Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோவில்பட்டி மார்க்கெட்டில் மாம்பழக்கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை

Print PDF

தினகரன் 17.06.2010

கோவில்பட்டி மார்க்கெட்டில் மாம்பழக்கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை

கோவில்பட்டி, ஜூன்.17: கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் உள்ள மாம்பழ கடைகளில் கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா அல்லது இயற்கையான முறையில் பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நகராட்சி கமிஷனர் விஜயராகவன் தலைமையில் சுகாதார அலுவலர் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர்கள் சீனிராஜ், சீனிவாசன், வெங்கடேசன், முத்துகுமார், ஸ்டான்லிகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாம்பழ கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாம்பழக்கடைக்கு சென்ற துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் சோதனையில் ஈடுபட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களுக்குள் கார்பைட் கல் வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.

இருப்பினும் எந்த கடையிலும் கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி கமிஷனர் விஜயராகவன் தெரிவித்தார்.

 

நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 79 குழுக்கள் அமைப்பு கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன் 17.06.2010

நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 79 குழுக்கள் அமைப்பு கமிஷனர் தகவல்

நெல்லை, ஜூன் 17: நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 79 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் கொசுக் கள் உருவாவதை தடுக்கவும், நோய்கள் பரவுவதை தடுக்கவும், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் 79 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கொசு உற்பத்தியை தடுக்க அபேட் மருந்து கலக்கப்பட்ட நீர் கலவையை வீடுகளிலுள்ள நீர்தேக்க தொட்டிகளில் ஊற்றுவர்.

குடிநீரில் பயன்படுத்தும் இம்மருந்து தீங்கற்றதாகும். எனவே பொதுமக்கள் சுகாதார குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் கேட்டு கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீர்தேங்கும் வகையில் உள்ள காலி தண் ணீர் பாட்டில்கள், இளநீர் கூந்தல்கள், சிரட்டைகள், பழைய உரல்கள் ஆகியவற்றை பொதுமக்கள் அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை காலி செய்து சுத்தமாக கழுவி உலரவிட வேண்டும். வெளியூர் செல்லும் காலங்களில் குடிநீர் தொட்டிகளை காலியாக விட்டு செல்ல வேண்டும்.

செப்டிக் டாங்க் காற்று போக்கி குழாயில் கொசு புகாவண்ணம் கொசுவலை அல்லது கித்தான் சாக்கு கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்படாத குழாய்களில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ரூ.10 வசூலித்து கொசு புகாவண்ணம் கொசு வலை கட்டுவர். வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய் கிருமிகள் பரவ உதவும் ஈக்களை ஒழிக்க பொதுமக்களும், உணவு பண்டங்கள் தயாரிப்போரும் உதவ வேண் டும். சிற்றுண்டி சாலைகள், தேநீர் கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உணவு பொருட்களை ஈ மொய்க்காத வண்ணம் சூடாக விற்பனை செய்ய வேண்டும்.

உணவகங்களில் காய்ச்சிய நீரை வழங்க வேண்டும். பழைய உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது. சுகாதாரமற்ற உணவு, ஈ மொய்க் கும் பண்டங்களை விற்பனை செய்பவர்கள், சுத்தமான காய்ச்சிய குடிநீர் வழங்காத உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு ஒழிப்பு பணிகள் குறித்த விபரங்களுக்கு நெல்லை மாநகராட்சியின் தொலைபேசி எண் 2336633 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 4656 கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.

 

துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகம் சுத்தம் செய்யப்பட்ட நீர்தேக்கத் தொட்டி

Print PDF

தினமலர் 17.06.2010

துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகம் சுத்தம் செய்யப்பட்ட நீர்தேக்கத் தொட்டி

சேலம்: சேலம் மாநகராட்சியின் பல இடங்களில் துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரை வெளியேற்றி விட்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, எருமாப்பாளையம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. இரண்டு மாதமாக கோடைகாலம் நிலவியதால் குடிநீரை வெளியேற்றி விட்டு சுத்தம் செய்ய முடியாத சூழல் நிலவியது. மாநகரின் பல இடங்களில் துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது மேட்டூர் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இரண்டு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் எஞ்சியிருந்த குடிநீரை அகற்றிவிட்டு, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்களின் மேற்பார்வையில், கிருமி நாசினிகள் மூலம் நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன. தவிர, சேலம் சாரதா கல்லூரி அருகே இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைப்பும் நேற்று சீரமைக்கப்பட்டது.

 


Page 221 of 519