Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வடவள்ளி பேரூராட்சியில் ரூ19 லட்சத்தில் 3 இடங்களில் மூலிகை விளையாட்டு பூங்கா

Print PDF

தினகரன் 04.10.2010

வடவள்ளி பேரூராட்சியில் ரூ19 லட்சத்தில் 3 இடங்களில் மூலிகை விளையாட்டு பூங்கா

தொண்டாமுத்து£ர், அக்.4:கோவை அருகே வடவள்ளி பேரூராட்சி 16வது வார்டு ஐஓபி காலனி, 11வது வார்டு அருண் நகர் ஆகிய இடங்களில் தலா.ரு.4 லட்சத்து 50 ஆயிரத்திலும், 3வது வார்டு ராஜ் ரெசிடென்சி பகுதியில் ரூ9

லட்சத்து 75 ஆயிரத்தில் மூலிகை செடிகளுடன் விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பூங்கா திறப்பு விழாவுக்கு பேரூராட்சி துணை தலைவர் போலீஸ் சிவசாமி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சந்திரன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லிசண்முகசுந்தரம் மூலிகை பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். விழாவில் நேசம் அறக்கட்டளை நிறுவன தலைவர் சண்முகசுந்தரம், வார்டு உறுப்பினர்கள் குமுதம்குப்புசாமி, துரைராஜன், ராயப்பன், சின்னதங்கம், வேலுசாமி, ஜெயபிரகாஷ், கலைஞர் தமிழ் பேரவை ஒன்றிய செயலாளர் மருதமலை குப்சன், முன்னாள் கவுன்சிலர் மருதமலை ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மதுரையில் பன்றிக்காய்ச்சல் சிறப்பு பயிற்சி முகாம்

Print PDF

தினகரன் 01.10.2010

மதுரையில் பன்றிக்காய்ச்சல் சிறப்பு பயிற்சி முகாம்

மதுரையில் பன்றிகாய்ச்சல் தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம் 4 நாட்கள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் பன்றிக்காயச்சல் பரவலாக உள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பன்றி காய்ச்சல் தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம் வரும் 4ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. மதுரை மாநகராட்சி, புறநகர் அரசு மருத்தவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணியாற்றக்கூடிய அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், கடைநிலை ஊழியர்களுக்கு பன்றிகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. நோயை கண்டுபிடிக்கும் விதம், முன்கூட்டியே தடுத்தல், வந்த பிறகு மருந்து வழங்குதல் குறித்த பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜெரால்டு வழங்குகிறார். தனியார் மருந்து நிறுவனங்கள் சார்பில் குறைந்த விலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படும். இத்தகவலை மதுரை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்தார்.

Last Updated on Friday, 01 October 2010 12:02
 

திண்டுக்கல்லில் பன்றிகள் தொல்லை பிடிக்க சுகாதாரப்பிரிவின் தனிப்படை

Print PDF

தினமலர் 30.09.2010

திண்டுக்கல்லில் பன்றிகள் தொல்லை பிடிக்க சுகாதாரப்பிரிவின் தனிப்படை

திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க சுகாதார பிரிவு ஊழியர்கள் அடங் கிய தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் நகரில் தெருக்களில் சாக்கடை தோறும் பன்றிகளின் புகலி டமாக உள்ளது. அரசு ஆஸ் பத்திரி, குளங்களில் ஏராள மான பன்றிகள் உள்ளன. ரோட்டில் சர்வ சாதார ணமாக உலாவரும் இவற் றை பிடிக்கும் நட வடிக் கையில் நகராட்சி இறங்கி யுள்ளது. சிறப்பு படை: நகர் நல அதிகாரி வரதராஜன் தலை மையில் 3 சுகாதார ஆய் வாளர்கள், துப்புரவு பணி யாளர்கள் கொண்ட சிறப்பு படை அமைக்கப்பட்டுள் ளது.

நகரில் சுற்றிதிரியும் பன்றிகளை பிடிப்பது, உணவு கலப்படத்தை கண்டுபிடிப்பது, சுகாதார பாதிப்பு குறித்து வரும் புகார்களை நிவர்த்தி செய்வது இப்படையின் முக்கிய பணியாகும். நேற்று இப்படையினர் நடத்திய வேட்டையில் 15 பன்றிகள் சிக்கின. இவை நகராட்சி எல்லை யை தாண்டி விடப்பட்டன. பன்றி பிடிக்கும் பணி தொடரும் என நகராட்சி தெரிவித்துள்ளது.

 


Page 158 of 519