Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மக்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினகரன் 30.09.2010

மக்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி

திருச்சி, செப். 30: மாநகர மக்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமா பேசுகையில், மத்திய பஸ் நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வழங்கப்படும் கூப்பன்களில் கட்டணம் குறிப்பிடப்படுவதில்லை. கட்டண விவர அறிவிப்பு பலகையும் இல்லை. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றார். கான்ட்ராக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் பால்சாமி கூறினார்.

காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், குடமுருட்டி ஆற்றின் பாலத்தில் இருந்து அண்ணா சிலை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் சத்திரம் பஸ் நிலையம் தத்தளிக்க காரணமாக இருந்த குடமுருட்டி முதல் சிந்தாமணி வரையிலான காவிரி கரையில் உடைப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகள் நிறைந்த சிந்தாமணி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது என்றார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் பால்சாமி கூறினார்.

மாக்சிஸ்ட் கவுன்சிலர் தங்கராஜ் பேசுகையில், பன்றி காய்ச்சலுக்கான தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக போட வேண்டும். மாநகரில் பன்றிகளை ஒழிக்க வேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புஷ்பம் பேசுகை யில், கீழ சாராய பட்டறை தெருவில் பழுதடைந்துள்ள பொது கழிப் பிடத்திற்கு மாற்றாக புதிய கழிப்பிடம் கட்ட தர வேண் டும் என் றார்.

 

மாநகராட்சி கட்டணக்கழிப்பறையில் சுகாதாரகேடு: கவுன்சிலர்கள் புகார்

Print PDF

தினகரன் 30.09.2010

மாநகராட்சி கட்டணக்கழிப்பறையில் சுகாதாரகேடு: கவுன்சிலர்கள் புகார்

கோவை, செப் 30: கழிவறைகள் நாறி கிடக்கிறது. சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துவதாக உள் ளது. எவ்வித பராமரிப்பும் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந் தது. இதில் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், பாரதியார் ரோடு, புலியகுளம் மெயின் ரோடு, திருச்சி ரோடு, ரேஸ் கோர்ஸ், அண்ணா மார்க் கெட், எம்.ஜி.ஆர் மார்க்கெட், பூ மார்க்கெட், காந்தி பார்க், தடாகம் ரோடு, ஆம்னி பஸ் ஸ்டாண்ட், கணபதி, சீனிவாசபுரம், சிவானந்தா காலனி, ..சி பூங்கா, உப்பிலிபாளையம், காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட், லிங்கப்ப செட்டி வீதி, தியாகி குமரன் வீதி, டவுன்ஹால், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், செட்டி வீதி பகுதியில் மாநகராட்சி கட்டணக்கழிப்பறைகளை மறு வடிவமைப்பு செய்ய விருப்ப கேட்பு அறிக்கை கோரப்பட் டது. காந்திபுரம் பஸ் ஸ்டா ண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கழிப்பறைகளை திரும்ப கட்டவேண்டும். அவி னாசி ரோட்டில் ஷாப்பிங் மால், ஜிபிடி மேற்கு நுழைவா யில், சிங்காநல்லூர் பஸ் ஸ்டா ண்ட் வெளிப்புறம், திருச்சி ரோடு உழவர் சந்தை, சுங்கம் ரவுண்டானா, பவர் ஹவுஸ் பகுதியில் புதிதாக கழிப்பிடம் கட்ட விருப்ப கேட்பு அறிக் கை பெற அனுமதி கோரப்பட்டது.

இது குறித்து கவுன்சிலர் கள் பேசுகையில், " மாநகரா ட்சி கழிப்பறைகள் நாறி கிடக்கிறது.

சுத்தமாக எங்கேயும் பராமரிக்கப்படவில்லை. சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கும் கழிப்பறைக்குள் செல்ல மக் கள் தயங்குகிறார்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றனர். இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

அக்டோபர் 2-ந் தேதி முதல் ஏழைகளுக்கு இலவசமாக பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

Print PDF

மாலை மலர் 29.09.2010

அக்டோபர் 2-ந் தேதி முதல் ஏழைகளுக்கு இலவசமாக பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

அக்டோபர் 2-ந் தேதி முதல்
 
 ஏழைகளுக்கு இலவசமாக 
 
 பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி
 
 10 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

சென்னை, செப். 29- தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து, தடுப்பூசி குறைந்த விலையில் போடப்பட்டு வருகிறது.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், மாநகராட்சி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக போடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று சுகாதாரதுறை செயலாளர் சுப்புராஜிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தை புனேயில் உள்ள ரத்த பரிசோதனை மையம் மற்றும் ஆமதாபாத் தனியார் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ. 15 கோடிக்கு வாங்க டெண்டர் கேட்கப்பட்டுள்ளது.

1-ந் தேதி டெண்டர் திறக்கப்பட்டு முடிவாகிவிடும். எனவே 2-ந் தேதியில் இருந்து ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பு ஊசி போட ஏற்பாடு செய்யப்படும்.

முதல்கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கார்டு போன்றவற்றை காட்டி இலவசமாக தடுப்பூசி போடலாம்.

இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.

பன்றிக்காய்ச்சல் உறுதி யாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1019-ஐ தாண்டி விட்டது.

சென்னை, கோவை, வேலூர், கடலூர், கன்னியா குமரி ஆகிய 5 மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இங்கு முதல் கட்டமாக அதிக அளவில் தடுப்பூசி போட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


Page 159 of 519