Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பை நகரமாக மாறிய கூடலூர்

Print PDF

தினமலர் 18.08.2010

குப்பை நகரமாக மாறிய கூடலூர்

பந்தலூர்:கூடலூர் குப்பை நகரமாக மாறி துர்நாற்றம் வீசி வருவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் - கேரளா - கர்நாடக மாநிலங்களின் முக்கிய சந்திப்பு பகுதியாகவும், சுற்றுலா பயணிகள் வரக்கூடிய முக்கிய நுழைவாயிலாகவும் கூடலூர் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி சமீபகாலமாக குப்பைகளால் சூழப்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பை அங்குள்ள தனியார் எஸ்டேட்டுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து தேவசோலை பேரூராட்சிக்குட்பட்ட செலுக்காடி பகுதியிலுள்ள வருவாய் துறைக்குட்பட்ட இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. ஆனால், அங்கும் குப்பை கொட்ட அப்பகுதி மக்களும், பேரூராட்சி நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால், அந்த இடத்தை வருவாய் துறையினர் பெற்றுதர வேண்டும் என கூடலூர் நகராட்சியில் அவசரக்கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட இடத்தை வருவாய் துறையினர் ஆய்வு செய்து, "குப்பை கொட்ட இப்பகுதியை வழங்கலாம்,' என பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இது குறித்து கண்டுக்கொள்ளாத நிலையில், கடந்த 5 நாட்களாக கூடலூர் நகரில் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே குவிந்துள்ளன. நகராட்சியில் 5 குப்பை லாரிகள் உள்ள நிலையில், குப்பைகளை வாரி சென்று வேறு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஏற்பட்டுள்ள கடும் துர்நாற்றம் கூடலூர் நகர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொற்று நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது. இதனை தடுக்க அவசர நடவடிக்கை அவசியம்.

 

டெங்கு பாதிப்பு 254 ஆனது நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் குழு

Print PDF

தினகரன் 17.08.2010

டெங்கு பாதிப்பு 254 ஆனது நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் குழு

புதுடெல்லி, ஆக. 17: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. நோய்ப் பரவலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாநில சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை சுகாதாரத்துறை அமைச்சர் கிரண் வாலியா கேட்டுக் கொண்டுள்ளார். நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்காக அதிகாரிகள் குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 பேர் டெங்கு அறிகுறிகளுடன் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

இவர்களையும் சேர்த்து இந்த சீசனில் (ஜூனில் இருந்து) டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி சுகாதார அலுவலர் என்.கே.யாதவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஜாமியா நகரைச் சேர்ந்தவர்கள் டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியை கவனிப்பதற்கென நோய் தடுப்பு நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

இதனிடையே, டெங்குவின் தாக்கம் தீவிரமானதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் கிரண் வாலியா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

காமன்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாநில சுகாதாரத் துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கிரண் வாலியா கேட்டுக்கொண்டார். கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி க்கை அதிகரித்து வருவதற்கு, காமன்வெல்த் போட்டி கட்டுமானப் பணிகளும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மைதானப் பணிகள் நடைபெறும் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழை நீர் தேங்கியுள்ளதால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநில மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழுவை கேட்டுக் கொண்டுள்ளேன். நோய் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை அக்குழுவினர் வழங்குவார்கள். இதுதவிர, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கி விடும்படி சுகாதாரத் துறை செயலாளர் ராஜேந்திர குமாரையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

டெங்குவால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தீவிரமாக கவனித்து வருகிறேன். டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதேவேளையில், வீட்டையும் பொதுமக்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்களை உற்பத்தி பண்ணும் வகையில் கழிவுநீரை வீடுகளில் தேங்க விடக்கூடாது. இவ்வாறு கிரண் வாலியா கூறினார்.

 

பெரம்பூரில் பதுக்கல் 500 கிலோ டீத்தூள் சிக்கியது கலப்படம் செய்ததா? என ஆய்வு செய்ய உத்தரவு

Print PDF

மாலை மலர் 13.08.2010

பெரம்பூரில் பதுக்கல் 500 கிலோ டீத்தூள் சிக்கியது கலப்படம் செய்ததா? என ஆய்வு செய்ய உத்தரவு

பெரம்பூரில் பதுக்கல்
 
 500 கிலோ டீத்தூள் சிக்கியது
 
 கலப்படம் செய்ததா? என ஆய்வு செய்ய உத்தரவு

பெரம்பூர், ஆக. 13- பெரம்பூர் பகுதியில் உள்ள டீக்கடைகளில் போலி டீத்தூள் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆய்வாளர் பால்பாண்டியன் டீக்கடைகளில் ஆய்வு நடத்தினார். அங்கிருந்த டீத்தூள்களை கைப்பற்றி இதை சப்ளை செய்வது யார்? என்று கேட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது பெரம்பூர் கண்ணன் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் டீத்தூள் சப்ளை செய்தது தெரிய வந்தது. அவரது வீட்டை சோதனையிட்டபோது 500 கிலோ டீத்தூள் சிக்கியது.

இவை நல்ல தேயிலையா? அல்லது கலப்படம் செய்யப்பட்டதா? என்பதை அறிய டீத்தூளின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் உண்மை நிலை தெரிய வரும்.

 


Page 192 of 519