Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து கட்டணம் மாநகராட்சி மையங்களில் ரூ. 50 குறைப்பு: சென்னை மேயர் தகவல்

Print PDF

தினமணி 20.09.2010

பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து கட்டணம் மாநகராட்சி மையங்களில் ரூ. 50 குறைப்பு: சென்னை மேயர் தகவல்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பகுப்பாய்வுக் கூடத்தில்,

சென்னை, செப்.19: சென்னை மாநகராட்சி மையங்களில் பொதுமக்களுக்கு போடப்படும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து கட்டணம்

ரூ. 50 குறைக்கப்பட்டுள்ளது என்று மேயர்

மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள 6 பகுப்பாய்வு கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டம், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பகுப்பாய்வு கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:

சென்னை கிங் ஆராய்ச்சி மையத்தைக் காட்டிலும் மாநகராட்சியில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து ரூ. 100-க்கும், தடுப்பூசி ரூ. 200-க்கும் போடப்படுகிறது. கிண்டி கிங் ஆய்வு மையத்தில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து ரூ.150-க்கும் தடுப்பூசி ரூ.250-க்கும் போடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் தனியார் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும், சிறுவர்களும் பன்றிக் காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள இரண்டு செயல்களை அவசியம் பின்பற்ற வேண்டும். ஒன்று கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தப்படுத்துவது; மற்றொன்று உப்பு கலந்த வெந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிப்பதாகும்.

1 லட்சம் துண்டு பிரசுரங்கள்:

பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 1 லட்சம் துண்டு பிரசுரங்களும், மருத்துவமனைகளில் ஒட்டுவதற்காக 1 லட்சம் ஸ்டிக்கர்களும் அச்சடிக்கப்பட்டு ஒட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கிங் ஆராய்ச்சி மையத்தில் இப்போது பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சென்னையில் 6 இடங்களில்...:

சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் பகுப்பாய்வுக் கூடம், .வெ.ரா. சாலை பகுப்பாய்வுக் கூடம், சூளை செல்லப்ப முதலி தெருவில் தந்தை பெரியார் பகுப்பாய்வுக் கூடம், சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகில் உள்ள பகுப்பாய்வுக் கூடம், திருவான்மியூர் கிழக்கு தெரு காமராஜர் அவென்யூவில் உள்ள பகுப்பாய்வுக் கூடம், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகிய 6 இடங்களில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த 6 இடங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை போடப்படுகிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இலவசமாகப் போடுவது குறித்து தமிழக அரசின் உரிய ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக போடப்படும் என்றார்.

மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, சுகாதார அலுவலர் டாக்டர் பெ.குகானந்தம், கூடுதல் சுகாதார அலுவலர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது

சென்னை, செப்.20: பொதுமக்களின் குறைகளைக் களைவதில் சிறப்பாக செயல்படுவதற்காக சென்னை மாநகராட்சிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காச் நிறுவனம் விருது வழங்க உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இணையதளம் மூலம் பொதுமக்கள் சொத்துவரி செலுத்துதல், நினைவூட்டுகள் பெறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் வருகைகள் குறித்து இணையதளம் மூலம் பெற்றோர்களுக்கு தெரிவித்தல், பொதுமக்கள் குறைபாடுகள் இணையதளம் மூலம் பெறப்பட்டு, தீர்வு காணுதல், கட்டட அனுமதி இணையதளம் மூலம் சமர்ப்பித்தல், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடுதல் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டுதல், அமரர் ஊர்திகள், குளிர்சாதன பெட்டிகள் பெறுதல், தெருவிளக்கு தொடர்பான புகார்கள் சரி செய்தல் போன்ற பணிகளுக்காக ஹரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காச் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது 2010 (Skoch Awards 2010) வழங்க தேர்வு செய்துள்ளது.

வரும் 22-ம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, மேயர் மா.சுப்பிரமணியத்துக்கும், ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கும் ஸ்காச் விருது வழங்க உள்ளதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி ஏற்பாடு 6 இடங்களில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முதல் நாளில் 700 பேர் பயன்

Print PDF

தினகரன் 20.09.2010

மாநகராட்சி ஏற்பாடு 6 இடங்களில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முதல் நாளில் 700 பேர் பயன்

சென்னை, செப். 20: பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சென்னையில் 6 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் எதிரிலுள்ள சென்னை மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு கூடத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும் முகாமை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் மேயர் கூறியதாவது:

பன்றிக்காய்ச்சலை தடுக்க மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்களை அழைத்து பன்றிக்காய்ச்சலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்தில் மட்டுமே பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்து வழங்கப்படுகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், மக்கள் தங்களது பகுதியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

வள்ளுவர் கோட்டம் மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் கட்டணத்தை செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதுதவிர, .வெ.ரா. பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள பகுப்பாய்வு கூடங்களில் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடுப்பூசி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் கலெக்டரிடம் பெறப்பட்டபிறகு, இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு லட்சம் அச்சிடப்பட்டு, வீடு, வீடாக ஒட்டப்படுகிறது. இவ்வாறு மேயர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, சுகாதாரத் துறை அதிகாரி குகானந்தம், கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி தங்கராஜ் உடனிருந்தனர். முகாமில், 451 பேர் மூக்கு வழியாக மருந்து போட்டுக்கொண்டனர். 252 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்று மாநகராட்சி தெரிவித்தது.

 

பட்டியல் கிடைத்தவுடன் பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி: மேயர் உறுதி

Print PDF

தினமலர் 20.09.2010

பட்டியல் கிடைத்தவுடன் பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி: மேயர் உறுதி

அரும்பாக்கம்:""வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் பட்டியல் கிடைத்தவுடன் அவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும்' என, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி முகாம், நேற்று வள்ளுவர் கோட்டம் எதிரேயுள்ள பகுப்பாய்வு கூடத்தில் துவங்கியது.சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து கூறியதாவது:தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான அரசின் மூலம் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பன்றிக் காய்ச்சல் வராமல் இருப்பதற்கு சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.

அங்கு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் பகுப்பாய்வு கூடத்தில் தடுப்பூசி முகாமை துவக்கியுள்ளோம்.இங்கு மூக்கு தெளிப்பான் தடுப்பு மருந்துக்கு 150 ரூபாயும், தடுப்பூசிக்கு 250 ரூபாய் எனவும் பெறப்படுகிறது..வெ.ரா., சாலை, சூளைமேடு செல்லப்ப முதலி தெரு, சைதாப்பேட்டை, திருவான்மியூர் காமராஜர் அவென்யூ, பெரம்பூர் ரயில் நிலையம் எதிரேயுள்ள பகுப்பாய்வு கூடங்களில் நாளை முதல் தடுப்பூசி முகாம் துவங்கவுள்ளது.பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாகதடுப்பூசி போடுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதற்கான பட்டியல் வந்தபின் செயல்படுத்தப்படும்.தற்போது போடப்படும் தடுப்பூசி மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சுகாதாரத் துறை அதிகாரி குகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற இம்முகாமில், 500க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


வாசலோடு திரும்பிய சோகம்: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசுத் துறையான மாநகராட்சியிலும் இலவசமாக தடுப்பூசி போடுவார்கள் என்ற நம்பிக்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் பலர் பகுப்பாய்வு கூடத்திற்கு நேற்று சென்றனர்.அங்கு பணம் செலுத்த வேண்டும் என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 


Page 167 of 519