Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பு

Print PDF

தினமணி 27.07.2010

மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பு

சேலம், ஜூலை 26: சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதை நிர்வாகம் மீண்டும் தனியார் வசம் ஒப்படைத்துள்ளது. சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார ஊழியர்களுக்கான கருவிகளை மேயர் ரேகா பிரியதர்ஷிணி வழங்கி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 2, 7, 12, 15, 16, 18, 19, 23, 24, 25 உள்ளிட்ட 21 வார்டுகளில் கடந்த 3 ஆண்டுகளாக சுவச்தா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் குப்பை அள்ளும் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்ததை அடுத்து கடந்த சில வாரங்களாக மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களே இந்த வார்டுகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் 21 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து பேசப்பட்டது. அப்போது ஆளும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சுகாதாரப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பி. என்ற தனியார் நிறுவனத்துக்கு குப்பை அள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டது. சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது மேயர் கூறியது:

அரசு கொள்கைப்படி மாநகராட்சிகளில் 3-ல் ஒரு பங்கு வார்டுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு தனியார் வசம் வழங்கப்பட வேண்டும்.

அதன்படி சேலம் மாநகரில் 21 டிவிஷன்களில் குப்பைகள் அள்ளும் பணி மீண்டும் தனியார் வசம் வழங்கப்பட்டுள்ளது. மாநகரை தூய்மையாக வைத்திருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் தேவை என்றார் அவர்.

இது குறித்து தனியார் நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, எங்கள் நிறுவனம் பெங்களூருவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதில் சிறந்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. சேலத்திலும் சிறப்பாக பணியாற்றுவோம்.

இதற்காக 770 பணியாளர்களும் காலை 6 முதல் 11 மணி, பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30 மணி என்ற இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்வார்கள்.

பஸ்நிலையம், மார்க்கெட் பகுதிகளில் இரவு 10 முதல் அதிகாலை 2 மணி வரை துப்புரவுப் பணிகள் நடைபெறும். சுகாதாரப் பணிகளில் 22 ஆட்டோக்கள், 26 லாரிகள் ஈடுபடுத்தப்படும் என்றனர்.

 

மீனாட்சி கோயில் சுற்றுப்புறம் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 27.07.2010

மீனாட்சி கோயில் சுற்றுப்புறம் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

மதுரை: ""மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துவதற்கு சுற்றுலாத்துறை ரூ.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், புதிய வாகன நிறுத்துமிடம், வரவேற்பு மையம், பொருட்கள் வைப்பறை 5.62 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. புதுமண்டபத்திலுள்ள வியாபாரிகளுக்காக புது குன்னத்தூர் சத்திரம் 2.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி வண்ண விளக்குகள்,பூங்கா, விளக்குத்தூண், தெப்பக்குளத்தில் நீர் நிரப்புதல், புல்வெளி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக சுற்றுலாத்துறை 12.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை விரைவில் மத்திய அமைச்சர் மு..அழகிரி துவக்கி வைப்பார் என்றார்.

 

இரவு நேர தள்ளுவண்டி கடைகள் : சுகாதார துறை நடவடிக்கை அவசியம்

Print PDF

தினமலர் 26.07.2010

இரவு நேர தள்ளுவண்டி கடைகள் : சுகாதார துறை நடவடிக்கை அவசியம்

தர்மபுரி: தர்மபுரி நகரில் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் சுகாதார துறையினர் திடீர் சோதனை நடத்தி உணவு பொருட்களில் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தர்மபுரி நகரில் பெரிய, சிறிய ஹோட்டல்கள், மாலை நேர அந்திக்கடைகள், மெஸ்கள் இருந்த போது, மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை சாப்பிட ஒரு கூட்டம் உள்ளது.

குறிப்பாக இரவு 8 மணிக்கு மேல் பெரிய கடைகளில் டிபன் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை முடிந்து விடுவதால், பெரும்பாலானவர்கள் இரவு நேர தள்ளுவண்டி அந்திக்கடைகளை நம்பியுள்ளனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் அவசரத்துக்கு சாப்பிட்டு செல்கின்றனர்.

விற்பனையை மட்டும் குறி வைத்து, மலிவு விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், தரம் குறைந்த ஆயில் உள்ளிட்ட பொருட்கள் மூலம் உணவு பதார்த்தங்கள் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.

சிக்கன், மீன் உள்ளிட்டவைகளும் எண்ணெயில் வறுத்து விற்பனை நடக்கிறது. இதற்கு தரம் குறைந்த ஆயில் மற்றும் மக்கிய பல நாட்கள் பயன்படுத்தும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதால், அவசரத்துக்கு சாப்பிடும் பலருக்கும் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் திறந்த வெளியில் உணவு பொருட்களை வைப்பதோடு, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சி சுகாதார அதிகாரிகள் இது குறித்து திடீர் ஆய்வு நடத்தி மக்களுக்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை செய்வோரை கட்டுப்படுத்த வேண்டும். தரமான பொருட்களை கொண்டு கடை நடத்துவோருக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.

 


Page 210 of 519