Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஒட்டன்சத்திரத்தில் பன்றிகள் அகற்றம்

Print PDF

தினமணி 29.06.2010

ஒட்டன்சத்திரத்தில் பன்றிகள் அகற்றம்

ஒட்டன்சத்திரம், ஜூன் 28: ஒட்டன்சத்திரம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரித்த பன்றிகளை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் அகற்றப்பட வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன்பேரில், திங்கள்கிழமை செயல் அலுவலர் செல்வா (பொறுப்பு) சுகாதார ஆய்வாளர் கணேசன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் காமராஜ், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் சென்ற குழுவினர் காந்தி மார்க்கெட், தென்றல் நகர், சத்யா நகர், திடீர் நகர், வினோபா நகர், சின்னக்குளம், வ.உ.சி. நகர், விஸ்வநாத நகர் ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்த 50-க்கும் மேற்பட்ட பன்றிகளையும்,அதன் குட்டிகளையும் பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

இந்த பணியானது வாரம் ஒருமுறை செயல்படுத்தப்பட்டு, பன்றி தொல்லைகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடிநீரை காய்ச்சிக்குடிக்க கலெக்டர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 28.06.2010

குடிநீரை காய்ச்சிக்குடிக்க கலெக்டர் வேண்டுகோள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும், மேலும் வீடுகளில் குடிநீரை சேமித்து வைத்துள்ள பாத்திரங்களை நன்றாக மூடி வைக்கவேண்டும். குளோரின் மருந்து கலக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரை குடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவறுத்தப்பட்டது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மாதம் இரு முறை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்திடல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

டாஸ்மாக்' பார்களில் திடீர் ஆய்வு சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 28.06.2010

டாஸ்மாக்' பார்களில் திடீர் ஆய்வு சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூரில் இயங்கும் "டாஸ்மக்' மதுக்கடை பார்களில், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சியில் உரிமம் பெறாமல் இயங்கிய பார்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி எல்லையில் இயங்கும் "டாஸ்மாக்' பார்கள், மாநகராட்சியிலும் உரிமம் பெற்று, அதன் விதிமுறைப்படி இயங்க வேண்டும். திருப்பூர் சுகாதார ஆய்வாளர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், மாநகராட்சி சுகாதாரத்துறை உரிமம் பெறாமல் இயங்குவது கண்டறியப்பட்டது.சாமுண்டிபுரம், கொங்கு மெயின் ரோடு, அவிநாசி ரோடு, எம்.எஸ்., நகர், அங்கேரிபாளையம் ரோடு பகுதிகளில் உள்ள ஏழு பார்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்ட பார்களில், மாநகராட்சி உரிமம் பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டது.பார்களில் இருந்த போலி சோடா, காலாவதியான குளிர்பானங்கள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதி மறுக்கப்பட்டுள்ள "ஒன்யூஸ்' டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அப்போது, "மாநகராட்சி சுகாதாரத்துறையில் உரிமம் பெற்று, அதில் உள்ள விதிமுறைப்படியே கடையை நடத்த வேண்டும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில், ஆய்வாளர்கள் முருகன், சாமிநாதன், தங்கவேல், வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

 


Page 219 of 519