Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பை இல்லாத குமரியை உருவாக்க பூஜ்ய கழிவு திட்டம் ஜன.14 முதல் அமல் கலெக்டர் தகவல்

Print PDF

தினகரன் 09.08.2010

குப்பை இல்லாத குமரியை உருவாக்க பூஜ்ய கழிவு திட்டம் ஜன.14 முதல் அமல் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஆக.9: குமரி மாவட்டத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து குப்பையில்லாத மாவட்டமாக மாற்றும் நடவடிக் கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துவக்கி வைத்து கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பேசியதாவது:

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து பூஜ்ய கழிவு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற பல் வேறு வகையான பயிற்சிகள் சமுதாய அளவிலும், பள்ளி, கல்லூரிகள் அளவிலும் நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தனித்தனியே திட்டம் தயார் செய்யப்பட்டு அது செயல்படுத்தப்படும். 200 வீடுகளுக்கு ஒரு பயிற்றுநர் என்ற அடிப்படையில் 2500 பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 75 ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் இதன் விழிப்புணர்வு கொண்டு செல்லப்படும். வரும் ஆறு மாதங்களுக்குள் அனைத்து வகையான செயல்பாடுகள் முடிக்கப்பட்டுவிடும்.

குப்பைகள் ஒரு இடத்தில் தேங்குவதும், அதனை அப்புறப்படுத்துவதும் பிரச்னையாக உள்ளது. குப்பை களை அது உருவாகும் இடத்திலேயே பிரித்து மக்கும் பொருட் களை மறு சுழற்சிக்கு கொண்டு செல்வதும், தேவையற்ற பொருட்களை மட்டும் குப்பையாக ஒதுக்கி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்க செய்வதும் இந்த திட்டம். குப்பைகளை உரமாக்கி வீட்டு தோட்டங்கள் அமைப்பதன் மூலம் இயற்கையான காய்கறிகளை பெற முடியும். இதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு விகிதத்தையும் குறைக்க முடியும்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி அன்று பழைய பொருட்களை கழித்து விடுவது போன்று மறுநாள் தமிழ் புத்தாண்டான ஜனவரி 14ம் தேதியில் இருந்து பூஜ்ய கழிவு திட்டம் குமரியில் அமல்படுத்தப்படும். அதன் பின்னர் குப்பைகளை தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியன் கிரீன் சர்வீசஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் சீனிவாசன் பயிற்சி அளித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன் உட்பட பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முதன்மை பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

 

மாநகராட்சி கழிப்பிடம்; ஒரே மாதத்தில் சுத்தம்

Print PDF

தினமலர் 09.08.2010

மாநகராட்சி கழிப்பிடம்; ஒரே மாதத்தில் சுத்தம்

கோவை: கோவை மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களை தூய்மைப்படுத்தும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் நகரிலுள்ள அனைத்து கழிப்பிடங்களையும் தூய்மையாக்க இந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 63; வடக்கு மண்டலத்தில் 21; மேற்கு மண்டலத்தில் 45;தெற்கு மண்டலத்தில் 55 என, இலவச பொதுகழிப்பிடங்கள் உள்ளன. தெற்கு மண்டலம் தவிர மூன்று மண்டலங்களிலுள்ள 129 இலவச கழிப்பிடங்களை பராமரித்து, சுத்தம் செய்யும் பணியை பெங்களூரை சேர்ந்த "மைக்ரோ ப்யூர் டெக்னாலஜிஸ் லிட்' நிறுவனம் குத்தகைக்கு ஏலம் எடுத்துள்ளது. கோவை மாநகரிலுள்ள பொதுக்கழிப்பிடங்களில் துப்புரவு பணிகளை மேற் கொள்ள புதிய திட் டங்களை வகுத்துள் ளது. புதிய திட்டம் குறித்து "மைக்ரோ ப்யூர் டெக்னாலஜிஸ்' இயக்குனர் ராஜேஷ்குமார் கூறியதாவது: கோவை நகரில் புழக்கத்திலுள்ள 129 இலவச பொதுக்கழிப்பிடங்களை தூய்மையானதாக மாற்றிக்காட்டுவதுடன், சிறப்பான முறையில் பாராமரிக்கவும் முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு வார்டிற்கும் அங்குள்ள கழிப்பிடத்தை தூய்மைபடுத்த ஐந்து துப்புரவு பணியாளர்கள்,இரு மேற்பார்வையாளர்களை நியமித்துள்ளோம். தூய்மைப்படுத்த பிளீச்சிங் பவுடர், பினாயில், சோப்பு ஆயில் வழங்கப்படும். காலை 6.00 மணிக்கு முதல் முறையாக கழிவறையை சுத்தப்படுத்தப்படும். காலை 10.00 மணிக்கு இரண்டாம் முறையும், மாலை 6.00 மணிக்கும் தூய்மையாக்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு, குழாயில் பழுது ஏற்பட்டால் சரிசெய்ய மொபைல் வாகனம் தயார் நிலையில் இருக்கும். வாகனத்தில் ஒரு பிளம்பர், ஒரு எலக்ட்ரீசியன், இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் இருப்பர். இவர்கள், நேரில் சென்று பழுதை சரிசெய்வர். ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தேவையான வாளி, கோப்பைகளை வழங்குவோம். இது தவிர மின்விளக்குகள், தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் பணிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு கழிப்பிடத்திலும் இரண்டு அல்லது மூன்று ஓசோனைஸ்டு ஜெனரேட்டர் இயந்திரத்தை பொருத்தப்படும். இவை, பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவை பரவவிடாமல் தடுக்கும்.கழிப்பிடத்துக்கு வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் சோப்பு பயன்படுத்துவதன் அவசியமும் விளக்கப்படும். இலவசமாக சோப்பும் வழங்கப்படும்.இவ்வாறு ராஜேஷ்குமார் கூறினார்.

