Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

இன்று தீவிர கொசு ஒழிப்பு பணி

Print PDF

தினமணி 13.10.2010

இன்று தீவிர கொசு ஒழிப்பு பணி

நாமக்கல், அக். 12: நாமக்கல் நகராட்சியில் புதன்கிழமை தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக, நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் விடுத்துள்ள செய்தி:

கொசு வளர்ச்சியைக் கட்டுப் படுத்தவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கொசு மற்றும் கொசுப் புழுக்களை அழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, புதன்கிழமை நகர் முழுவதும் 200 சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு தீவிர கொசு ஒழிப்புப் பணி நடைபெறும். அபேட் மருந்து மற்றும் கொசுப் புழுக்களை கட்டுப்படுத்தும் மருந்துகள் தெளிக்கவுள்ளனர். வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வீடுகளில் உள்ள கழிவு நீர் செல்லும் குழாய்களுக்கும், சாக்கடைத் தொட்டிகளுக்கும் வலை கட்டிக் கொள்ள வேண்டும். கொசு எந்த நிலையிலும் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

5.5 லட்சம் மாணவர்களுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை

Print PDF

தினமணி 13.10.2010

5.5 லட்சம் மாணவர்களுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை

சென்னை, அக். 12: சென்னையைச் சேர்ந்த 5.5 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் குடற்புழுக்கள் நீக்க தினமான புதன்கிழமை (அக்.13) இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் பெ. குகானந்தம் தெரிவித்தார்.

இகு குறித்து மேலும் அவர் கூறியது:

""சென்னை மாநகராட்சியின் சார்பில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள "ஆல்பென்டசோல்' என்ற குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 400 மில்லி கிராம் எடை கொண்ட இந்த மாத்திரை, எளிதில் மென்று சாப்பிடக் கூடியது. இரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதைச் சாப்பிடலாம்.

குடற்பகுதியில் உள்ள அனைத்து குடற்புழுக்களையும், அதன் முட்டைகளையும், வயிற்றுப்போக்கோ அல்லது வாந்தியோ ஏற்படுத்தாமல் அழிக்கும். இதனால் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள், குறிப்பாக இரும்புச் சத்து உடலின் இயக்க மண்டலத்துக்கு முழுமையாகச் சென்றடையும். மேலும் இந்த புழுக்களால் ஏற்படும் ரத்த சோகை நோய் இளம் மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மன வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளைக் குறைக்கும்.

மேலும் மாணவர்களுடைய சோர்வு மற்றும் சுறுசுறுப்பின்மை, கல்வி கற்கும் திறன் குறைதல், எதிர்மறையான சிந்தனைகள் உருவாகுதல், பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் உடல்நலக் கேடுகள் ஆகியவற்றை போக்க வல்லது.

"ஆல்பென்டசோல்' மாத்திரையைச் சாப்பிடுவதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது'' என்றார் டாக்டர் பெ.குகானந்தம்.

 

தரமற்ற குடிநீர் பாக்கெட்கள் அழிப்பு

Print PDF

தினமலர் 13.10.2010

தரமற்ற குடிநீர் பாக்கெட்கள் அழிப்பு

அம்பத்தூர் : அம்பத்தூர் நகராட்சி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குடிநீர் பாக்கெட்களை, நகராட்சி கமிஷனர் முன்னிலையில் சுகாதார துறையினர் அழித்தனர்.அம்பத்தூர், ஆவடி நகராட்சி பகுதிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள், குளிர்பான கடைகளில் தரமற்ற, சுகாதாரமில்லாத குடிநீர் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. .எஸ்.., முத்திரை இல்லாத, இந்த பாக்கெட் குடிநீரை அருந்துபவர்களுக்கு நோய்கள் பரவுகின்றன.இது குறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அம்பத்தூர் நகராட்சி கமிஷனர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் டாக்டர் மணிமாறன் தலைமையில் சுகாதார துறையினர் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.வரதராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலை, அம்பத்தூர் ஓ.டி., பஸ் நிலையம், கள்ளிக்குப்பம், பாடி, மண்ணூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த குளிர்பான கடைகள், டாஸ்மாக் பார்களில் சோதனை நடந்தது..எஸ்.., முத்திரையில்லாதவை, காலாவதியான குடிநீர் பாக்கெட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. நகராட்சி தலைவர் சேகர், கமிஷனர் ஆஷிஷ் குமார் முன்னிலையில், நகராட்சி வாகனம் மூலம் அழிக்கப்பட்டது.தரமற்ற குடிநீர் பாக்கெட்களை விற்பனை செய்த கடைக்காரர்கள், பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 149 of 519