Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தென்காசி டாஸ்மாக் பார்களில் காலாவதியான தண்ணீர் பாக்கெட் பறிமுதல்

Print PDF

தினமலர் 26.08.2010

தென்காசி டாஸ்மாக் பார்களில் காலாவதியான தண்ணீர் பாக்கெட் பறிமுதல்

தென்காசி : தென்காசி டாஸ்மாக் பார்களில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் மோகன் உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சி கமிஷனர் செழியன் தலைமையில் உணவு ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அலுவலர் டெல்விஸ்ராய், உணவு ஆய்வாளர் (பயிற்சி) மகராஜன், துப்புரவு ஆய்வாளர் சேகர், மேற்பார்வையாளர்கள் காசிம், தங்கவேல் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தென்காசி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் காலாவதியான தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் காலாவதியான தண்ணீர் பாக்கெட் மூடைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று இனி காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சில கடைகளிலும் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு: 11 ஏக்கரில் புதிய இடம் தேர்வு

Print PDF

தினமலர் 26.08.2010

குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு: 11 ஏக்கரில் புதிய இடம் தேர்வு

திண்டுக்கல்:பொன்மான்துறை புதுப்பட்டியில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வத்தலக்குண்டு ரோட்டில் புதிய குப்பை கிடங்கு உருவாக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திண்டுக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் என நாள் ஒன்றுக்கு 10 டன் குப்பை சேர்கிறது.இந்த குப்பைகள் திண்டுக்கல் அருகேயுள்ள பொன்மான்துறைபுதுப்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பகுதியில் கொட்டப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை கிடங்கை பூட்டினர்.தங்கள் கிராமத்தில் ஏற்கனவே விடப்படும் கழிவு நீரால் விளை நிலமும்,மக்கள் நலனும் பாதிக்கப் பட்டுள்ளது என்றும், மேலும் ஓட் டல் கழிவுகள், அழுகிய காய்கறிகளை இங்கு கொட்டுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குப்பை கொட்டுவதன் நோக்கமே குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்வதே என்று நகராட்சி நிர்வாகம் கூறி பொதுமக்கள் கருத்தை ஏற்க மறுத்தனர். தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் குடிநீரை பம்பிங் செய்யும் வத்தலக்குண்டு ரோட்டில் 11 ஏக்கரில் குப்பை கிடங்கு ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

 

காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினமணி 28.04.2010

காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

ஆரணி, ஆக.24: சேத்துப்பட்டு கடைகளில் இருந்த காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

சேத்துப்பட்டு பஜாரில் உள்ள குளிர்பானக் கடைகளில், செய்யாறு சுகாதாரத்துறை துணை இயக்குநர் தேவபார்த்தசாரதியின் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட் மூட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மீண்டும் இவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


Page 184 of 519