 

மலேரியாவுக்கு மேலும் 3 பேர் பலி கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை

Print PDF

தினகரன் 09.08.2010

மலேரியாவுக்கு மேலும் 3 பேர் பலி கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை

மும்பை, ஆக.9: மும்பை யில் மலேரியா நோய்க்கு மேலும் 3 பேர் பலியானார் கள். டெங்கு காய்ச்சலில் ஒருவர் உயிரிழந்தார்.

கிராண்ட் ரோட்டை சேர்ந்த 16 வயது சிறுவன், தாராவியை சேர்ந்த 40 வயது ஆண் மற்றும் ஒர்லி யை சேர்ந்த 45 வயது உதவி போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் ஆகிய மூவரும் மலேரியாவுக்கு பலியானார்கள். இதை யடுத்து இம்மாதத்தில் மட்டும் இந்நோய் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக் கை 11 ஆக அதிகரித்து இருக்கிறது.

உதவி சப்&இன்ஸ்பெக் டர் ராம்தாஸ் ராவுத், தாதர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ஜூலை 29ம் தேதியில் இருந்தே உடல் நலக்குறைவு டன் இருந்து வந்தார். பைகுலா பாலாஜி மருத் துவமனையில் நேற்றுமுன் தினம் சிகிச்சை பலனளிக் காமல் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு ஒர்லியை சேர்ந்த 18 வயது வாலிபர் பலியானார். கடந்த 2 நாட்களில் மழை சம்மந்தப்பட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்ட 729 பேர் மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களில் 216 பேருக்கு மலேரியா நோய் இருந்தது.

417 பேருக்கு காய்ச்சல் இருந்தது. டெங்கு காய்ச்ச லால் 4 பேர் பாதிக்கப்பட் டிருந்தனர். 3 பேர் லெப் டோயைரோசிஸ் நோயால் தாக்கப்பட்டிருந்த னர். 89 பேருக்கு வயிற்றுப்போக்கு காணப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 9 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட் டது.

இதற்கிடையே மலேரி யாவை கட்டுப்படுத்த மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டுமானங்கள் நடை பெறும் இடங்களில் கொசு உற்பத்தியாகாமல் பில் டர்கள் பார்த்துக்கொள் கிறார்களா என்பதை கண் காணிப்பதற்காக மேற்கு புறநகர் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கூடுதல் மாநகராட்சி கமிஷனர் மணீஷா மாய்ஸ்கர் கூறு கையில், "மேற்கு புறநகர் பகுதிகளில்தான் கட்டு மான பணிகள் நிறைய நடந்து வருகின்றன. இங்குள்ள வார்டுகளில் 5 உறுப்பினர் கமிட்டிகளை அமைத்துள்ளோம். வார்டு அதிகாரி, சுகாதார அதிகாரி, பூச்சிகள் கட்டுப் பாட்டு அதிகாரி, பில்டிங் இலாகாவின் நிர்வாக பொறியாளர் உள்ளிட் டோர் இதில் உறுப்பினர் களாக உள்ளனர். கட்டு மானங்கள் நடை பெறும் இடங்களில் கொசு உற்பத் தியாகாமல் இருப்பதை உறுதி செய்வது இந்த கமிட்டிகளின் பொறுப்புÓ என்றார்.

Last Updated on Monday, 09 August 2010 06:43
 


Page 202 of 519