Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சென்னையில் ஆறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினமலர் 20.09.2010

சென்னையில் ஆறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

சென்னை: "பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, சென்னையில் ஆறு இடங்களில் போடப்படுகிறது' என, மாநகர மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் உள்ள ஆறு பகுப்பாய்வு கூடங்களில், பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டத்தை, வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பகுப்பாய்வு கூடத்தில் மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: பொதுமக்களும், சிறுவர்களும் பன்றிக் காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, இரண்டு செயல்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

ஒன்று, கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். மற்றொன்று, வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள பகுப்பாய்வு கூடம், .வெ.ரா., சாலை பகுப்பாய்வு கூடம், சூளை செல்லப்ப முதலி தெருவில் உள்ள பகுப்பாய்வு கூடம், சைதாப்பேட்டை கருணாநிதி வளைவு அருகில் உள்ள பகுப்பாய்வு கூடம், திருவான்மியூர் கிழக்கு தெரு காமராஜர் அவென்யூவில் உள்ள பகுப்பாய்வு கூடம், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகிய ஆறு இடங்களிலும் மாநகராட்சி சார்பில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டைக் காட்டிலும், இந்த பகுப்பாய்வு கூடங்களில் மூக்கு மூலம் தெளிக்கப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு 100 ரூபாயும், ஊசி மூலம் போடப்படும் தடுப்பூசிக்கு 200 ரூபாயும் என, குறைந்த விலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போடப்படுகிறது. தடுப்பூசிகள் போடப்படும் இந்த ஆறு இடங்களிலும் காலை 8 முதல் மாலை 3 மணி வரை போடப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இலவசமாக போடுவது பற்றி அரசின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக போடப்படும். இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.

 

பன்றிக் காய்ச்சல்: 1000 தடுப்பூசிகள் கோரி மதுரை மாநகராட்சி கடிதம்

Print PDF

தினமணி 17.09.2010

பன்றிக் காய்ச்சல்: 1000 தடுப்பூசிகள் கோரி மதுரை மாநகராட்சி கடிதம்

மதுரை, செப்.16: மதுரையில் மாநதகராட்சி மருத்துவமனைகளுக்கு முன்னெச்சரிக்கையாக பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் (ஹெச்1என்1) 1000 வழங்கவேண்டும் என, பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சிப் பகுதியில் உள்ள டாக்டர், மருத்துவப் பணியாளர்கள் என 70 பேருக்கு "எச்1என்1' தடுப்பூசி முதல்கட்டமாக போடப்பட்டுள்ளது.

அதிகக் காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

அவர்களுக்கு, மதுரை மருத்துவமனையில் தனி சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி சார்பில் செல்லூர், வில்லாபுரம், புதூர், பைகாரா, திடீர் நகர், அகிம்சாபுரம், சந்தைப்பேட்டை, எல்லீஸ் நகர், பெத்தானியாபுரம், கே.கே. நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 17 இடங்களில், மாநகராட்சியின் நகர் நலவாழ்வு மையங்களில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன.

இக்காய்ச்சல் அறிகுறி உள்ளதாக தெரியவரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம். அவர்களின் ரத்தம், தொண்டைச் சளி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, சோதனை நடத்தப்படும்.

1,000 தடுப்பூசிகள் : இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள 17 மையங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் இருப்பு வைப்பதற்காக முதற்கட்டமாக 1,000 தடுப்பூசிகள் கேட்டு, சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அவை வந்து சேரவில்லை.

இது குறித்து, நகர் நல அலுவலர் டாக்டர் வி. சுப்பிரமணியன் கூறியது:மாநகராட்சிக்கு உள்பட்ட 17 மருத்துவமனைகளுக்கும் ஹெச்1என்1 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவை வழங்கப்படும்பட்சத்தில் மாநகராட்சி மருத்துவமனைகளில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாநகராட்சி தயாராக உள்ளது. இதுவரை மாநகராட்சி பகுதியில் யாரும் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை என்றார்

 

சுகாதார மேம்பாடு திட்டம் செயல்படுத்த முடிவு

Print PDF

தினமலர் 16.09.2010

சுகாதார மேம்பாடு திட்டம் செயல்படுத்த முடிவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மற்றும் இணைய உள்ள பகுதிகளை சேர்த்து சுகாதார மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தை மாதிரி திட்டமாக தயாரித்து, குறிப்பிட்ட பகுதி யில் மட்டும் செயல்படுத்தப்படும். அதில் ஏற் படும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்த்த பின், முழுமையாக செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் புனே சென்று பயிற்சி பெற்றுள் ளனர். அங்கு பயிற்சி தந்த பிரதிநிதிகள், திருப்பூருக்கு நேரில் வர உள்ளனர். அப்போது, திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதியை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்க உள்ளனர். தற்போது 52 வார்டுகளுடன் மட்டுமே உள்ள திருப்பூர் மாநகராட்சியுடன், வரும் 2011ல் நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சி, செட்டி பாளையம், மண்ணரை, தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளை யம், நெருப்பெரிச்சல், முத்தணம்பாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் இணைய உள்ளன.

திருமுருகன்பூண்டி பேரூராட்சியையும் திருப் பூருடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், மாநகராட்சியின் பரப்பளவு இன் னும் அதிகரிக்கும். மாநகராட்சியில் தற்போது தினமும் 450 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஒருங்கிணைக்கப்படும் மாநகராட்சியில், 800 டன்களுக்கு மேல் குப்பை சேகரிக்கப்படும்; கால்வாய் சுத்திகரிப்பு பணியும் அதிகமாகும். புனேவில் வழங்கப்பட்ட பயிற்சியின் அடிப் படையில், மாநகராட்சி அதிகாரிகள் திட்ட அறிக்கை தயாரித்து கமிஷனரிடம் சமர்ப்பித்துள் ளனர். நிறைவேற்ற சாத்தியமுள்ள திட்டங்கள் குறித்து பரிசீலனையும் செய்து வருகின்றனர்.

கமிஷனர் ஜெயலட்சுமி கூறுகையில், ""திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தற்போதுள்ள உள் கட்டமைப்பு வசதி; இணைக்கப்படும் மற்ற நகர பகுதிகளில் உள்ள சுகாதார மேம்பாட்டு வசதி; கழிவு அகற்றும் விதம், குப்பை சேகரிப்படும் விதம் என பல அம்சங்களும் பரி சீலிக்கப்படுகின்றன. திருப்பூருடன் இணைக் கப்படும் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகிறது. இதில் செயல்படுத்த சாத்தியமுள்ள திட்டங் கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப் படும். நல்ல திட்டத்தை, மாதிரி திட்டமாக வடிவமைத்து, குறிப்பிட்ட சிறிய பகுதியில் நடைமுறைப்படுத்தி பார்க்க வேண்டும்; அதில் உள்ள சாதக, பாதக விஷயங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப மாற்றம் செய்து, சுகாதார மேம் பாட்டு திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

 


Page 168 of 519