Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன் 21.10.2010

காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

காரைக்குடி, அக். 21: காரைக்குடி நகராட்சி பகுதியில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. காரைக்குடி நகராட்சி பகுதியில் காலாவதி உணவு பொருட்கள் ஆய்வு ஆணை யாளர் ரவிச்சந்திரன் தலை மையில் நடத்தப்பட்டது. நகர்நல அலுவலர் மீனாட்சி, உணவு ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் 100 அடிரோடு, கல்லுக்கட்டி, ..சி. ரோடு, முடியரசன் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

 

கோவில்பட்டியில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன் 21.10.2010

கோவில்பட்டியில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டி, அக். 21: கோவில்பட்டியில் பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால் கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் விஜயராகவன் அறிவுறுத்தலின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், சீனிராஜ், ஸ்டான்லிகுமார், முத்துகுமார், வெங்கடேசன் மற்றும் சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் ஆகியோர் கோவில்பட்டி மெயின்ரோடு, ரயில் நிலையம் எதிரே உள்ள பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமானதாக உள்ளனவா என சோதனை செய்தனர். மொத்தம் 50 கிலோ எடையுள்ள காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகள், ஸ்வீட்டுகள் மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பேக்கரியில் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் ரூ.5 லட்சத்தில் இலவச நவீன கழிப்பிடம்

Print PDF

தினமலர் 21.10.2010

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் ரூ.5 லட்சத்தில் இலவச நவீன கழிப்பிடம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் ஐந்து லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் இலவச நவீன கழிப்பிடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த இலவச கழிப்பிடம் பாழடைந்து கிடந்தது. கழிப்பிடத்தில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர் சாக்கடையில் வெளியேற வழியின்றி தேங்கியது. இதனால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துர்நாற்றம் பரவி சுகாதாரம் பாதித்தது. அதனால், பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தை புதுப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். பழைய கழிப்பிடத்தை அகற்றி அங்கு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

நகராட்சி பொறியாளர் மோகன் கூறியதாவது: பழைய பஸ் ஸ்டாண்டில் ரோடு சீர்குலைந்துள்ளதால், அதை புதுப்பிக்க திட்டமிடப் பட்டது. சர்வே செய்யும் பணிகள் நிறைவடைந்து ஒரு கோடி ரூபாயில் புதிதாக கான்கிரீட் ஓடுதளம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இருக்கை, பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை போன்றவை சீரமைக்கப்பட்டு வருகிறது. இலவச கழிப்பிடம், சாக்கடை போன்றவற்றை சீரமைத்து, சாக்கடை மீது நடைபாதை அமைக்க ஐந்து லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது. கழிப்பிட கட்டுமான பணிகள் முடிந்ததும் நடைபாதை அமைக்கும் பணி துவங்கப்படும் என்றார்.

 


Page 144 of 519