Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மலேரியா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் 33 கட்டுமான இடங்களில் வேலையை நிறுத்த மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினகரன் 13.08.2010

மலேரியா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் 33 கட்டுமான இடங்களில் வேலையை நிறுத்த மாநகராட்சி உத்தரவு

மும்பை, ஆக.13: மும்பை யில் மலேரியாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, மலேரியா கட்டுப்பாடு விதி முறைகளை பின்பற்றத் தவ றியதற்காக 33 இடங்களில் கட்டுமான பணிகளை நிறுத்தும்படி மாநகராட்சி உத்தரவிட்டு இருக்கிறது.

கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் மூலமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின் றன. எனவே இதுபோன்று தண்ணீர் தேங்கிக் கிடப்பதை தவிர்க்க வேண்டும், கட்டு மான தொழிலாளர்க ளுக்கு மலேரியா சோதனை நடத்த வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறை களை பின்பற்றும் படி பில் டர்களுக்கு மாநக ராட்சி உத்தரவிட்டு இருந் தது.

ஆனால் இவற்றை பின்பற்ற பல பில்டர்கள் தவறி விட்டனர். இதற்காக 33 இடங்களில் கட்டுமான வேலைகளை நிறுத்தி வைத்து மாநகராட்சி உத்தர விட்டு இருக்கிறது. இவற்றில் 20 இடங்கள் கிழக்கு புறநகர் பகுதிகளிலும் 13 இடங்கள் மேற்கு புறநகர் பகுதிகளிலும் உள்ளன.

தென் மும்பை, கிழக்கு புறநகர் மற்றும் மேற்கு புற நகர் பகுதிகளில் கட்டுமான வேலைகள் நடைபெறும் இடங்களை பார்வையிடுவ தற்காக மாநகராட்சியால் நியமிக்கப்பட்டு இருந்த மூன்று சிறப்பு குழுக்கள் இந்த இடங்களை பார்வை யிட்டதை அடுத்து பில்டர் களுக்கு இந்த வேலை நிறுத்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

இந்த சிறப்பு குழுக்களில் சுகாதாரத்துறை, மற்றும் கட்டுமான திட்ட இலா காவை சேர்ந்த அதிகாரி களும் மற்றும் வார்டு அதி காரிகளும் இடம் பெற்றுள் ளனர். கடந்த சில நாட்களில் இந்த குழுவினர் கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் 939 இடங்களை பார்வையிட்டனர்.

வேலை நிறுத்த நோட் டீஸ் தவிர, நகரம் முழுவதும் மலேரியா தடுப்பு விதிமு றைகளை பின்பற்றாத மேலும் 635 கட்டுமான இடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பப்பட்டி ருக்கிறது. இவற்றில் 296 இடங்கள் மேற்கு புறநகர் பகுதியில் உள்ளன. 252 இடங்கள் தென் மும்பையிலும் 87 இடங்கள் கிழக்கு புறநகர் பகுதியிலும் உள்ளன.

மலேரியாவை கட்டுப் படுத்த மாநகராட்சியும் மாநில அரசும் கடுமையாக போராடி வருகின்றன. மாநகராட்சி புள்ளி விவரங் களின்படி கடந்த ஆண்டு டன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே மலேரியா நோய் பாதித்தவர்களின் எண் ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

 

சூடான சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு இலவசம் என்னென்ன உணவு வகைகள்?

Print PDF

தினகரன் 13.08.2010

சூடான சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு இலவசம் என்னென்ன உணவு வகைகள்?

சென்னை, ஆக.13: மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு, 5 நாட்களுக்கு தரமான பொருட்களில் தயாரிக்கப்பட்ட சிறப்பு சத்துணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சி, மாவட்ட குடும்ப நலத்துறையின் மூலம் மாநகரில் வாழும் சுமார் 52 லட்சம் மக்களில் 50 சதவிகிதம் பேருக்கு தாய்சேய் நல மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. சென்னையில் 93 நகர நலவாழ்வு மையங்கள், 11 மகப்பேறு மருத்துவமனைகள், 24 மணி நேர மருத்துவமனை 2 ஆகியவை மூலம் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இது தவிர 8 மண்டலங்களில் குறுகிய கால 24 மணி நேர அவசர மருத்துவமனை அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் சிக்கலான பிரசவம் (சிசேரியன் மூலம்) மேற்கொள்ளப்படுகிறது. 2009ம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை காட்டிலும், அதிக அளவில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இங்கு பிரசவத்திற்காக வரும் பெண்கள் நலிவுற்ற ஏழை, எளியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சியின் 24 மணி நேர மருத்துவமனைகளில் வருடத்தில் சுமார் 16 ஆயிரம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 5 ஆயிரம் பிரசவங்கள் சிசேரியன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஏழை பெண்களுக்கு சாதாரணமாகப் பிரசவம் என்றால் 3 நாட்கள், சிசேரியன் என்றால் 5 நாட்கள் மருத்துவமனையிலேயே மூன்று வேளையும் சிறப்பு சத்துணவு வழங்கப்படும். இது பிரசவித்த பெண்களிடம் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க உதவும் என்று மாநகராட்சி இந்த திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்த, சிறப்பு சத்துணவு தயாரித்து கொடுக்க, தனியாரிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கோருபவர்கள் ஓட்டல், கேன்டீன் தொழிலில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு உணவு சப்ளை செய்த அனுபவமும் வேண்டும் என்று நிபந்னை விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்கலாம் என்றும் அவர்களுக்கு நிபந்தனைகளில் இருந்து சில விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த இலவச சிறப்பு சத்துணவு வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று திருவான்மியூரில் நேற்று நடந்த இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சுகப் பிரசவம்:

