Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஹோட்டல்களுக்கு அழுகிய முட்டைகள்: சப்ளை மாநகரட்சி அதிகாரிகள் சோதனையில் "திடுக்'

Print PDF

தினமலர்    21.07.2010

ஹோட்டல்களுக்கு அழுகிய முட்டைகள்: சப்ளை மாநகரட்சி அதிகாரிகள் சோதனையில் "திடுக்'

சேலம்: சேலம் மாநகர நகர் அலுவலர் தலைமையில் ஹோட்டல்கள், டிபன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ஹோட்டல்களுக்கு அழுகிய முட்டை சப்ளை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த வாரம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆட்டு இறைச்சிக் கழிவுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில், ஹோட்டல்களுக்கு அழுகிய, உடைந்த முட்டைகள் சப்ளை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று மாலை நகர்நல அலுவலர் பொற்கொடி தலைமையில் அதிகாரிகள் புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், டிபன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மினி டோர் ஆட்டோவில் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்ய வைக்கப்பட்டிருந் 30 அட்டை (ஒரு அட்டையில் 30 முட்டை) முட்டைகளை கைப்பற்றினர்.

மேலும், சேலம் மாநகருக்கு அழுகிய, உடைந்த முட்டைகளை சப்ளை செய்வதாக கூறப்படும் பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த தாமரை என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.இது குறித்து நகர் நல அலுவலர் பொற்கொடி கூறியதாவது:அழுகிய, உடைந்த முட்டைகளை சாப்பிடுவதால் வாந்தி, பேதி உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற முட்டைகளை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவற்றை சப்ளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 21 July 2010 06:11
 

முசிறியில் சிறப்பு துப்புரவு பணி முகாம்

Print PDF

தினமலர்   21.07.2010

முசிறியில் சிறப்பு துப்புரவு பணி முகாம்

முசிறி: முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், நுகர்வோர் அமைப்பினர், முசிறி டவுன் பஞ்சாயத்து ஆகியவை சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது.முகாமை டவுன் பஞ்சாயத்து தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார். மாணவர்கள் முசிறி புதிய பஸ் ஸ்டாண்டு, தா.பேட்டை ரோடு, அண்ணாநகர், பைபாஸ் ரோடு, துறையூர் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி, பள்ளி நுகர்வோர் குழுத் தலைவர் ராஜேந்திரன், என்.எஸ்.எஸ்., அலுவலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 21 July 2010 06:11
 

சுகாதாரத்துறை தொடர் "ரெய்டு'

Print PDF

தினமலர்    21.07.2010

சுகாதாரத்துறை தொடர் "ரெய்டு'

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறையினர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு ரெய்டில் நேற்றும் ஈடுபட்டனர். 12 கடைகளில் சோதனை செய்து, விதிமுறை மீறியவர்களுக்கு 11 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதித்தனர்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகிக்கும் வர்த்தக நிறுவனங்களில் கடந்த இரு நாட்களாக மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் "ரெய்டு' நடத்தி வருகின்றனர். நகர் நல அலுவலர் ஜவஹர்லால் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ராமசாமி, முருகன், முருகேசன், வெங்கடேஷ், தங்கவேல், மோகன்ராஜ், சாமிநாதன் உள்ளிட்ட குழுவினர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று ஆய்வு நடத்தினர்.பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள எட்டு டீக்கடைகள், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நான்கு "டாஸ்மாக்' பார்களில் "ரெய்டு' நடந்தது. 12 கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பார்களில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 400 குடிநீர் பாக்கெட்டுகள், 150 குளிர்பானங்கள் உட்பட காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. விதிமுறையை மீறியதற்காக மொத்தம் 11 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Last Updated on Wednesday, 21 July 2010 06:11
 


Page 214 of 519