Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ரயில்வே குகை வழிப் பாதையில் தேங்கும் கழிவுநீர்: 20 ஆண்டுகளாக மேம்பாலம் கோரும் ஆம்பூர் மக்கள்!

Print PDF

தினமணி 18.08.2010

ரயில்வே குகை வழிப் பாதையில் தேங்கும் கழிவுநீர்: 20 ஆண்டுகளாக மேம்பாலம் கோரும் ஆம்பூர் மக்கள்!

ஆம்பூர்,​​ ஆக.​ 17:​ ஆம்பூர் நகராட்சி-பெத்லகேம் இடையே இருப்புப் பாதையைக் கடக்க மேம்பாலம் இல்லை.​ இதனால்,​​ ஆம்பூர் நகர மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

​ 20 ஆண்டுகால கோரிக்கை எப்போதும் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.​ ​

​ ஆம்பூர் நகரையும்,​​ பெத்லகேம் பகுதியையும் இரண்டாகப் பிரிக்கிறது அங்கு செல்லும் இருப்புப் பாதை.​ ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட 28 முதல் 31 வரை உள்ள 4 வார்டுகள்,​​ பெத்லகேம் பகுதியில் அமைந்திருக்கின்றன.​ இங்கு மட்டுமே சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.​ மேலும்,​​ பெத்லகேமுக்கு அப்பால் நாயக்கனேரி,​​ பனங்காட்டேரி ஆகிய மலை கிராமங்களும் உள்ளன.

​ பெத்லகேம் பகுதியில் மின்வாரிய அலுவலகம்,​​ துணை மின் நிலையம்,​​ தனியார் கல்லூரி,​​ 2 ஆங்கிலப் பள்ளிகள்,​​ நகராட்சி தொடக்கப்பள்ளி,​​ நிதியுதவி தொடக்கப்பள்ளி,​​ காவலர் குடியிருப்பு,​​ பெதஸ்தா மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன.​ இதுதவிர,​​ ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் அங்கு உள்ளன.

​ ​ இப்பகுதிக்குச் செல்வோர் ஆம்பூர் பஸ் நிலையத்துக்கு எதிரே இருக்கும் குறுகலான குகைவழிப் பாதையையே பயன்படுத்துகின்றனர்.​ இதில் இருசக்கர வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.

​ இதேபோல,​​ நான்கு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டுமெனில்,​​ ஆம்பூர் புறவழிச்சாலை அருகே இருப்புப் பாதைக்குக்கீழ் உள்ள மற்றொரு குகை வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

​ இரு குகைவழிப் பாதைகளும் தரை மட்டத்திலிருந்து தாழ்வாகவே அமைந்திருப்பதால்,​​ மழை நீர் மட்டுமல்லாது சாக்கடைக் கழிவு நீரும் இங்கு வந்து தேங்கி நிற்கிறது.

​ இதனால்,​​ நடந்து செல்லும் பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்தாமல்,​​ நேரடியாக இருப்புப் பாதையைக் கடந்து செல்கின்றனர்.​ சிலர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சரக்கு ரயிலின் அடியில் புகுந்து பாதையைக் கடக்கின்றனர்.​ இதனால் சிலர் விபத்துகளில் சிக்கி இறப்பதும் தொடர்கிறது.

​ பலத்த மழை பெய்யும் நேரங்களில் ஆம்பூரிலிருந்து பெத்லகேம் பகுதி முழுவதும் ​ துண்டிக்கப்பட்டுவிடும்.​

அதுபோன்ற சமயங்களில் மின்சாரத்துக்காக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.​ ​

​ ​ இரு குகைவழிப் பாதைகளிலும் மின்விளக்குகள் கிடையாது.​ இதனால் இப்பாதை எப்போதும் இருள்சூழ்ந்து காணப்படும்.​ இரவு நேரத்தில்,​​ இப்பாதையைக் கடப்பது மிகவும் ஆபத்தான செயல் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.

​ 20 ஆண்டு கோரிக்கை:​​ பெத்லகேம் பகுதிக்கு மேம்பாலம் அமைத்துத்தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.​ இது தொடர்பாக பொதுமக்களோடு,​​ மக்கள் பிரதிநிதிகளும் மத்திய,​​ மாநில அரசுகளுக்குப் பல முறை மனுக்கள் அனுப்பியுள்ளனர்.​

ஆனால்,​​ ரயில்வே துறையினர் இடத்தை ஆய்வு செய்ததோடு சரி;​ மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை..​ ​

​ ​ எனவே,​​ இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.​ நடவடிக்கை எடுக்குமா மத்திய,​​ மாநில அரசுகள்?

 

குளத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை

Print PDF

தினமணி 18.08.2010

குளத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை

திண்டுக்கல், ஆக. 17: திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் குமரன் திருநகரில் உள்ள குளத்தை தூய்மைப்படுத்தி நீராதாரத்திற்கு தேவையானதாக உருவாக்க மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ரவுண்டு ரோடு ராம்நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சங்க பொது மகாசபைக் கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் மருத்துவர் ஆர்.சண்முகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கே.பார்த்தசாரதி வரவேற்றார். தொழிலதிபர் வெங்கடாஜலம், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். துணைச் செயலாளர் பி.பசுபதி நன்றி கூறினார்.

ராம்நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேணடும், நகராட்சி சித்த மருத்துவமனைக்கு புதிய கட்டடப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் சீரமைத்து தார்ச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

எண்ணெய் கசிவு பிரச்னை நண்டு, நத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும் மக்களுக்கு மாநகராட்சி அறிவுரை

Print PDF

தினகரன் 18.08.2010

எண்ணெய் கசிவு பிரச்னை நண்டு, நத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும் மக்களுக்கு மாநகராட்சி அறிவுரை

மும்பை, ஆக.18: மீன் பிடிப்பதற்கு மழைக் காலத்தில் விதிக்கப்படும் தடை ஆகஸ்ட் 15ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் மீண்டும் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் பிடிக்கப்படும் மீன்களை பொது மக்கள் சாப்பிடலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே சமயத்தில் நண்டு, நத்தை, சிப்பி போன்ற கடற்கரை அருகே கிடைப்பனவற்றை தவிர்க்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர்.

மும்பை துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதியதை அடுத்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடல் பகுதி மாசுபட்டது. சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு, மும்பை மீன் மார்க் கெட்டுகளில் உள்ள 138 மீன் மாதிரி களை சேகரித்து மாநகராட்சி சோத னைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் எந்தவொரு மாதிரி யிலும் எண்ணை கூறுகள் காணப் படவில்லை. இதையடுத்து மீன்பிடிப்பதற்கான தடையை நீடிப்பதில்லை என மாநில மீன்வளத்துறை முடிவு செய்தது. எனினும் கடற்கரையோரம் மீன் பிடிக் காமல் ஆழமான பகுதிக்கு சென்று மீன் படிக்கும்படி மீன வர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. இது தொடர்பாக மீனவர்களை எச்சரிப்பதற்காக துர்பே, மாகுல், எலி பெண்டா, உரன் ஆகிய இடங்களில் படகுகளையும் மீன்வளத்துறை நிறுத்தி வைத்து இருக்கிறது.

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநில மீனவர் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் மேயர் ஸ்ரத்தா ஜாதவை சந்தித்து பேசினர். சங்கத்தின் தலைவர் தாமோதர் தண்டல் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "எண்ணெய் கசிவால் மீன்கள் மாசுபடவில்லை என்பது மாநகராட்சியின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்களை மீன் சாப்பிடும்படி மாநகராட்சி இப்போது வலியுறுத்த வேண்டும்Ó என்றார்.

 


Page 191 of 519