Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோவில்பட்டி கடைகளில் தரமற்ற 20 கிலோ ஸ்வீட் பறிமுதல் சுகாதார அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன் 19.08.2010

கோவில்பட்டி கடைகளில் தரமற்ற 20 கிலோ ஸ்வீட் பறிமுதல் சுகாதார அதிகாரிகள் அதிரடி

கோவில்பட்டி, ஆக. 19: கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதி ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகளில் தரமற்ற இனிப்பு வகைகள் விற்பதாக நகராட்சி சுகாதார பிரிவினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், தர்மராஜ், வெங்கடேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கோவில்பட்டி பழைய பஸ்ஸ்டாண்ட் மெயின்ரோடு பகுதியில் ஸ்வீட்ஸ் ஸ்டால் மற்றும் பேக்கரி கடைகளில் அதிரடி சோதனை செய்தனர்.

சோதனையின்போது, கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகப்படியான கலர் பொடிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தனர்.

மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்பு, கார வகைகளின் தரம் குறித்து சோதனை நடத்தினர். இதில் தரமற்ற இனிப்பு வகைகள் என மொத்தம் 20 கிலோ இனிப்பு வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய் தனர். கடைகளில் காலாவதியான இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றதுடன், தரமான உணவு பொருட்களை விற்குமாறும், இனிப்பு வகைகளில் அதிகப்படியான வண்ண பொடிகளை சேர்க்க கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:41
 

‘சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு

Print PDF

தினகரன் 19.08.2010

‘சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு

சென்னை, ஆக.19: இந்திய கத்தோலிக்க சுகாதார கூட்டமைப்பு மற்றும் ரீச்தொண்டு நிறுவனங்கள் சார்பில், தேசிய அளவில் காசநோயை தடுப்பது குறித்த ரவுண்டு 9’ என்ற திட்டம் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தலைமை வகித்தார். மாநில காசநோய் தடுப்பு அதிகாரி உதயா சங்கர், தி யூனியன் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குனர் நெவின் வில்சன், ‘இந்துபத்திரிகையின் இயக்குனர் நளினி கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி குகநாதன், நடிகை ரோகிணி, கத்தோலிக்க சுகாதார கூட்டமைப்பு தலைவர் அன்பரசி, இயக்குனர் செபஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், நிருபர்களிடம் சுப்புராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயை குணமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் ஆண்டுக்கு 5,600 பேர் இறக்கின்றனர். ஹெச்ஐவி வந்தால் பயந்தாவது சிகிச்சை எடுக்கின்றனர். ஆனால், காசநோயின் ஆபத்து தெரியாமல் சிகிச்சையை உதாசீனப்படுத்துகின்றனர்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர் வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்கும் டாட்ஸ்என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவருக்கும் ரூ.6 ஆயிரம் செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தில் 11 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் பாதிப்பு குறையவில்லை. தொடர்ந்து 6மாதங்கள் மாத்திரை சாப்பிட வேண்டும். 17 சதவீதம் பேர் தொடர்ந்து சாப்பிடாமல் விட்டுவிடுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் 2 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு ரூ.2 லட்சம் செலவாகும்.

தமிழகத்தில் கரூர், நாமக்கல், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் காசநோய் கிருமி பாதிப்பு உள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு ஹெச்ஐவி பாதிப்புள்ளது. இந்நோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது அரசு திட்டங்கள் மூலமும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமும் செய்யப்படுகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ரவுண்டு 9’ திட்டம் மூலம் இதன் தாக்கம் குறையும்.

நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அடங்காத சூப்பர் பக்கிருமி குறித்து விரிவான ஆய்வு நடத்த விஞ்ஞானிகள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆய்வு அறிக்கை வந்தவுடன் பல உண்மைகள் தெரியவரும். ஊழியர்கள் நியமனத்தில் பாதிப்பு இருப்பதால் திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. அதை போக்க 800 டாக்டர்களும், 500 ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.

Last Updated on Thursday, 19 August 2010 08:41
 

மலேரியா நோய் ஒழிப்பு ஊழியர்கள் பற்றாக்குறை

Print PDF

தினமலர் 19.08.2010

மலேரியா நோய் ஒழிப்பு ஊழியர்கள் பற்றாக்குறை

கரூர்: கரூர் மாவட்ட நகராட்சிகளில் பற்றாக்குறை ஊழியர்களால், மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கை மெத்தனமாக உள்ளது.பருவநிலை மாறும்போது கொசு ஒழிப்பு நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கிறது. தண்ணீரில் மருந்து தெளிப்பது, புகை அடிப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அசுத்த நீரில் அனாபிளக்ஸ், க்யூலக்ஸ் கொசு உற்பத்தியாகிறது. இவை மலேரியா, யானைக்கால் நோய் உருவாக்குவதால், கட்டுப்படுத்த "பேக்டிசைடு' மருந்து சாக்கடையில் தெளிக்கப்படுகிறது.வீட்டில் தொட்டி மற்றும் பாத்திரங்களில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் "எடஃப்' கொசு மூலம் சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சல் உருவாகிறது. இந்த கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மையுள்ளவை. இதை கட்டுப்படுத்த "அபேட்' மருந்து தெளிக்கப்படுகிறது. புகை இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில், கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் குளித்தலை என நான்கு நகராட்சிகள் உள்ளன. கரூர் நகராட்சியை தவிர, மலேரியா ஒழிப்பு பணிக்கு பற்றாக்குறை பணியாளர்களுடன் மற்ற நகராட்சிகள் தவிக்கிறது. பல மாவட்டங்களில் விஷக்காய்ச்சல் வந்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாகவில்லை.கரூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கூறியதாவது:கரூர் நகராட்சியில் 15 மலேரியா திட்ட ஊழியர்கள், ஒரு கள உதவியாளர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு புகை இயந்திரங்கள் உள்ளன. ஆடி மாத காற்று காரணமாக புகை அடிக்கப்படாமல் இருந்து, நேற்று முதல் பயன்படுத்தப்படுகிறது.பொதுமக்களும் செப்டிக் டேங்க் குழாய் வாய் பகுதியை கொசுவலை துணியால் கட்டி வைப்பது, தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பது என ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து கொசு ஒழிப்பு மருந்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.குளித்தலை நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:குளித்தலை நகராட்சியில் ஏழு வாய்க்காலும் கழிவு நீர் சாக்கடையாக உள்ளதால், கொசு ஒழிப்பு நடவடிக்கை பெரிய சவாலாக உள்ளது. வாய்க்கால் தூர்வாரப்படாதது, ஆக்கிரமிப்பு ஆகிய பிரச்னைகளால் சுகாதார நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. மலேரியா பணியாளர்கள் 4 பேர் மட்டுமே உள்ளதால், ஊழியர் பற்றாக்குறையும் முக்கிய பிரச்னையாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இனாம் கரூர் நகராட்சியிலும் இரண்டு மலேரியா திட்ட ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். "10 தற்காலிக ஊழியர் நியமனத்துக்கு மாவட்ட பொதுசுகாதாரத்துறையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக,' நகராட்சி அலுவலர்கள் கூ றினர். தாந்தோணி நகராட்சியிலும் பற்றாக்குறை ஊழியர் பிரச் னை காரணமாக சுகாதார நடவடிக்கை மெத்தனமாக நடக்கிறது.

Last Updated on Thursday, 19 August 2010 08:40
 


Page 190 of 519