Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பெரம்பலூர் ஓட்டல்களில் ஆய்வு பரிசோதனைக்கு உணவுபொருள் சேகரிப்பு

Print PDF

தினகரன் 16.06.2010

பெரம்பலூர் ஓட்டல்களில் ஆய்வு பரிசோதனைக்கு உணவுபொருள் சேகரிப்பு

பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூரில் உள்ள ஓட்டல், கடைகளில் நடந்த ஆய்வில் உணவுப்பொருள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் சோதனையில் முறைகேடு கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் விஜயக்குமார் தெரிவித்தார்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 42 ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் கலெக்டர் விஜயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஓட்டல், கடைகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு செய்யப்பட்டது. உரிமம் இல்லாமல் ஓட்டல் நடத்தி வந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டல், மற்றும் கடைகளை சுத்தமாக பராமரிக்கவும், தண்ணீர் உறிஞ்சாதப்படி சிமென்ட் பூச்சு உள்ள தரையை அமை க்கவும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு ஒருவார அவகா சம் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், வர்த் தக நிறுவனம் நடத்துபவர் கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். திண்பண்டங்கள் தூசுபடாமலும், ஈ மொய்க்காமலும் பாதுகாப்பான முறையில் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்க வேண்டும். ஓட்டல்களில் அனுமதியின்றி பார் நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டலின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

ஓட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த டீத்தூள், செயற்கை உணவு கலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வு செய்தவதற்காக கோவை உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்படும். அதில் தரமற்றது, கலப்படம், காலாவதி பொருள் என புள்ளி விபரங்கள் கூறப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை வீடு, பண்ணை, ஓட்டல், டீக்கடை மற்றும் சாலையோர டிபன் சென்டர், இதர நிறுவனங்களில் பணியில் ஈடுபடுத்துபவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ராஜபாளையம் நகராட்சி சார்பில் ஒரே இடத்தில் கூடி துப்புரவு பணி

Print PDF

தினகரன் 16.06.2010

ராஜபாளையம் நகராட்சி சார்பில் ஒரே இடத்தில் கூடி துப்புரவு பணி

ராஜபாளையம், ஜூன் 16: ராஜபாளையம் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனித்தனியாக ஏரியாக்கள் ஒதுக்கப்பட்டு துப்புரவு பணிகள் நடந்து வருகிறது. வாரத்தில் செவ்வாய்கிழமை அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து அந்த பகுதியை மட்டும் துப்புரவு செய்யும் பணியை நகராட்சி தலைவி மகாலட்சுமி துவக்கி வைத்தார்.

இதையடுத்து ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர். கமிஷனர் காளிமுத்து, சுகாதார அலுவலர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன் 15.06.2010

மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், ஜூன் 15: நாமக்கல் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை நடத்தப்பட்டு ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன், துணை வட்டாட்சியர் கதிரேசன் மற்றும் வருவாய்த்துறையினர் நாமக்கல் பேருந்து நிலையம், நந்தவனதெரு பகுதியில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், மாணிக்சந்த், குட்கா போன்றவை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் நந்தவனதெரு பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகளவில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த பான்பராக், குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது காலாவதியான உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் உள்ள கடைகளில் வட்டாட்சியர் சேகர், வட்ட வழங்கல் அலு வலர் சிவக்குமரன் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வட்டாட்சியர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம்.

பள்ளிபாளையம்:

குமாரபாளையத்தில் நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம் தலைமையில் சுகாதார அதிகாரி இளங்கோ, வருவாய் ஆய்வாளர் தேவகி, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ், பால சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம்.

இதேபோல்,பள்ளிபாளையத்தில் நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சர்மிளா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த திடீர் சோதனை குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், ``நாமக்கல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான போதைவஸ்துகள் மற்றும் காலாதியான உணவுபண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தின் பிறபகுதிகளான திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப்ª பாருட்கள் மற்றும் காலாவதியான உணவுபண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன`` என்றார்.

 


Page 222 of 519