Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சோழிங்கநல்லூரில் 5 இடங்களில் கழிவுநீர் உந்துநிலையம்

Print PDF

தினகரன் 09.09.2010

சோழிங்கநல்லூரில் 5 இடங்களில் கழிவுநீர் உந்துநிலையம்

துரைப்பாக்கம், செப். 9: சோழிங்கநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சம்பத் முன்னிலை வகித்தார். துணை தலைவர் உமாபதி வரவேற்றார். பொது நிதியில் இருந்து அண்ணா தெரு, பூபதிநகர் மெயின்சாலை மற்றும் குறுக்கு தெருக்களில் சிமென்ட் சாலை அமைப்பது, மினி காம்பாக்டர் லாரிக்கு எம்.எஸ் தகடுகளிலான 1100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 குப்பை தொட்டிகள் வாங்குவது, பாதாள சாக்கடை திட்டத்துக்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பக்கிங்காம் கால்வாய், விஜிபி அவென்யூ அருகில், உழவன் கேணி குளம் அருகில் உள்ளிட்ட 5 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சுகாதாரக்கேட்டில் சிக்கிய ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி

Print PDF

தினமணி 08.09.2010

சுகாதாரக்கேட்டில் சிக்கிய ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி

திருவாடானை, செப். 7: திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் மழை நீர் செல்லும் கால்வாய், கழிவுநீர்க் கால்வாய்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சி நிர்வாகத்தால் கடந்த வாரம் தெருக்கள், சாலைகள், கடைத் தெருவில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள், கடைகள் ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இதனால் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள், மழை நீர் செல்லும் கால்வாய்கள் சேதம் அடைந்து, தற்போது அவற்றை சரிவர சுத்தம் செய்யாமலும் அப்படியே விட்டு சென்று விட்டனர. இதன் காரணமாக சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கியும், கழிவுநீர் வெளியே செல்ல முடியாமலும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம், கொசுக்கள் தொல்லையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சி செயல் அலுவலர் இளவரசி கூறியது:

தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்து கழிவுநீர் ஓடுவதற்கு வழிவகை செய்யபடும் என்று தெரிவித்தார்.

 

கொசுவை ஒழிக்க மும்முரம் வீடுகளில் ஸ்டிக்கர் வார்டுதோறும் கமிட்டி

Print PDF

தினகரன் 08.09.2010

கொசுவை ஒழிக்க மும்முரம் வீடுகளில் ஸ்டிக்கர் வார்டுதோறும் கமிட்டி

சென்னை, செப். 8: கொசு ஒழிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நடந்தது. இதில் திரையரங்கு உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய, "கொசுக்களை கட்டுப்படுத்துவது நம் கையில்" என்ற ஸ்லேடை வெளியிட்டார்.

அதை திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பெற்றுக் கொண்டார். வீடுகளில் ஒட்டும் ஸ்டிக்கரை அமைச்சர் வெளியிட மேயர் மா.சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். கொசு ஒழிக்கும் பணியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான சுகாதார தூதுவர் என்ற அடையாள அட்டையையும் அமைச்சர் வெளியிட்டார். இந்த ஸ்டிக்கர்கள் சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் ஒட்டப்படவுள்ளது.

வார்டுதோறும் கொசு ஒழிப்பு கமிட்டி

கொசு ஒழிப்பு பணியில் 240 ஊழியர்கள் இன்னும் 10 நாளில் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளனர். திருமணகூடங்கள், கட்டுமானப் பகுதிகளில் தேவையில்லாமல் வரும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் கொசு உற்பத்தியாகிறது. இவற்றை முறையாக அப்புறப்படுத்தாத திருமணக் கூடங்களுக்கு மாநகராட்சி அபராதம் விதிக்கும்.

சென்னையில் 155 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் தலைமையில் மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும். அந்த குழுவினர் மாதம் இருமுறை கூடி கொசு ஒழிப்பு மற்றும் வார்டுகள் மேம்பாடு பணிகள் குறித்து விவாதித்து ஆலோசனை வழங்குவார்கள். 155 வார்டுகளிலும் இந்த குழு அமைக்கப்படும் என்று மேயர்

 


Page 171 of 519