Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கழிவுநீரால் சுகாதாரக் கேடு: நகராட்சி ஆணையரிடம் புகார்

Print PDF

தினமணி 06.10.2010

கழிவுநீரால் சுகாதாரக் கேடு: நகராட்சி ஆணையரிடம் புகார்

ஒசூர்,​​ அக்.​ 5:​ ஒசூரில் கழிவுநீருடன் மனிதக் கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ ஒசூர் நகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் ரெயின்போ கார்டன் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

​ ஒசூர் நகராட்சிக்குள்பட்ட 3-வது வார்டில் ராஜேஸ்வரி நகர்,​​ ராஜீவ் நகர்,​​ தாயப்பத் தோட்டம்,​​ ஜேஜே நகர்,​​ வசந்த் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

​ இதில் தாயப்பத் தோட்டம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மனிதக் கழிவுகள் கலந்து விடுகிறது.​ இக்கால்வாயில் உருவாகும் கொசுக்கள் கடித்து,​​ தொற்றுநோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர். ​ இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் கூறியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் மா.சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 06.10.2010

கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் மா.சுப்பிரமணியன்

சென்னை, அக். 5: கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு, மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:

அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை விழிப்புடன் கண்காணித்து தவிர்க்க வேண்டும். அதில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். பிரதான சாலைகளில் மையத்தடுப்புகளின் அருகே உள்ள மண் அகற்றப்பட வேண்டும்.

மேம்பாலங்களில் உள்ள செடிகள், மண்கள் எவ்வித தொய்வின்றி அகற்றிட வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்கள், தார்க்கலவைகள் கொண்டு சரிசெய்திட வேண்டும். பூங்காக்களின் பராமரிப்பில் எவ்வித தொய்வின்றி கண்காணித்திட வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் அரசியல் சார்பற்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்திட வேண்டும்.

போஸ்டர்கள் ஒட்ட தடை செய்யப்பட்ட 4 பிரதான சாலைகளில் எவ்வித தொய்வின்றி கண்காணித்து, களைய வேண்டும். சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடிகளை சரி செய்ய வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பூங்காக்களையும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், கல்வி அலுவலர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

தீபாவளிக்கு தரம் குறைந்த "ஸ்வீட்' தயாரிப்பு மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு அவசியம்

Print PDF

தினமலர் 06.10.2010

தீபாவளிக்கு தரம் குறைந்த "ஸ்வீட்' தயாரிப்பு மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு அவசியம்

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட விசேஷ தினங்களின் போது விற்பனை நோக்கத்துக்காக தரம் குறைந்த ஸ்வீட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரக்குறைவு குறித்து கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் தற்போதாவது கண்காணிப்பு பணி மேற்கொள்வார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.சேலம் மாநகராட்சியில் சுகாதார சீர்கேடுக்கு பஞ்சம் இருப்பதில்லை. மாம்பழ மண்டிகளில் பழங்களை, "கார்பைட்' கற்கள் மூலம் பழுக்க செய்வது, கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்வது, மளிகை பொருட்களில் கலப்படம், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை என்று சுகாதார சீர்கேடு தலை விரித்தாடுகிறது.

சமீபகாலமாக ஹோட்டல்களில் போட்டி மனப்பான்மை காரணமாக உடல் உபாதைக்குள்ளாகும் பொருட்கள் அதிகளவில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களின் போது ஸ்வீட் கடைகளில் வழக்கமான ஜாங்கிரி, லட்டு உள்ளிட்டவற்றுடன் பல புதிய ஸ்வீட் வகைகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும்.சேலம் மாநகர பகுதியில் பெரும்பாலான ஸ்வீட் கடைகளில் சுவையை அதிகரிக்க செய்ய உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய, "சாக்ரீன்' உள்ளிட்ட ரசாயன பொருட்களை கலப்படம் செய்து வருகின்றனர். தவிர, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட கார வகைகளை பழைய எண்ணெய்களில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய ஸ்வீட் விற்பனை குறித்து மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் கண்டு கொள்வதில்லை. தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது. சேலம் மாநகர பகுதியில் உள்ள ஸ்வீட் கடைகளில், "ஸ்வீட்' தயாரிப்பு பணிக்கு மும்முரம் காட்டி வருகின்றனர்.

பெரியவர்களை காட்டிலும் ஸ்வீட்டை குழந்தைகள் தான் அதிகம் விரும்புவர். ஸ்வீட்டின் தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் உடல் நலக்குறைவால் அவதிக்குள்ளாவர். பண்டிகை நேரத்தில் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஸ்வீட் கடை உரிமையாளர்களிடம் தரமான பொருட்களில் ஸ்வீட்களை தயார் செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்க வேண்டும்.தவிர, பண்டிகை நேரத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்வீட் கடைகளில் தரமான ஸ்வீட் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.மாநகர நல அலுவலர் பொற்கொடி கூறியதாவது:சேலம் மாநகரில் உள்ள ஸ்வீட் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்படும். அப்போது ஸ்வீட்டில் தரக்குறைவு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 


Page 156 of 519