Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மழையால் நோய் பரவும் வாய்ப்பு குடிநீர் விநியோகத்தை கண்காணிக்கிறது மாநகராட்சி

Print PDF

தினகரன்                 11.11.2010

மழையால் நோய் பரவும் வாய்ப்பு குடிநீர் விநியோகத்தை கண்காணிக்கிறது மாநகராட்சி

திருப்பூர், நவ.11: திருப்பூர் மாநகரில் மழையின் காரண மாக நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, குடிநீர் சுத்தமாக வினியோகிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் மழைக்காலம் தொடங்கி உள்ளதைத்தொடர்ந்து குடிநீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, விஷக்காய்ச்சல் போன்ற நோய் களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது.

மாநகர பகுதிகளில் சுத்தமான குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறதா?, குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? குடி நீர் விநியோகிக்கும் முன்பு குளோரின் மாத்திரைகள் அல்லது பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட்டு சுத்திகரித்து விநியோகம் செய்யப்படுகி றதா? என்பது கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி பொறியாளர் கவுத மன் கூறுகையில், "திருப்பூர் மாநகரில் மழை காரணமாக ஆற்று நீரில் மழைநீர் கலந்திருக்கும் என்பதால், குடிநீருடன் குளோரின் மருந்துகளை கூடுதலாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகள் சுத்த மாக உள்ளதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது," என்றார்.

சாக்கடை தூர்வாரும் பணி தீவிரம் :

மாநகரில் மழையின் காரணமாக சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடைகள் தூர்வாரும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூர், வாவிபாளையத்தில் உள்ள மந்திரி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் ஜே.சி.பி. வாகனம் மூலம் தூர்வாரப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மாநகரில் பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ஸ்பாட் பைன் புதிய விதி விரைவில் அமல்

Print PDF

தினகரன்               11.11.2010

மாநகரில் பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ஸ்பாட் பைன் புதிய விதி விரைவில் அமல்

கோவை, நவ. 11: கோவை மாநகராட்சியில் சுகாதார பணிகளுக்கு புதிய துணை விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஸ்பாட் பைன் விதிக்கப்படும்.

கோவை மாநகராட்சியில், 96.50 கோடி ரூபாய் மதிப்பி லான திடக்கழிவு மேலாண் மை பணி ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இந்த பணிகளை சிறப் பாக செயல்படுத்த, புதிய துணை விதிகளை மாநகரா ட்சி சட்டம் 1981ன் படி, நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் மட்டும், விதிமுறை மீறல் தொடர்பாக 24 இனங்களுக்கு அபராதம் விதிக்க, துணை விதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அரசின் அனுமதி பெற்றவுடன் செயல்படுத்தப்படும். பொது இடத்தில் எச்சில் துப்புதல், சிறுநீர், மலம் கழித் தல், குளித்தல் போன்றவற்றி க்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஓட்டல், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் திறந்த வெளியில் உணவு கழிவுகளை கொட்டி னால் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சாக்கடையில் எந்த கழிவுகளையும் கொட்ட அனுமதி கிடையாது. கழிவு நீரையும் திறந்த வெளியில் விடக்கூடாது.

இறைச்சி கழிவுகளை கண்ட இடத்தில் கொட்டினாலும் 500 ரூபாய் வரை உடனடி அபராதம் விதிக்கப்படும். பொது இடத்தில் இரு சக்கர வாகனத்தை கழுவி னால் 100 ரூபாயும், கார், ஆட் டோ, ஜீப் போன்றவற்றை கழுவினால் 250 ரூபாய் வரை யிலும், சரக்கு லாரிகளை கழுவினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். கட்டுமான, கட்டட இடிபாடு கழிவுகளை பொது இடம், குளக்கரை, மக்கள் நடமாட் டம் மிகுந்த இடம், பூங்கா, காலியிடங்களில் கொட்டி னால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க துணை விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயிரி மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டினாலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.

வேதி பொருள் கழிவு, சாக்லெட், காலாவதியான உணவு பொருள் கழிவுகளை பொது இடத்தில் கொட்டி னால் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில், கோவை மாநகர் பகுதிக்கு இதுவரை 4.58 லட்சம் இலவச குப்பை கூடை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே அளவிற்கு குப்பை கூடை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த பணி முடிந்ததும், வீடு, வீடாக குப்பை சேகரிக்கப்படும். மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி கொடுத்த குப் பை கூடையில் கொட்டி ஒப்படைக்கவேண்டும்.

மாறாக குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டி னால் கூட, 250 ரூபாய் அபராதம் விதிக்கவும் துணை விதி திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நடைபாதை கடை முறைப்படுத்துதல், கழிப்பிடங்களை சீரமைத்தல், குப்பை சேகரித்தல் மூலம் கோவையை முழு சுகாதார நகரமாக திட்டம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

24 இனங்களுக்கு அதிரடி ஸ்பாட் பைன் திட்டம், தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சியிலும் கிடையாது. மும்பை மாநகராட்சியில், இதுபோன்ற ஸ்பாட் பைன் திட்டம் நடைமுறையில் இருப்பது குறிப்பிடதக்கது.

 

கொடைக்கானல் நகராட்சிப் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு

Print PDF

தினமணி                10.11.2010

கொடைக்கானல் நகராட்சிப் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு

கொடைக்கானல், நவ. 9: கொடைக்கானல் நகராட்சிப் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொட்டிகளில் சேரும் குப்பைகள் நகராட்சியில் உள்ள லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும்.

ஆனால் கடந்த 5 நாளாக கொடைக்கானல் மூஞ்சிக்கல், நாயுடுபுரம், எம்.எம்.தெரு, பெர்ன்ஹில் ரோடு, ஆனந்தகிரி தைக்கால், செண்பகனூர், அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் அதிலுள்ள இறைச்சிக் கழிவுகளை தெரு நாய்கள் சாலைகளில் விட்டுச் செல்கின்றன. இதனால் சாலை முழுவதும் அசுத்தமாகியுள்ளது.

மேலும் குப்பைகளில் அதிகமான நாய்கள் இருப்பதால் அந்தப் பகுதிகளில் செல்லும் பள்ளிக் குழந்தைகள், பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். கொடைக்கானலில் தற்போது மழை பெய்து வரும் சூழ்நிலையில் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட உள்ளது. எனவே நகரின் பல இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக் கோரி நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கொடைக்கானல் மக்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறியது:

கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமாக குப்பைகள் எடுப்பதற்கு 4 லாரிகள் உள்ளன. இதில் 2 லாரிகளுக்கு டயர்கள் வாங்கவில்லை அதனால் லாரிகள் நகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 லாரிகள் மூலம் கொடைக்கானல் முக்கியப் பகுதிகளிலுள்ள குப்பைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டயர்கள் வாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் குப்பை லாரிகளுக்கு டயர்கள் பொருத்தப்பட்டு நகரின் அனைத்து இடங்களிலுள்ள குப்பைகள் அகற்றப்படும் என்றார்.

 


Page 136 of 519