Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசு ஒழிப்பு பணி மும்முரம்

Print PDF

தினமலர் 06.09.2010

கொசு ஒழிப்பு பணி மும்முரம்

தேனி : வீரபாண்டி பேரூராட்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சின்னசாமி, சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன், பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் மேற் பார்வையில் கொசு ஒழிப்பு பணிகள் நடக்கிறது.

வீரபாண்டி பேரூராட்சி பகுதி கிராமங்களில் புகை போக்கி இயந்திரம் மற்றும் கைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கள் மற்றும் லார்வா ஒழிப்பு பணிகள் நடந்தன. பொதுமக்கள் கழிவுநீர் வடிகால்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என செயல் அலுவலர் நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சுகாதார சீர்கேட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

Print PDF

தினமணி 06.09.2010

சுகாதார சீர்கேட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மதுராந்தகம்,செப்.5: மதுராந்தகம், ஞானகீரிஸ்வரன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி சுகாதார சீர் கேடு அடைந்து வருகிறது.

எனவே பேரூராட்சி நிர்வாகம், குப்பை சேகரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட ஞானகீரிஸ்வரன்பேட்டையில் (மேலவலம்பேட்டை) கடந்த 2002-ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. அன்று முதல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே அப் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இக் குடோனில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்படாமலும், திறந்த வெளியில் கொட்டப்படுவதாலும், இப் பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது.

மேலும், திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார நிலைய வளாகத்தில் சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு எளிதில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இக் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரித்துவருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக இப் பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பேரூராட்சி குப்பைகள் சேகரிக்கும் குடோனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

கைலாஷ் காலனியில் ரூ1.5 கோடி செலவில் நவீன பொதுக்கழிப்பிடம் மேயர் சகானி திறந்தார்

Print PDF

தினகரன் 06.09.2010

கைலாஷ் காலனியில் ரூ1.5 கோடி செலவில் நவீன பொதுக்கழிப்பிடம் மேயர் சகானி திறந்தார்

புதுடெல்லி, செப். 6: தெற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் காலனி மார்க்கெட்டில் நவீன கழிப்பிடத்தைக் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சி மற்றும் கைலாஷ் காலனி மார்க்கெட் சங்கம் ஆகியவை சார்பில் ரூ1.5 கோடி செலவில் நவீன கழிப்பிட வளாகத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டு, தனியார் நிறுவனம் வசம் பணி ஒப்படைக்கப்பட்டது

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொதுக் கழிப்பிட திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. மேயர் சகானி கலந்துகொண்டு கழிப்பிடத்தை திறந்து வைத்தார்.விழாவில், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கழிப்பிட வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் வகையில் சூரிய ஒளி மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பார்வையற்றவர்களுக்கென தனியாக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டி, செயல்படுத்தி, ஒப்படைக்கும் திட்டத்தின் அடிப்படையில் இந்த கழிப்பிட வளாகத்தை தனியார் நிறுவனம் கட்டியுள்ளது. கழிப்பிட வளாகத்தில் விளம்பரங்களை வெளியிட்டு அந்நிறுவனம் வருமானத்தை ஈட்டும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 


Page 173 of 519