Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வார்டுகளில் சுகாதார சீர்கேடு

Print PDF

தினமணி 26.08.2010

துப்புரவுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வார்டுகளில் சுகாதார சீர்கேடு

ஒசூர், ஆக. 24: ஒசூர் நகராட்சியில் உள்ள 10 வார்டுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது முதல் நகராட்சிக்கு கூடுதல் செலவினங்கள் ஆவதுடன், துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

÷1994-ல் ஒசூர், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது 47 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2001-ல் நகராட்சி ஆணையராக இருந்த சந்தானம், 117 பேரை துப்புரவுப் பணிக்கு நியமித்தார். ÷கடந்த சில ஆண்டுகளாக ஒசூர் நகராட்சியில் 199 துப்புரவுப் பணியாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களை கண்காணிக்க 10 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 6 ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்களைக் கொண்டு நகரில் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் 2008-ல் ஒசூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 10 வார்டுகளை தனியார் வசம் ஒப்படைப்பது எனவும், 3 மாதம் இந்த 10 வார்டுகளில் தனியார் துறையினர் சுகாதாரப் பணிகளை முழுமையாக செய்தால், மீண்டும் பணியை கால நீட்டிப்பு செய்வது எனவும் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ÷தனியார் துறையினர் மேற்கொண்ட துப்புரவுப் பணிக்காக மாதம்தோறும் ரூ..7 லட்சம் நிதி வழங்கப்பட்டு வந்தது. 2009 நவம்பர் முதல் தனியாருக்கு நிதி வழங்குவதை நகராட்சி நிறுத்தியது.

÷இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட 10 வார்டுகளிலும் துப்புரவுப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. குறிப்பாக இந்திரா நகர், வெங்கடேஷ் நகர், தாயப்பா தோட்டம், முத்தூராயன் ஜுபீ, ராஜகணபதி நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் குப்பைகள் சரிவர எடுக்கப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

 

காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினகரன் 26.08.2010

காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

தென்காசி, ஆக. 26: தென்காசியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோத னை யில் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புடைய காலாவதியான தண் ணீர் பாக்கெட்டுகள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

தென்காசி நகராட்சி ஆணையாளர் செழியன், உணவு பொருள் ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அதிகாரி டெல்விஸ்ராய், பயிற்சி உணவு ஆய்வாளர்கள் மகாராஜன், முகமது இஸ்மா யில் காசிம், சுகாதார மேற்பார்வையாளர்கள் முகமது காசிம், தங்கவேலு ஆகியோர் டாஸ்மாக் பார் உள்பட நகர் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர். இதில் ரூபாய் 30 ஆயி ரம் மதிப்புடைய தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

களக்காடு:

திருக்குறுங்குடி அரசு சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாகுல்ஹமீது தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் களக்காடு, ஏர்வாடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் காலாவதியான 1,750 தண்ணீர் பாக்கெட்டுகள், ஒரு லிட்டர் கேன்கள் 10 ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

 

நாகர்கோவிலில் காலாவதி தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினகரன் 26.08.2010

நாகர்கோவிலில் காலாவதி தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

நாகர்கோவில், ஆக.26: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகராட்சி பகுதிகளில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத்துறையினர் அழித்தனர்.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில், விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளின் தரம் குறித்து நகர் நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜா தலைமையில் சோதனை நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்கள் சிதம்பர ராமலிங்கம், பகவதி பெருமாள், மணிகண்டன், மாதவன்பிள்ளை, கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். 30க்கும் மேற்பட்ட கடை களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 கடைகளிலிருந்து உற்பத்தி தேதி குறிப்பிடாத, .எஸ்.ஐ முத்திரை இல்லாத மற்றும் காலாவதியான மொத்தம் 32 மூடை தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை கடைகள் முன்பே கொட்டி அழிக்கப்பட் டன.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

 


Page 183 of 519