காலை டிபன்:

3 இட்லி (தலா 100 கிராம்) அல்லது அரிசி பொங்கல் (300 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய 200 கிராம் சாம்பார். இதுதவிர 200 மி.லி. காய்ச்சியப் ஆவீன் பால்.

மதிய சாப்பாடு:

அரிசி சாதம் (300 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய 200 கிராம் சாம்பார், 200 கிராம் ரசம், கூட்டு அல்லது பொரியல் (200 கிராம்).

மாலை உணவு: ஒரு வாழைப்பழம் அல்லது 50 கிராம் சுண்டல்.

இரவு உணவு: 3 இட்லி (தலா 100 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய 200 கிராம் சாம்பார். 200 மி.லி. காய்ச்சிய பால். இந்த சிறப்பு சத்துணவு, சுகப்பிரசவம் மேற்கொள்ளும் பெண்களுக்கு 3 நாட்களுக்கு மருத்துவமனையில் வழங்கப்படும்.

21,000 பேருக்கு காப்பர்& 1397904493 2006&2007ல் 13,629, 2007&2008ல் 14,300, 2008&2009ல் 14,359 பேருக்கும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சுகப் பிரசவம் மற்றும் சிசேரியன் மூலம் பிரசவம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 2006&2007ல் 11,732, 2007&2008ல் 12,433, 2008&2009ல் 12,121 பெண்களுக்கும் குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2006&2007ல் 21,499, 2007&2008ல் 21,944, 2008&2009ல் 21,775 பெண்களும் காப்பர்& 1397904493 அணிந்து கொண்டனர் என்று மாநகராட்சி குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

சிசேரியன்:

காலை டிபன்:

அரிசி கஞ்சி, காய்ச்சிய ஆவின் பால் 200 மி.லி.

மதிய சாப்பாடு:

அரிசி சாதம் 200 கிராம், 50 கிராம் பருப்பு டால், 200 கிராம் வெஜிடேபிள் சூப்.

இரவு உணவு:

3 இட்லி (தலா 100 கிராம்), 50 கிராம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார் 200 கிராம் மற்றும் 200 மி.லி. காய்ச்சியப் பால். இவை அனைத்தும் சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளும் பெண்களுக்கு 5 நாட்களுக்கு வழங்கப்படும்.

இது தவிர ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற குடிநீர் 2 லிட்டர் (ஒரு நாளைக்கு) வழங்கப்படும்.

இட்லிக்கு ஐஆர்&20 ரக அரிசி, சாதம் மற்றும் பொங்கலுக்கு பொன்னி அரிசி, பருப்பு, காய்கறிகள், நல்லெண்ணெய் இவை அனைத்தும் முதல் தரத்திலான பொருட்களில் தயாரிக்கப்பட்ட உணவாக வழங்கப்படவுள்ளது.

 

நகரை பளிச்சென வைக்க உத்தரவு

Print PDF

தினமணி 13.08.2010

நகரை பளிச்சென வைக்க உத்தரவு

சேலம், ஆக. 12: முதல்வர் கருணாநிதி வருவதால் சேலம் மாநகரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் கருணாநிதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 20-ம் தேதி சேலம் வருகிறார். இதையொட்டி மாநகராட்சி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் பழனிசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது, முதல்வர் சேலம் வருவதால் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். தெரு விளக்குகள் சரியாக எரிகின்றனவா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

குடிநீர் இணைப்புகள் சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா எனவும் கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.

மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்கொடி, செயற்பொறியாளர்கள் ரவி, வெங்கடேஷ், அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் ரணதேவ், சீனிவாசன், ரவி, சுரேஷ், சுப்பிரமணியம், உதவி ஆணையர்கள் நெப்போலியன், ஜெகந்நாதன் (பொறுப்பு), கணேசன் (பொறுப்பு), கண்காணிப்பாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 193 of 519