Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லை மாவட்டத்தில் காலாவதியான 20 ஆயிரம் தண்ணீர் பாக்கெட் பறிமுதல்

Print PDF

தினகரன் 25.08.2010

நெல்லை மாவட்டத்தில் காலாவதியான 20 ஆயிரம் தண்ணீர் பாக்கெட் பறிமுதல்

நெல்லை, ஆக. 25: நெல்லை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 20 ஆயி ரம் தண்ணீர் பாக்கெட்டு கள் நேற்று பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற் கை பாண்டியன், உணவு கலப்பட தடைசட்ட இணை இயக்குனர் சதா சிவம் ஆகி யோர் தமிழகம் முழுவதும் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். அதனடிப்படையில் நெல் லை மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் மீரான் மைதீன் தலைமையில் 10 குழுக்கள் கடைகளில் சோத னை நடத்த அமைக்கப்பட்டன.

துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருணாசலம், வட்டார மருத் துவ அதிகாரிகள் அகமது, பிரவீன், பாலச்சந்தர், உணவு ஆய்வாளர்கள் மாரியப்பன், கணேசன், சங்கரன், சுகாதார ஆய்வாளர் பிரைட்டன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜின்னா, அக்பர் அலி, ஜான் ஆகி யோர் அடங்கிய குழுக்கள் நெல்லை மாவட்டம் முழு வதும் நேற்று காலை முதலே அதிரடி ஆய்வு மேற்கொண் டது.

தாழையூத்து, சங்கர்நகர், பணகுடி, மானூர், முக் கூடல், கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, களக்காடு, ஏர் வாடி, வள்ளியூர் உள் ளிட்ட பகுதிகளில் 519 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் காலாவதியான மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தண்ணீர்பாக்கெட்டுகள் 14 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட் டன. இதன் மதிப்பு ரூ.17 ஆயிரத்து 400 ஆகும். மேலும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத 208 தண்ணீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 61 ஆகும். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அந்தந்த பகுதிகளில் அழிக்கப்பட்டன.

மாநகராட்சி: நெல்லை மாநகராட்சியில் உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங் கம், கலியனான்டி, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, பரமசிவம் ஆகி யோர் அடங்கிய குழு சந் திப்பு பஸ் நிலையம், .மு. சாலை ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது.

இதில் வசந்தா நகரில் மொத்தமாக 61 மூடை தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகராட்சி யில் 6 ஆயிரத்து 100 தண் ணீர் பாக்கெட்டுகளும், 80 ஜூஸ் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

காவல்கிணறு சந்திப்பில் உள்ள கடையில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

 

இனாம் கரூர் 4 வார்டுகளில் தனியாரிடம் துப்புரவு பணி

Print PDF

தினகரன் 25.08.2010

இனாம் கரூர் 4 வார்டுகளில் தனியாரிடம் துப்புரவு பணி

கரூர், ஆக. 25: இனாம் கரூர் நகராட்சியில் நான்கு வார்டுகளில் தனியாரிடம் துப்புரவுப் பணிகள் ஒப்படைக்கப்பட இருக்கிறது. கரூர் அருகே உள்ள தாந்தோணி நகராட்சியில் துப்புரவு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து தனியாரிடம் துப்புரவு பணிகளை விடுவதற்கு கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி நிர்வாகங்கள் முயற்சி மேற்கொண்டன. இனம் கரூர் நகராட்சியில் வார்டு 6, 7, 8, மற்றும் 9 ஆகிய நான்கு வார்டுகளில் தனியாரிடம் துப்புரவு பணி மேற்கொள்ள வருடாந்திர ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் குறைந்த ஒப்பந்த புள்ளி கொடுத்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு மாதந்தோறும் ஒப்பந்த தொகையை நகராட்சி நிர்வாகம் வழங்கும். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவி கவிதா கணேசன் தெரிவித்தார்.

இனாம் கரூர் நகராட்சி வாங்கல் தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார் செட் பழுதடைந்துள்ளது. இந்த மோட்டாரை பழுதுபார்க்க ரூ.ஒரு லட்சத்து 65ஆயிரம் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இனாம் கரூர் நகராட்சியில் ஆழ்துளை கிணறு கைப்பம்புகளை பழுது பார்க்கும் மாதிரி உதிரி பாகங்கள் ரூ.90ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளதாகவும் நகர்மன்ற தலைவி கூறினார்.

 

ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை லாரி சிறைபிடிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை லாரி சிறைபிடிப்பு

நெல்லை, ஆக.25: ராமையன்பட்டிக்கு நேற்று குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி குப்பை லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.

நெல்லை மாநகராட்சி குப்பைகள், பாதாள சாக்கடை கழிவுகள் ராமையன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் கடந்த 10 ஆண்டு காலமாக கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து சாம்பலாகின. அதில் எழுந்த புகையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாதம் ஒன்று கடந்தும் குப்பைகளில் புகை இன்னமும் அணைவதாக இல்லை.

இந்நிலையில் மாநகராட்சி கடந்த ஒரு மாத காலமாக குப்பைகளை பாளை சீவலப்பேரி சாலையில் உள்ள பழைய இடத்தில் கொட்டி வந்தது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், நேற்று ஒரு லாரி குப்பைகள் மீண்டும் ராமையன்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராமையன்பட்டி ஊர் மக்கள் இதை அறிந்து, பஞ்சாயத்து அருகே லாரியை சிறை பிடித்தனர்.

களஞ்சியம் காட்டுராஜா, மஸ்தான் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லாரி டிரைவர் வேறு வழியின்றி அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு, மீண்டும் சீவலப்பேரி சாலைக்கு கொண்டு சென்றார்.

 


Page 186 of 519