Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தண்ணீரை காய்ச்சி குடியுங்கள் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

Print PDF

தினமலர் 24.09.2010

தண்ணீரை காய்ச்சி குடியுங்கள் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரை காய்ச்சி கொதிக்க வைத்து குடிக்குமாறு பொதுமக்களுக்கு நகராட்சி தலைவர் வேலுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் வரை இரு பக்கத்திலும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் பள்ளம் வழியாக பவானி ஆற்றில் வந்து கலக்குகிறது. பவானி ஆற்றில் இருந்துதான் சத்தியமங்கலத்தில் உள்ள 27 வார்டுக்கும் குடிதண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.நகராட்சி தண்ணீரை சுத்தப்படுத்தி வினியோகம் செய்தாலும் பொதுமக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 24.09.2010

காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

சிவகாசி : திருத்தங்கல் நகராட்சி செயல் அலுவலர் கவுதமன், பொது சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைபடி, கடைகளில் தண்ணீர் பாக்கெட், குடிநீர் டேங்கர் லாரிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில், ஆய்வாளர் பூவேந்திரன் அழகுமுத்து ஆகியோர் நகரில் 12 கடைகளில் காலாவதியான 500 குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதேபோல் குடிநீர் விற்பனை செய்த 12 டேங்கர் லாரிகளையும் சோதனை செய்தனர். இந்த தண்ணீரில் குளோரினேசன் இன்றி தண்ணீர் இருந்ததை கண்டுபிடித்தனர். 1000 லிட்டருக்கு நான்கு கிராம் வீதம் பிளிச்சிங் பவுடர் கலந்து வி னியோகிக்க வேண்டும் என எச்சரித்து அனுப்பினர். சுகதாரமற்ற குடிநீர் விற்பனை செய்வோர் மீது பொது சுகாதார சட்டப்படி வழக்கு தொடரப்படும் என நகராட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

Print PDF

தினமணி 23.09.2010

கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம், செப்.22: பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் பீதி நிலவுவதால், விழுப்புரம் நகரில் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

÷நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ் கூறியது: மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் பீதியை போக்கவும், கொசுவை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

÷இதில் வியாழக்கிழமை முதல் 6 நாள்களுக்கு கொழி ஒழிப்பு புகைமருந்து அடிக்கப்படும். இது மாதத்துக்கு ஒருமுறை செய்யப்படும்.

÷நகரில் உள்ள குட்டைகளை கண்டறிந்து 25-ம் தேதி முதல் ஆயில்பால் போடப்படும். இதில் உள்ள எண்ணெய் தண்ணீர் மேல் படிந்தால், கொசு உற்பத்தி தடுக்கப்படும். ÷அதேபோல் திறந்தவெளிக் கிணறுகளில் கொசு முட்டைகளை சாப்பிடும் கம்பூசியா மீன்கள் விடப்படும். மசூதி, கிறிஸ்துவ தேவாலயம், கோயில், பள்ளிகள் ஆகிய இடங்களில் புகைமருந்து அடிக்கப்படும் என்றார்.

÷பன்றிக்காய்ச்சல் குறித்து துணை இயக்குநர் கே. கிருஷ்ணராஜ் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ÷அவர்களுக்கும், அவர்களின் உறவினர்கள், நெருங்கிப் பழகியவர்கள் என கண்டறியப்பட்ட 70 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

÷யாருக்கேனும் தொண்டை கரகரப்பு, கடுமையான காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்குத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளது என்றார்.

÷இதில் பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் கே. கிருஷ்ணராஜ், நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ், ஆணையர் அ.க. சிவக்குமார், மாவட்ட பூச்சியியல் அலுவலர் முனுசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சி. சிவகுரு, மலேரியா ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 163 of 519