கு தேவையான சுடுநீர் கிடைப்பதற்கான பிளாண்ட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆடு நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக டாக்டர் சான்றளித்த பின்னர் இறைச்சி வெட்டப்படுகிறது.

இதன் மூலம் சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை பொதுமக்களிடம் விற்பனை செய்வதை தடுக்க முடியும். நோய் உள்ள ஆடுகளின் இறைச்சி விற்பனை செய்வது தவிர்க்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு இறைச்சி பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது.

ஆனால், கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கரூர் ஆட்டிறைச்சிக்கூடம் முழுமையான அளவில் செயல்படவில்லை. டெண்டர் விடுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.

வழக்கு தொடரப்பட்டது. தற்போது கடந்த 6மாதங்களாக செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு சில ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் மட்டுமே ஆடுகளை அறுத்து சென்று வருகிறார்கள். அனைத்து வியாபாரிகளும் இந்த கூடத்தில் அறுத்து சுகாதாரமான ஆட்டிறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கரூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கூறுகையில், சுகாதாரமற்ற மற்றும் நோயுள்ள ஆடுகளின் இறைச்சியால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இறைச்சி வியாபாரிகள், நவீன வசதிகளுடன் கூடிய நகராட்சி ஆட்டிறைச்சிக் கூடத்தில் மட்டுமே ஆடுகளை வெட்ட வேண்டும் என்பதை கரூர் நகராட்சி நிர்வாகம் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

 


Page 134 of 519