Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி திட்டம் கோவை பூங்காக்களில் மொபைல் டாய்லெட்

Print PDF

தினகரன் 30.06.2010

மாநகராட்சி திட்டம் கோவை பூங்காக்களில் மொபைல் டாய்லெட்

கோவை, ஜூன் 30: நடமாடும் கழிவறை வாகனங்கள் (மொபைல் டாய்லெட்), குடிநீர் தொட்டிகளை பஸ் ஸ்டாண்ட், பூங்காக்களில் வைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக ரூ.3.46 கோடியில் 60 நடமாடும் கழிவறை வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த கழிவறை வாகனங்கள் மாநாடு பந்தல் வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் வைக்கப்பட்டது.

இதேபோல், மாநகராட்சி சார்பில் 60 பி.வி.சி குடிநீர் தொட்டி (5 ஆயிரம் லிட்டர் நீர்தேக்க திறன்) வாங்கப்பட்டது. 400க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் பெறப்பட்டது. வாகனங்கள், குடிநீர் தொட்டி, குப்பை தொட்டி போன்றவை மாநாடு பந்தல் வளாகம், அவிநாசி ரோடு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டது. கண்காட்சி முடியும் வரையில் மாநாடு பந்தல் வளாகத்தில் நடமாடும் கழிவறை வாகனங்கள், குடிநீர் தொட்டி, குப்பை தொட்டி வைக்கப்படும்.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது: நடமாடும் கழிவறை வாகனங்களை கோவை வ..சி. பூங்கா உள்ளிட்ட முக்கிய பூங்கா மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவறை வாகனங்கள் வைக்கப்படும் இடத்தில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவேண்டியுள்ளது. இதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்படும். இதேபோல், குடிநீர் தொட்டிகளையும் மக்கள் பயன்பாடு உள்ள இடங்களில் வைக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

சீசன் முடியும் போது ரெய்டு வேலூரில் 310 கிலோ மாம்பழம் பறிமுதல்

Print PDF

தினகரன் 30.06.2010

சீசன் முடியும் போது ரெய்டு வேலூரில் 310 கிலோ மாம்பழம் பறிமுதல்

வேலூர், ஜூன் 30: இயற்கையாக பழுக்க வேண்டிய மாம்பழங்களை வியாபாரிகள் சிலர் கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கவைக்கப்படுகிறது. இதை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வயிறு எரிச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாயுக் கோளாறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே கார்பைட் கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

வேலூரில் கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மாம்பழ சீசன் முடியும் நிலையில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் கவுரி சுந்தர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் நேற்று நேதாஜி மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு கடையில் மாம்பழங்களுக்கு இடையில் பொட்டலங்களாக இருந்த கார்பைட் பொடியை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டில் ஈடுபட்டனர். முடிவில் 310 கிலோ மாம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

 

கார்பைடு கல் வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 30.06.2010

கார்பைடு கல் வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

வேலூர், ஜூன் 29: வேலூரில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்களை மாநகராட்சி உணவுக்கட்டுப்பாடு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சி உணவுக் கட்டுப்பாடு அலுவலர் கெüரிசுந்தர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேதாஜி மார்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சோதனை நடத்தினர்.

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்த வியாபாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். அவர்களிடம் இருந்து 300 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உட்கொண்டால் வயிற்று வலி, வாந்தி பேதி உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 217 of 519