Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சித்தூர் நகராட்சி நீரூற்று பூங்கா சீரமைப்பு

Print PDF

தினகரன் 28.07.2010

சித்தூர் நகராட்சி நீரூற்று பூங்கா சீரமைப்பு

சித்தூர், ஜூலை 28: தினகரன் செய்தி எதிரொலியால் சித்தூர் நகராட்சி நீரூற்று பூங்கா சீரமைக்கும் பணி தொடங்கியது.

சித்தூரில் கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சித்தூரில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் சுமார் ரூ.4லட்சம் செலவில் அப்போதைய நகராட்சியினர் நீரூற்று பூங்கா அமைக்க ஏற்பாடு செய்தனர். இந்தப்பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்த நீரூற்று பூங்காவில் ஆள் உயரத்துக்கு புதர் போன்று முள்செடிகள் வளர்ந்தது. ஆனால் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து நமது தினகரன் நாளிதழில் கடந்த சில மாதங்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சித்தூர் நகராட்சியினர் முள்புதர்களை வெட்டியும், இரும்பு கம்பி வேலி அமைத்தும் இந்த நீரூற்று பூங்காவை தூய்மை படுத்தி வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் இந்த நீரூற்று பூங்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க உள்ளது. நடவடிக்கை எடுத்த நகராட்சியினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

மாநகராட்சி கிடங்கில் பல மணி நேரம் எரிந்த குப்பைகள்

Print PDF

தினமலர் 28.07.2010

மாநகராட்சி கிடங்கில் பல மணி நேரம் எரிந்த குப்பைகள்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றிக்கொண்ட தீ பலமணி நேரம் எரிந்தது. திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நெல்லை-சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ராமையன்பட்டி அருகே குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றிக்கொண்டது. குப்பைகள் அதிகஅளவில் கிடப்பதால் ஒரு பனைமர உயத்திற்கு தீ ஜூவாலையுடன் எரிந்தது. பாளையங்கோட்டை, பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் சென்று போராடி தீயை அணைத்தனர். ஆடிக்காற்று பலமாக வீசுவதால் ஒரு இடத்தில் தீயை அணைத்தாலும் அடுத்த இடத்தில் பற்றிக்கொண்டு மளமளவென எரிந்தது. நான்கைந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு குப்பை கிடங்கு உள்ளதால் தீயை அணைக்க மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரவில் ஏற்பட்ட தீயினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது. இரவு முழுவதும் தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபட்டனர்.

 

மாடுகளை அறுக்கவும் இறைச்சிக் கூடம்

Print PDF

தினமணி 27.07.2010

மாடுகளை அறுக்கவும் இறைச்சிக் கூடம்

சேலம், ஜூலை 26: சேலத்தில் ஆடுகளை அறுக்க நவீன இறைச்சிக் கூடம் அமைத்ததைப் போல், மாடுகளை அறுப்பதற்கும் இறைச்சிக் கூடம் அமைக்க வேண்டும் என்று சூரமங்கலம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோகன் தலைமையில் சூரமங்கலம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சேலம் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் திங்கள்கிழமை ஒரு மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பது:

சேலம் சூரமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் கடந்த 85 ஆண்டுகளாக 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், வேலைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மாடுகளை அறுத்து இறைச்சி வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவுகிறது. எனவே ஆடுகளை அறுப்பதற்கு இறைச்சிக் கூடம் அமைத்ததைப் போல் மாநகரின் ஒதுக்குப் புறத்தில் மாடுகளை அடிக்கவும் இறைச்சிக் கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுவரை குடியிருப்பு பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 


Page 209 of 519