Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீர் வால்வு பகுதியில் கழிவுநீர் அதிரடியாக அகற்றம்

Print PDF

தினகரன் 31.08.2010

குடிநீர் வால்வு பகுதியில் கழிவுநீர் அதிரடியாக அகற்றம்

ஊத்துக்கோட்டை, ஆக.31: ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் இரண்டரை லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை உட்பட சுற்றுப்புற பகுதி வீடு, கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

நீர்த் தேக்க தொட்டியின் அருகில் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையின் செப்டிக் டேங்க்கில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தொட்டிக்கு கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது.

இதனால், அங்குள்ள குடிநீர் தொட்டி கேட் வால்வு பொருத்தப்பட்ட பகுதியில் கழிவு நீர் கலந்து புழுக்கள் உற்பத்தி துர்நாற்றம் வீசியது. தண்ணீர் திறந்து விடும்போது குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, செப்டிக் டேங்க் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுபற்றி, கடந்த 22ம் தேதி தினகரன்நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழே உள்ள கேட் வால்வு தொட்டியில் தேங்கிய கழிவுநீரை நேற்று பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் அகற்றினர். பேருந்து நிலைய கழிவறையை மூடினர். அங்கு, புதிதாக கட்டப்பட்ட நவீன கட்டண கழிவறையும் திறக்கப்பட்டது.

 

தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் பஸ் நிலையத்தில் பாக்கெட் குடிநீர் பறிமுதல்

Print PDF

தினகரன் 31.08.2010

தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் பஸ் நிலையத்தில் பாக்கெட் குடிநீர் பறிமுதல்

தாம்பரம், ஆக. 31: தாம்பரம் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் பீர்க்கன்காரணை, பல்லாவரம் பஸ் நிலையம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பதித்த பாலிதீன் பாக்கெட்டுகளில் கிணற்று நீரை அடைத்து விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

தாம்பரம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் ஊழியர்கள், தாம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை, ஓட்டல், குளிர்பான கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலி குடிநீர் பாக்கெட், தயாரிப்பு தேதி குறிப்பிடாத குளிர்பானம், பாதா மில்க் ஆகியவை 60 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

தொடர்ந்து காலாவதியான குடிநீர் பாக்கெட், குளிர்பானம் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

வியாசர்பாடி பகுதியில் வயிற்றுப்போக்கு குளோரின் மாத்திரைகள் வீடு வீடாக வினியோகம் மாநகராட்சி தீவிர நடவடிக்கை

Print PDF

தினகரன் 31.08.2010

வியாசர்பாடி பகுதியில் வயிற்றுப்போக்கு குளோரின் மாத்திரைகள் வீடு வீடாக வினியோகம் மாநகராட்சி தீவிர நடவடிக்கை

தண்டையார்பேட்டை, ஆக. 31: வியாசர்பாடி பகுதியில் குடிநீரில் மாசு கலந்ததால் வயிற்று போக்கு ஏற்பட்டு 75 பேர், தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வீடுவீடாக குளோரின் மாத்திரை வினியோகிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால், சாலையோரங்களிலும் பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியானது. இந்நிலையில், வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 40 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி, கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த மேலும் 35 பேர் வயிற்று போக்கு நோயால் பாதிக்கப்பட்டு, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் சேர்க்கப்பட்டனர். அவர்களையும் சேர்த்து 75 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களுக்கு காலரா தாக்கியுள்ளதா? என்பதை அறிய, ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் குடிநீரில் ஏற்பட்ட மாசு காரணமாகவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வாரியமும், மாநகராட்சி சுகாதாரத்துறையும் இணைந்து வீடுவீடாக குளோரின் மாத்திரை வழங்குகின்றனர். மேலும் கன்னிகாபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்தும் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

 


Page 177 of 519