Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நாமக்கல்லில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை, காலாவதி பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 15.06.2010

நாமக்கல்லில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை, காலாவதி பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், ஜூன் 14:நாமக்கல் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை ஒரே நாளில் நடந்த சோதனையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை மற்றும் காலாவதி பொருட்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

÷தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்கவும், காலாவதிப் பொருட்களை தடை செய்யும் வகையில் ஆட்சியர் சகாயம் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் நாமக்கல்லில் சோதனையில் ஈடுபட்டனர்.

÷ இதேபோல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் என அனைத்துப் பகுதிகளிலும் அநதந்தப் பகுதி வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் இணைந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், பரமத்தி வேலூர் பகுதியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலும், நாமக்கல்லில் ரூ. 5 லட்சம் மதிப்பிலும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

÷ நாமக்கல்லில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. தகவலறிந்து வடமாநில வியாபாரிகள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ÷வணிகர் சங்க நிர்வாகிகளும் வந்து மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடையேதுமில்லை என வியாபாரிகள் கூறினர்.

÷ தடையாணை இல்லை என்ற அரசு உத்தரவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து விளக்கம் பெற்று வந்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் வழங்குவதாக து. ரவீந்திரன் கூறினார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தின் ஒரு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டு பூட்டப்பட்டது.

ஒரே நாளில் ரூ. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாநகராட்சியில் தொற்று நோய் தடுப்பு அதிகாரிகள் ஆலோசனை

Print PDF

தினகரன் 14.06.2010

மாநகராட்சியில் தொற்று நோய் தடுப்பு அதிகாரிகள் ஆலோசனை

பெங்களூர், ஜூன் 14:கொசு மூலம் பரவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத் தினர்.

தென்மேற்கு பருவமழை, மாறிவரும் தட்பவெப்பம் போன்றவற்றால் பெங்களூரில் சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகிறது. கடந்த ஜனவரி முதல் மே இறுதிவரை 60 பேர் டெங்கு மற்றும் 23 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசோக்நகர், ஜெய்பீம்நகர், ஈஜிபுரா, விவேக்நகர், நீலசந்திரா, ஹொஸ்கெரேஹள்ளி, இட்டமடு, மகாதேவபுரா, பேட்ராயனபுரா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகரித்துள்ளனர். இப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளின் கூட்டம் பெங்களூர் மாநகராட்சி ஆணையர் பரத்லால்மீனா தலைமையில் நடந்தது.

கொசுவால் பரவும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை தடுக்க தவறிய அதிகாரிகளை பரத்லால்மீனா கண்டித்தார். வெள்ளநீர் வடிகால், ஏரிகள், குளங்களை தூர்வாரி சுத்தமாக வைத்திருக்குமாறு அதிகாரிகளை ஆணையர் கேட்டுக்கொண்டார். கொசு இனப்பெருக்கம் அதிகமுள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் மருந்து தெளிக்குமாறும், தொற்றுநோய்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.கொசுஇனப் பெருக் கத்தை தடுக்க புகைஅடிப்பது,மருந்து தெளிப்பதை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,

கொசு ஒழிப்புப்படையில் சுமார் 100 பேர் உள்ளனர். கொசு ஒழிப்புமருந்து தெளிப்பான்களை புதிதாக வாங்க இருக்கிறோம். பொதுமக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீட்டுக்குவீடு சென்று பிரசாரம் செய்யவிருக்கிறோம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சிலரை இப்பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்.’ என்றார்.

 

மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

Print PDF

தினகரன் 14.06.2010

மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

பெங்களூர், ஜூன் 14:கழிவு நீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால் கால்வாய்கள் அடைத்துகொண்டு ஒழுகாமல் இருப்பதற்கும், இதனால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வழங்கல் மற்றும் வினியோகத்துறையின் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மழை காலங்களில் சாலைகளில் உள்ள மேன்ஹோள், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடுவது, மழை நீர் தேங்குவது போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்படாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் சீர் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஜனவரி முதல் 7,300 மேன்ஹோள்களின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மழைநீர் சரளமாக செல்வதற்கும், கழிவுநீர் தடையின்றி செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதற்காக ஜெட்டிங் மிஷன்கள் பயன்படுத்தி 75 மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் எடுக்கப்பட்டது. பிரச்னைகளை சமாளிக்க கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். மல்லேஸ்வரம் &22945240, ஒசஹள்ளி&22945188, ஜெயநகர்&22945150, இந்திராநகர்&22945183 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Page 223 of 519