Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா? மண்டி, கடைகளில் அதிரடி சோதனை 1 டன் மாம்பழம் பறிமுதல்

Print PDF

தினகரன் 29.06.2010

கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா? மண்டி, கடைகளில் அதிரடி சோதனை 1 டன் மாம்பழம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூன் 29: கிருஷ்ணகிரியில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

கிருஷ்ணகிரியில் கார் பைட் கல் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், ஆய்வாளர் ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள் தனலட்சுமி, ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகள், மொத்த விற்பனை கடைகள் மற்றும் மண்டிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என சோதனை செய்தனர். அப்போது, அழுகிய மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாம்பழங்களை அதிகாரிகள் அகற்ற உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் சுமார் ஒரு டன் எடை அளவிற்கு அழுகிய மாம்பழங்களை பறிமுதல் செய்து அகற்றினர். அத்து டன் கார்பைட் கல் வைத்து பழங்களை பழுக்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த சோதனை மாம்பழ விற்பனையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சத்திரத்தில் தூய்மைபணி

Print PDF

தினகரன் 29.06.2010

புதுச்சத்திரத்தில் தூய்மைபணி

திருக்காட்டுப்பள்ளி, ஜூன். 29: தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி புதுச்சத்திரத்தில் ஒட்டு மொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.பேரூராட்சி தலைவர் கோகிலாசிங்காரவேலு செயல் அலுவலர் கலைச்செல்வன், கவுன்சிலர் குணா ஆகியோர் பணிகளை பார்வையிட்டனர்.

 

போளூர் பகுதியில் 2 டன் கார்பைட் மாம்பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன் 29.06.2010

போளூர் பகுதியில் 2 டன் கார்பைட் மாம்பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

போளூர், ஜூன்29: சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வரும் அதிரடி சோதனையில் போளூரில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் என்.சித்ரா உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பிரகாஷ், போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.வாசுதேவன் ஆகியோர் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை, துப்புரவு ஆய்வாளர் வி.ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று போளூரில் பழங்கள் விற்பனை செய்யும் 10 கடைகளிலும், குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கார்பைட் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கடைகளில் மெழுகு தடவி ஆப்பிள்கள் விற்பனை செய்வதையும் ஈ மொய்க்கும் அழுகிய பலாப்பழத்தை விற்பனை செய்து கொண்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

 


Page 218 of 519