Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கடல் பகுதியில் எண்ணெய் படலம் கடல் உணவு வகைகள் பரிசோதனை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன் 12.08.2010

கடல் பகுதியில் எண்ணெய் படலம் கடல் உணவு வகைகள் பரிசோதனை மாநகராட்சி நடவடிக்கை

மும்பை, ஆக. 12: மும்பை கடல்பகுதியை, எண்ணெய் மாசுபடுத்தியுள்ளதை அடுத்து கடல் உணவு வகை களின் சுகாதாரத்தை மாநக ராட்சி நிர்வாகம் பரி சோதனை செய்து வரு கிறது.

மும்பை கடற்பகுதியில் இரண்டு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. கப் பல்கள் மோதியதில் அவற் றில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது. லட்சக்க ணக்கான லிட்டர் எண் ணெய் கடலில் சிந்தியதால் அது கடல் நீரில் பரவி யது. இதையடுத்து கடல் பகுதி எண்ணெய் மாசடைந்தது.

மாசடைந்துள்ள கடல் பகுதியில் கிடைக்கும் கடல் உணவு வகைகள் சுகாதா ரமாக இருக்கிறதா? அல்லது மாசடைந்துள்ளதா? என் பதை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். மாநகராட்சி சந்தைகளில் இந்த பரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் (சந் தைகள்) தீபக் காமத் கூறு கையில், "கடலில் கசிந்த எண்ணெய் மும்பை கடற் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடல் உணவு வகைகள் மாசடைந்திருக்க கூடும். மாநகராட்சி சந்தைகளில் விற்கப்படும் மீன்கள் மற் றும் இறால் போன்றவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்காக அனுப் பப்பட்டுள்ளன.

பரிசோதனையில் இவை சுகாதாரமானவையா? இல்லையா? என்பது தெரிய வரும். மீனவர்களுக்கு மீன்பிடிதான் ஒரே வருமா னம் என்பதால் அவர்கள் கடலில் மீன் பிடி தொழிலை தொடங்கியிருப்பார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த மீனவர்கள் விற்பனை செய்யும் கடல் உணவு வகைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பரிசோதனை செய்து வருகிறோம்.

எண்ணெய் பரவல் அதிகமாக காணப்படும் கொலாபா, போர்ட், நரிமன்பாயின்ட் ஆகிய பகுதிகளில்தான் கடல் உணவு வகைகள் அதி கம் கிடைக்கிறது. எனவே இந்த பகுதிகளில் உள்ள சந் தைகளில் பரிசோதனை தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாட்களு க்கு தொடரும்" என்றார்.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 92 மாநகராட்சி சந்தைகள் உள்ளன. இவற் றில் 53 சந்தைகளில் கடல் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள 29 சந் தைகளில் 24 சந்தைகளில் கடல் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக் கது.

கடல் உணவு வகைகளை வாங்கும் மக்கள் முன்னெச் சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி யுள்ள மாநகராட்சி, மாச டைந்த கடற்பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

14,593 வகையான நோய்கள் தாக்கியது குர்லா மிகவும் சுகாதாரமற்ற பகுதி

Print PDF

தினகரன் 12.08.2010

14,593 வகையான நோய்கள் தாக்கியது குர்லா மிகவும் சுகாதாரமற்ற பகுதி

குர்லா,ஆக.12: மும்பையில் மிகவும் சுகாதாரமற்ற பகுதி யாக குர்லா கண்டறியப் பட்டுள்ளது. மும்பையில் சுகாதார மான பகுதி மற்றும் சுகாதார மற்ற பகுதி எவை என்பது குறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மாநக ராட்சியின் சுகாதாரத் துறையிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டில் மும் பையை தாக்கிய நோய்கள் பற்றிய விவரத்தை பெற்று, வெள்ளை அறிக்கை வெளி யிட்டுள்ளது.

இதன் படி கடந்த ஒரு ஆண்டில் குர்லா பகுதியை உள்ளடங் கிய வார்டில் 14,593 வகை யான நோய்கள் தாக்கி பொதுமக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக இப்பகுதியில் வயிற்றுபோக்கு, மலேரியா, டி.பி., நீரிழிவு நோய்கள்தான் அதிக அளவில் தாக்கி இருக் கிறது. வயிற்று போக் கால் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப் பட்டனர்.

இரண்டாவது இடத்தில் மலேரியா காய்ச்சல் இருக் கிறது. இரண்டாவது சுகாதாரமற்ற வார்டு என்ற பெயர் பரேல் பகுதிக்கும் அதனை தொடர்ந்து பிரபா தேவி, ஒர்லி மற்றும் அந்தேரி, கல்பாதேவி& பைகுலா வார்டுகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக மாநக ராட்சி தெரிவித்துள்ளது. இந்த 5 வார்டுகளிலும் கடந்த இரண்டு ஆண்டில் மேற்கண்ட நோய்கள் அதிக அளவில் தாக்கி இருக் கிறது. பரேல்(‘எப்தெற்கு), பிரபாதேவி(‘ஜிதெற்கு), குர்லா(‘எல்’) வார்டுகளில் மலேரியா தாக்கம் 33 சதவீதம் இருந்தது. மற்ற இருவார்டுகளில் 25 சதவீதம் அளவுக்கு இருந்தது. மாநக ராட்சி வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள சுகா தாரக்கமிட்டியின் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 முறை நடந்துள்ளது. ஆனால் ஒரு கூட்டத்தில் கூட சுகாதாரத்தை மேம் படுத்துவது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நெல்லை மாநகராட்சியில் அதிகாரிகள் திடீர் சோதனை: காலாவதியான மோர்,தயிர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 11.08.2010

நெல்லை மாநகராட்சியில் அதிகாரிகள் திடீர் சோதனை: காலாவதியான மோர்,தயிர் பாக்கெட்டுகள் பறிமுதல்

திருநெல்வேலி, ஆக.10: திருநெல்வேலி நகரத்தில் உள்ள குளிர்பானக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை செய்தனர். இதில் காலாவதியான மோர்,தயிர்,ரஸ்னா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருநெல்வேலி மாநகர் பகுதியில் காலாவதியான மற்றும் போலியான குளிர்பான பொருள்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் என்.சுப்பையனுக்கு அதிகமான புகார்கள் சென்றன. இதையடுத்து ஆணையர், குளிர்பான கடைகளில் திடீர் சோதனை செய்து, காலாவதியான குளிர்பான பொருள்களை பறிமுதல் செய்யுமாறு சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி மாநகராட்சி உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் அரசகுமார், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மணிமுருகன்,சந்திரமோகன்,ராமகிருஷ்ணன் ஆகியோர் திருநெல்வேலி நகரத்தில் உள்ள குளிர்பானக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனை சந்தி விநாயகர் கோயில் பகுதி, தெற்கு ரதவீதி, கீழரதவீதி,மேல ரதவீதி, தெற்கு மவுண்ட் ரோடு ஆகியப் பகுதிகளில் உள்ள சுமார் 25 குளிர்பானக் கடைகளில் நடத்தப்பட்டது. இதில் காலாவதியான மோர்,தயிர் பாக்கெட்டுகள்,போலி ரஸ்னா பாக்கெட்டுகள் என மொத்தம் ஆயிரம் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3 ஆயிரமாகும். இந்த பொருள்கள் உடனடியாக அழிக்கப்பட்டன.

இக் கடைகளின் உரிமையாளர்களிடம், காலாவதியான பொருள்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் 1,500 பறிமுதல் செய்யப்பட்டன. இது போன்ற சோதனை இனி அடிக்கடி நடத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் நகரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 


Page 195 of 519