Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசு ஒழிப்பில் மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினமலர் 27.08.2010

கொசு ஒழிப்பில் மாநகராட்சி தீவிரம்

சென்னை: கூவம் ஆற்றின் நடுவே வேலி அமைத்து கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணா நகரில் எம்.ஜி.ஆர்., காலனி மற்றும் நடுவங்கரை அருகே கூவம் ஆற்றில் உள்ள நடைபாலத்தில் வேலி வலை போட்டு நீரில் அடித்து வரும் ஆகாயத் தாமரைகள் மற்றும் கொசுப் புழுக்களை அகற்றி கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. சென்னை முழுக்க கொசுப் புழு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்கு 350 கைத்தெளிப்பான்கள், 75 இயந்திர தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 236 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

 

கொசு ஒழிப்பு பணி தீவிரம் கூவம் ஆற்றில் ஆகாய தாமரை அகற்ற மூங்கில் தடுப்பு வேலி

Print PDF

தினகரன் 27.08.2010

கொசு ஒழிப்பு பணி தீவிரம் கூவம் ஆற்றில் ஆகாய தாமரை அகற்ற மூங்கில் தடுப்பு வேலி

சென்னை, ஆக.27: அண்ணாநகர் பகுதி கூவம் ஆற்றில் மூங்கில் தடுப்பு வேலி அமைத்து ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்தி, கொசுப் புழுக்களை அழிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் உருவாகும் ஆகாயத் தாமரையால் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.

மாநகராட்சி சுகாதாரப்பிரிவு மற்றும் மலேரியா பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் சென்று ஆகாயத் தாமரைகளை அகற்றியும், மருந்து தெளித்தும் கொசுப்புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வழித் தடங்களில் உருவாகும் ஆகாயத் தாமரைகள், நீரில் அடித்து வரப்படுவதால் பல இடங்களில் நீர்தேக்கம் ஏற்பட்டு கொசுப் புழுக்கள் உருவாகிறது.

இதை தடுப்பதற்காக புறநகர்ப்பகுதியான அரும்பாக்கம் நியூ காலனி, அண்ணாநகரில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் நடுவங்கரை பகுதியிலுள்ள கூவம் ஆற்றின் குறுக்கே மூங்கில் தடுப்பு வேலிகளை அமைத்து ஆகாயத் தாமரைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். கொசுப் புழுக்களை அழிக்க மருந்தும் தெளித்தனர்.

இந்த பணியை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், உதவி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பிரபாவதி மேற்பார்வையிட்டனர்.

அண்ணாநகர் பகுதி கூவம் ஆற்றில் மூங்கில் தடுப்பு வேலி அமைத்து ஆகாய தாமரை அகற்றப்படுகிறது.

 

துர்நாற்றம் வீசிய குடிநீர் தேக்க தொட்டி சுத்தமானது

Print PDF

தினகரன் 27.08.2010

துர்நாற்றம் வீசிய குடிநீர் தேக்க தொட்டி சுத்தமானது

குன்னூர், ஆக.27: குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராமத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பேரூராட்சி சார்பில் குடிநீர் தேக்க தொ ட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே குடிநீரில் அதிக துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் பெரிதும் அவதியுற்று வந்த னர்.

துர்நாற்றம் வீசிய குடிநீரை பயன்படுத்திய 15க்கும் மேற்பட்டோருக்கு கடந்த இரு தினங்களாகவே வாந்தி, பேதி ஏற்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த மக்கள், நேற்று காலை குடி நீர் தொட்டி யை பார்வையிட்டனர். அதில் உருவம் தெரியாத நிலையில் அழுகிய நிலையில் உருவம் காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி தலைவருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. பேரூராட்சி தலைவர் சுரேஷ், செயல் அலுவலர் ஆல்துரை ஆகியோர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று குடிநீர் தேக்க தொட்டியை பார்வையிட்டனர். பின்னர் குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர். வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க தொட்டி மீது மேல் மூடி போடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்த தொட்டியில் உள்ள குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். முழுமையாக சுத்தம் செய்த பின் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்.

 


Page 181 of 519