Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினமணி 05.10.2010

மாநகராட்சி பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

கோவை,அக்.4: கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி உதவி நகர் நல அதிகாரி அருணா கூறியது:

மாநகராட்சிப் பள்ளிகளில் பிரார்த்தனைக் கூட்டங்களில் தினமும் ஒரு மாணவரைப் பேச வைத்து, பன்றிக் காய்ச்சல் வருவதற்கான காரணம் மற்றும் அதன் பாதிப்புகள், தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் 4 மண்டலங்களில் 72 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைக் காலத்தில் வீதியோரங்களில் தண்ணீர் தேங்குவது, கொசு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தண்ணீர் தேங்காமல் கவனிக்க வேண்டும். கொசு மருந்தின் வீரியத்தை அதிகரிப்பது குறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசப்படும் என்றார்

 

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

Print PDF

தினமலர் 05.10.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

ஈரோடு: பவானி மற்றும் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வதால், மாநகராட்சி பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி, வடிகட்டி, குடிக்க மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாநகராட்சி அறிக்கை:பவானி மற்றும் காவிரி ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில், தற்போது நல்ல மழை பெய்வதால், ஆற்று நீரின் அளவுக்கேற்ப மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தில், காவிரியாற்றிலிருந்து உரிய நேரத்துக்கு குடிநீர் பம்பிங் செய்வது தடைபடுகிறது. நகருக்கு குறித்த நேரத்தில், குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.மக்கள் விநியோகிக்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

 

கோபி பகுதியில் கொசுஒழிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமலர் 04.10.2010

கோபி பகுதியில் கொசுஒழிக்கும் பணி தீவிரம்

கோபிசெட்டிபாளையம்: கோபி பகுதிகளில் காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு அழிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.கூகலூர், அயலூர், சிறுவலூர் மற்றும் கோட்டுபுள்ளாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டாக்டர் பாரதி தலைமையில் 28 நர்ஸ், இரண்டு வாரத்தில் 4,182 வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. இதில், 1,318 வீடுகளிலும், 2, 656 கண்டெய்னர்களிலும் இருந்த கொசுப்புழுக்கள் நீக்கம் செய்யப்பட்டது.கொளப்பலூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. கோபியை அடுத்த பெருந்தலையூர் மற்றும் பி.மேட்டுபாளையத்தில் பொதுமக்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பன்றிகளை வளர்த்த மூன்று நபர்களுக்கும், பன்றி கடை நடத்தி வந்த ஒரு நபருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏழு நாட்களுக்குள் குறைகளை களையாவிட்டால் 1939ம் ஆண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், ஆய்வாளர்கள் மாரிமுத்து, ரகுபதி, ஆறுச்சாமி, முருகேசன், வீராச்சாமி, தண்டபாணி, சுப்ரமணியம், மனோகரன் உள்பட பலர் சென்றனர்.

 


Page 157 of 519